தராவீஹ் தொழுகையில் அல்-குர்ஆனைப் பார்த்து ஓதலாமா?

  • 97

இவ்வருடத்தில் தராவீஹ் தொழுகையை வீட்டில் தொழவேண்டிய ஒரு சூழல் அனைவருக்கும் ஏற்பட்டிருப்பதால் நீண்ட நேரம் நின்று தொழத்தக்கதான பெரிய அத்தியாயங்கள் மனனமில்லாதவர்கள் அல்குர்ஆனை பார்த்து தொழுவதற்கு அல்லது தொழுவிப்பதற்கு முடியுமா? என்று கேட்கின்றனர். இது தொடர்பான மார்க்கத்தீர்ப்பை அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் நோக்கில் சுருக்கமாக பதிவிடுகின்றேன்.

தராவீஹ் தொழுகைகளில் முஸ்ஹப்பினை அல்லது கையடக்கத்தொலைபேசியில் உள்ள அல்குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழுவது அல்லது தொழுவிப்பது ஆகுமானதாகும் என்பதே பெரும்பான்மையானோரின் கருத்தாகும்.

இதற்கு ஆதாரமாக ஆயிஷா நாயகி அவர்களிடம் ஒரு அடிமையிருந்தார், அவர் றமழான் காலத்தில் அல்குர்ஆனைப் பார்த்து ஓதி ஆயிஷா நாயகி அவர்களுக்கு இமாமத் செய்யக்கூடியவராக இருந்தார் என்ற விடயம் புகாரியில் (1/245) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்னு ஷிஹாப் அவர்கள் கூறுகிறார்கள்: எங்களில் காணப்பட்ட சிறந்தவர்களும் றமழானில் அல்குர்ஆனைப்பார்த்து ஓதித்தொழக்கூடியவர்களாக இருந்தனர் -(அல் முதவ்வனா)

இமாம் நவவி: ஒருவர் அல் குர்ஆனை மனனம் செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும் அல்குர்ஆனைப் பார்த்து ஓதித் தொழுதல் தொழுகையை பாழாக்காது. ஆனாலும் சூரத்துல் பாதிஹாவை மனனம் செய்யாதவராக இருந்தால் அவர் கட்டாயம் பார்த்து ஓத வேண்டும். சிலபோது முஸ்ஹபின் பக்கங்களை புரட்டினாலும் தொழுகை பாழாகாது. இதுதான் எங்களது கருத்தும், இமாம் மாலிக், அபூ யூஸூப், அஹ்மத், முஹம்மத் போன்றோர்களது கருத்துமாகும்.(அல் மஜ்மூஃ)

என்றாலும் அல்குர்ஆனை சுமந்துகொண்டு ஓதித்தொழும்போது அதன் தாள்களைப் புரட்டும்போதும் அதிக அசைவுகள் இடம்பெறுவதால் அது தொழுகையைப் பாழ்படுத்தும் எனக்கருதி இதனை சிலர் விரும்புவதில்லை. ஆனாலும் நபியவர்கள் தனது பேத்தியான உமாமா அவர்களை சுமந்து கொண்டு தொழுகை நடாத்தியுள்ளார்கள் எனும் விடயம் ஆதாரபூர்வமானதாகும். மேலும் குழந்தை ஒன்றை சுமந்து தொழுகையில் ஈடுபடும்போது ஏற்படும் அசைவுகளைவிட அல்குர்ஆனை (முஸ்ஹபினை) சுமந்து தொழுவது அசைவுகள் குறைவாகவே காணப்படும் என்ற வகையில் முஸ்ஹபினை சுமந்து தொழ முடியும் எனச்சுட்டிக்காட்டுகின்றனர்.

மேற்சொன்ன விடையங்களில் இருந்து அல்குர்ஆனை (முஸ்ஹபினைப்) பார்த்து அல்லது கையடக்கத் தொலைபேசியினைப்பார்த்து ஓதித் தொழுவது ஆகுமானது என்பதோடு அச்செயற்பாடானது தொழுகையின் நன்மைகளைக் குறைக்காது என்பதனையும் விளங்கிக் கொள்ளலாம்.

அல்லாஹ்வே அறிந்தவன்!

றிஸான் சுபைதீன் (நளீமி)

இவ்வருடத்தில் தராவீஹ் தொழுகையை வீட்டில் தொழவேண்டிய ஒரு சூழல் அனைவருக்கும் ஏற்பட்டிருப்பதால் நீண்ட நேரம் நின்று தொழத்தக்கதான பெரிய அத்தியாயங்கள் மனனமில்லாதவர்கள் அல்குர்ஆனை பார்த்து தொழுவதற்கு அல்லது தொழுவிப்பதற்கு முடியுமா? என்று கேட்கின்றனர். இது…

இவ்வருடத்தில் தராவீஹ் தொழுகையை வீட்டில் தொழவேண்டிய ஒரு சூழல் அனைவருக்கும் ஏற்பட்டிருப்பதால் நீண்ட நேரம் நின்று தொழத்தக்கதான பெரிய அத்தியாயங்கள் மனனமில்லாதவர்கள் அல்குர்ஆனை பார்த்து தொழுவதற்கு அல்லது தொழுவிப்பதற்கு முடியுமா? என்று கேட்கின்றனர். இது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *