தடைச்சட்டம் அமுலில் இல்லை – அனுமதிப் பத்திரம் பெற்றால் குர்பானி கொடுக்கலாம் – ஏ.பி.எம். அஷ்ரப்

  • 10

மாடறுப்பு தடைச்சட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவே அனுமதிப்பத்திரம் பெற்றால் குர்பானி கொடுக்கலாம் என்று முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ரப் தெரிவித்தார்.

மாடுகள் அறுப்பதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சு, அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அறிவித்துள்ளது என்று வெளியாகிய செய்தியை மேற்கோள்காட்டி பணிப்பாளரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கூட்டுக் குர்பான் பள்ளிவாயல்களில் கொடுக்கும் பள்ளிகள் 100 ஐ விட குறைவு என்றாலும் அவர்களில் பலர் சென்ற வருடம் மாற்று வழிகளை கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டதாகவே நமக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளன என்று தெரிவித்தார்.

எஞ்சிய சில பள்ளிவாயல்களும் பல சிரமங்களுக்கு மத்தியில் என்றாலும் இவ்வருடம் மாற்று வழிகளை ஏற்பாடு செய்து விட்டதாகவும் அறியக் கிடைக்கிறது.

இதற்கு மாற்றமான செய்திகள் இருந்தால் தெரிவிக்குமாறு ஏ.பீ.எம். அஷ்ரப் தெரிவித்தார்.

Ibnu Asad

மாடறுப்பு தடைச்சட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவே அனுமதிப்பத்திரம் பெற்றால் குர்பானி கொடுக்கலாம் என்று முஸ்லிம் கலாச்சாரத் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ரப் தெரிவித்தார். மாடுகள் அறுப்பதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…