தந்தையின் அழகிய உபதேசம்

  • 8

என் அன்பு மகனே! மனிதன் இறைவனது அழகான படைப்பு. மனிதனை மனிதனாகப் பார். பிறர் உன்னை புனிதனாக நோக்குவர். எவரையும் தாழ்த்தி விடாதே. எவரையும் கேவலம் செய்யாதே. பெரியோருக்கு மரியாதை செய்.  சிறியோர் உனக்கு மரியாதை செய்வர். நீ பிறரை நேசி. உன்னை இறைவன் நேசிப்பான்.

மகனே! பிறரில் குறை காண்போருக்கு தன் குறை விளங்குவதில்லை. பிறர் குறையை மறைத்து விடு. உன் குறையை இறைவன் மறைப்பான். பிறர் குறைகளை வெளிப்படுத்துபவர். தன் குறைகளால் கேவலப்படுவார். பொறாமைக்காரன் அழிவை அடைவான். பெருமைக்காரன் இழிவை அடைவான். பிறருக்காக குழி தோண்டுபவன் அதே குழியில் வீழ்வான். பிறரை வாழ வை. இறைவன் உன்னை வாழ வைப்பான்.

மகனே! உன் சந்தோஷத்துக்காக பிறரை துன்பத்தில் தள்ளி விடாதே. பண்பாடுதான் உன் அடிப்படை. ஒழுக்கம்தான் உன் வாழ்வு. பணிவுதான் உன் வெற்றி. நீ நேசிப்பவை அனைத்தும் இன்பம் தருவதுமில்லை. நீ வெறுக்கும் அனைத்தும் துன்பம் தருவதுமில்லை. இறைவன் மீது திருப்தி கொள். உலகமும் இனிக்கும் மறுமையும் இனிக்கும்.

பாஹிர் சுபைர்

என் அன்பு மகனே! மனிதன் இறைவனது அழகான படைப்பு. மனிதனை மனிதனாகப் பார். பிறர் உன்னை புனிதனாக நோக்குவர். எவரையும் தாழ்த்தி விடாதே. எவரையும் கேவலம் செய்யாதே. பெரியோருக்கு மரியாதை செய்.  சிறியோர் உனக்கு…

என் அன்பு மகனே! மனிதன் இறைவனது அழகான படைப்பு. மனிதனை மனிதனாகப் பார். பிறர் உன்னை புனிதனாக நோக்குவர். எவரையும் தாழ்த்தி விடாதே. எவரையும் கேவலம் செய்யாதே. பெரியோருக்கு மரியாதை செய்.  சிறியோர் உனக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *