தனிமை

  • 7

தனிமை
நான் எனக்காக
தேடிக்கொண்ட
துணை…

தனிமை சிறிது
வித்தியாசமானது
தான்…
நாமே அதை
ஏற்படுத்திக்
கொண்டால்
நமக்கு
இனிமை…
பிறர் கொடுத்தால்
தான் நமக்கு
கொடுமை – என்பார்கள்…

ஆனால்,
எனக்கோ அது தான்
என்றும் பசுமை….
ஏனெனில்,

பல
பிரச்சினைகளுக்கு
தீர்வு கிடைப்பதும்…
பிரச்சினைகள்
வர விடாமல்
தடுப்பதும்…
நம் மனதை
காயப்படுத்த
அங்கு
யாரும் இல்லை…

என்பதனாலோ?
என்னவோ?
எனக்கு
ரொம்பவும் பிடிக்கும்…

என்னை சுற்றி
ஆயிரம்  உறவுகள்
இருந்தாலும்,
நான்
விரும்பி-நம்பி
ஏற்றுக் கொள்ளும்
ஓர்  உறவு
தனிமை மட்டுமே!

தனிமை
என்றும் தனித்து
இருந்ததில்லை…
என்றும்,
துணையாக நான்
இருந்ததனால்…

Binth Abdhul Faleel
SEUSL
BA®️


தனிமை நான் எனக்காக தேடிக்கொண்ட துணை… தனிமை சிறிது வித்தியாசமானது தான்… நாமே அதை ஏற்படுத்திக் கொண்டால் நமக்கு இனிமை… பிறர் கொடுத்தால் தான் நமக்கு கொடுமை – என்பார்கள்… ஆனால், எனக்கோ அது…

தனிமை நான் எனக்காக தேடிக்கொண்ட துணை… தனிமை சிறிது வித்தியாசமானது தான்… நாமே அதை ஏற்படுத்திக் கொண்டால் நமக்கு இனிமை… பிறர் கொடுத்தால் தான் நமக்கு கொடுமை – என்பார்கள்… ஆனால், எனக்கோ அது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *