தாயிற்கு சமர்ப்பணம்

  • 24

பத்து மாதம் என்னை
வயிற்றில் சுமந்து
இன்று வரை என்னை
நெஞ்சில் சுமப்பவளே.

இருட்டறை உன்
கருவறையில் தூங்கினேன்
என் மேனி கசங்க இல்லையே
மீண்டும் கிடைக்காதா?
உன் கருவறையில் நான் தூங்க

மரணவலி நீ உணர
என் அழு குரல் கேட்டதும்
முத்தமிட
உன் வலியே பறந்த சுகம்
நீ உணர்ந்தாயே

உன் வயிற்றில் நான் இருந்தபோதும்
உன் பசி ஆசை மறந்தாய்

நான் உன் கை கிடைத்தும்
அதே பத்தியம் காக்கிறாய்
என் வாழ்க்கை உயர்வு பெற

மூணு வாய் சோறு இருக்கையில்
அதை நான் புசிக்க
எனக்கு பசிக்கவில்லை
என்று செய்த தியாகம்
இன்னும் எத்தனையோ

சோகங்கள் நான் உணர
ஏணி படிகள் இது தான்
என்று ஏறி செல் மகனே என்ற
உன் வாசகம்
இன்று உச்சம் தொட வைத்தது.

உனக்கு பின் என்னை சுமப்பவளே
என் தாய் கருவறைக் காவல்
உன்னிடம் கிடைக்காது என்று
எனக்கு தெரியும்.

ஆனால் உன் நெஞ்றையில்
சுமப்பாய் என நினைக்கின்றேன்
மீண்டும் ஒரு குழந்தையாய்.

KLM. Akram
Sammanthurai
SEUSL.

பத்து மாதம் என்னை வயிற்றில் சுமந்து இன்று வரை என்னை நெஞ்சில் சுமப்பவளே. இருட்டறை உன் கருவறையில் தூங்கினேன் என் மேனி கசங்க இல்லையே மீண்டும் கிடைக்காதா? உன் கருவறையில் நான் தூங்க மரணவலி…

பத்து மாதம் என்னை வயிற்றில் சுமந்து இன்று வரை என்னை நெஞ்சில் சுமப்பவளே. இருட்டறை உன் கருவறையில் தூங்கினேன் என் மேனி கசங்க இல்லையே மீண்டும் கிடைக்காதா? உன் கருவறையில் நான் தூங்க மரணவலி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *