திருமணத்தை எதிர் நோக்கியவர்களுடன் ஒரு சில நிமிடங்கள்

  • 369

திருமணத்திற்கு முந்திய காதல் தொடர்பு, கணவன்- மனைவி உறவு. பெற்றோர்- பிள்ளை உறவு, குடும்ப – சமூக உறவு போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகள், சிக்கல்களைக் குறைத்து குடும்ப நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு உதவும் நடவடிக்கைகளையே குடும்ப உளவளத்துணை என அழைக்கின்றோம். இந்தவகையில் குடும்ப உளவளத்துணையை மூன்று பிரிவுகளாக நோக்கலாம்.

i. திருமணத்திற்கு முந்திய உளவளத்துணை (Pre marital counseling)

திருமணம் முடிப்பதற்கு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இளைஞர்கள், யுவதிகளை திருமணத்தின் பின்னர் கணவன் அல்லது மனைவி என்ற நிலையில் வைத்து தமது பொறுப்புக்களையும், கடமைகளையும் ஏற்று நடப்பதற்கு தயார்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

பொதுவாக இளைஞர் யுவதிகள் தற்போது பௌதீகரீதியான கவர்ச்சிகளை மையமாகக்கொண்ட திருமண வாழ்க்கையையே பெரிதும் விரும்பி ஆரம்பிக்கின்றனர். அதாவது திருமணம் நடக்கும் திகதி, இடம், ஆடைகள், அலங்கார வேலைப்பாடுகள், அழைப்பிதழ்கள் போன்றவற்றிலேயே கூடிய கவனம் செலுத்துகின்றனர். ஆனால் திருமணத்தின் அடிநாளமாக அமையும் ஆத்மீகப்பிணைப்பு, பரஸ்பர புரிந்துணர்வு, ஒருவரையொருவர் மதித்தல், அர்ப்பணம், அன்பு, இரக்கம் போன்றவற்றில் கவனம் செலுத்துவதில் தவறிவிடுகின்றனர்.

எனவே திருமணத்திற்கு முந்திய உளவளத்துணையின் மூலம் திருமணத்தின் அடிநாளமாக அமையும் விடயங்களை தெளிவுபடுத்துவதனூடாக கணவனும் மனைவியும் தமது கடமைகளையும் பொறுப்புக்களையும் சரியாக மேற்கொள்வதற்கு அவர்களை உடல், உள ரீதியாக தயார்படுத்துகின்றது.

ii. திருமண உளவளத்துணை (Marital and couple counseling)

திருமணத்தின் பின்னர் கணவன் மனைவியாக வாழ்க்கை நடாத்தும்போது வாழ்க்கைத்துணையின் தேவைகள், கடமைகள், உணர்வுகள், மனவெழுச்சிகள், திறமைகள், பலவீனங்கள் பேன்றவற்றை புரிந்துகொள்ளாதபோது ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சினைகள், சிக்கல்களைத் தீர்த்து வெற்றிகரமாக வாழ்க்கையை கொண்டு நடாத்துவதற்கு அவர்களிடத்தில் காணப்படும் வாழ்க்கைத்திறன்களை (Life Skills) விருத்தி செய்வதற்கு உதவுவதை திருமண உளவளத்துணை எனலாம்.

iii. பாலியல் உளவளத்துணை (Sexual counseling)

பாலியல் இனவிருத்தி, சுகாதாரம், பாலியல் கோலாறுகள் போன்றவற்றினால் ஏற்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவுகின்ற நடிவடிக்கைகளை பாலியல் உளவளத்துணை எனக்குறிப்பிடலாம்.

மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு கட்டங்களிலும் ஏற்படுகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளால் தற்போது குடும்ப ஒழுங்கு கட்டமைப்பு சீர்குலைந்துள்ளதைக் காணலாம். பொதுவாக உளவளத்துணை மூலம் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்னர் முற்தடுப்பு நடவடிக்கைகளை ஏற்படுத்துவதும் பிரச்சினைகளுக்குற்பட்ட குடும்பங்களுக்கு சிகிச்சை வழங்குவதும் மிகவும் முக்கியமாகும்.

இவ்வாறான குடும்பங்களுக்கு உளவளத்துணையாளர் சிகிச்சை வழங்கும்போது சில குடும்பங்களின் பிரச்சினைகளின்போது ஓர் அனுசரணையாளராகவும், இன்னும் சில குடும்பங்களைப் பொறுத்தவரை ஓர் நடுவராகவும், வேறு சில குடும்பங்களின் பிரச்சினைகளைப் பொறுத்தவரையில் ஓர் சிகிச்சையாளராகவும் இருந்து அக்குடும்பங்களை புனர் நிர்மாணம் செய்து மீளக்கட்டியெழுப்ப துணைசெய்வார்.திருமணத்திற்கு முன்னர் வழிகாட்டல் பெரும் கலாச்சாரம் முறைசார் முறையில் வளர்ச்சி அடையச்செய்வது நமது சமூக தேவை.

தம்பதிகளிற்கான உளவளத்துணை செயன்முறைகளின் மூலம் ஆரோக்கியமானதும் , மகிழ்ச்சிகரமாணதுமான குடும்ப அமைப்பு தோற்றுவிப்பதுடன் திருமணத்திற்கு தயார் படுத்துதல் அல்லது பிரச்சினை வருமுன் தவிர்த்தல், பிரச்சினை தீர்த்தல், திருமண உறவின் மூலம் அதிஉச்ச மகிழ்ச்சியை அடைதல் போன்ற விளைவுகளை தோற்றுவிப்பது அவசியமடைகிறது. இதன் மூலமே உளவளத்துணை செயன்முறையானது பூரண இடையீட்டுத்திட்டமாக குடும்ப பிரச்சினைகளுக்கு அமையும்.

அதனடிப்படையில் திருமணம் தொடர்பான உளவளத்துணை செயற்பாடுகளை தொகுத்து நோக்கும் சமயத்தில் பொதுவாக மூன்று அங்கங்களை நோக்கலாம்.

  1. Premarital counseling ( திருமணத்திற்கு முந்தியஉளவளத்துணை)
  2. Marital counseling ( திருமண உளவளத்துணை)
  3. Sexual counseling ( பாலியல் உளவளத்துணை)

இம்மூன்று செயன்முறைகளின் மூலம் பிரதானமாக உளவளத்துணை செயன்மறையில் தம்பதியினர் உள்வாங்கப்படுகின்றனர்.

கலாச்சார விழுமியங்கள் அடிப்படையிலான நாடு என்ற வகையில் இலங்கையின் முக்கிய சமூக முகவர் அங்கமாக குடும்பம் கானப்படுகிறது. இலங்கையின் பண்டைய வரலாறு தொடக்கம் குடும்பம், திருமனம் என்பது இருக்கமான உறவு நிலையாகும் சமூக அங்கீகார செயன்முறையாகவும் நோக்கப்பட்டு வருகிறது. ஆனால் அன்றிய காலகட்டத்தில் திருமண உறவு விரிசல் அதிகரிக்கின்றமை என்பவற்றின் அடிப்படையான அவதானத்தில் தயார் படுத்தப்படாத தம்பதியினர் காரணமாக இணங்காட்டப்படுகின்றர். இதனடிப்படையில் Premarital counseling ( திருமணத்திற்கு முந்தியஉளவளத்துணை) தொடர்பான முறைப்படுத்தப்பட்ட அவதானம் சமூக, சமய தலைமைகள், குடும்ப தலைமைகள், குடும்ப உறுப்பினர்கள் என பலசாராருக்கும் அதிகம் அவசியமடைகிறது.

Pre Marital Counselling ( திருமணத்திற்கு முந்தியஉளவளத்துணை) என்பது திருமணம் முடிப்பதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள், யுவதிகளை திருமணத்தின் பின்னர் கணவன் அல்லது மனைவி என்ற நிலையில் வைத்து தமது பொறுப்புக்களையும் , கடமைகளையும் ஏற்று நடப்பதற்கு உடல், உள ரீதியில் தயார் படுத்துவதே ஆகும்.

திருமணம் என்பது அழகாகத் திட்டமிட்டு முடிந்த அளவுக்கு தகுதியுடன் செய்யும் ஒரு கருத்துள்ள நிகழ்வாகும். ‘A Practical wedding: Creative Solutions for Planning a beautiful affordable and Meaningful Celebration’ என்ற அரிய வரைவிலக்கணத்தை Meg knee என்ற அறிஞர் வழங்கியுள்ளார். அதாவது திருமணம் என்பது திட்டமிட்டு தயார்படுத்தப்பட்டதன் பின் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய ஒரு நிகழ்வு. அதற்கான தயார் படுத்தலே திருமணத்திற்கு முன்னறான உளவளத்துணை ஆகும்.

“திருமணத்திற்கு முன்னைய உளவளத்துணை என்பது அங்கீகரிக்கப்பட்ட உளவளத்துணையாளர்களின் மூலம் திருமணத்திற்கு தயாராகும் தம்பதியினரிற்கு உதவும் ஒருவகை உளவளத்துணை கோட்பாடாகும் (type of therapy) ” என Mayo Clinic எனும் இணைய சிகீட்சைப்பக்கம் வரையறை செய்கிறது.

இச்செயன்முறையானது ஆளிடை தொடர்பாடல் விருத்தி, தகவல் பரிமாற்றம், தவாறான தகவல்களை சீரமைத்தல், மதிப்பீடு செய்தல் போன்ற இலக்குகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் போது தொடர்பாடல் மேன்பாடு, மோதல் தீர்வு, திருமண எதிர்பார்ப்பு, ஆளுமை, பொருளாதாரம், பாலியல் எதிர்பாரப்பு, பிள்ளைவளர்ப்பும் குழந்தைகளும் , காதல் வங்கி, ஆன்மீகம் போன்ற விடயங்கள் உள்ளடக்கப்படும்.

இதன் போது Finances (பொருளாதாரம்), Communication (தொடர்பாடல்), Beliefs and values (நம்பிக்கைகளும் விலுமியங்களும்), Roles in marriage (திருமணத்தில் பாத்திரங்களும் வகிபங்கும்), Affection and sex(கவர்ச்சியும் காமமும்), Desire to have children (பிள்ளைக்கு தயாராகல்), Family relationships (குடும்ப உறவு முறைகள்) Decision-making (தீர்மாணங்கள் எடுத்தல்), Dealing with anger (கோபத்தில் உள்ளவருடன் தொடர்பாடல்), Time spent together (இணைந்து வாழ்வதற்கு நேரம் ஒதுக்குதல்) போன்ற பல தலைப்புக்களில் தம்பதியினர் அறிவூட்டப்படுவதுடன் தயார்படுத்தப்படுவர்.

இதனை செயற்படுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக American Association for Marriage and Family Therapy’, (AAMET) காணப்படுகிறது. இது உதவி வேண்டுபவர்களுக்கு சற்று வித்தியாசமான முறையில் உதவி நடவடிக்கையை மேற்கொள்கிறது. இந்த நிருவணத்தின் ஆலோசனையில் கீழ்காணும் விடயங்கள் முக்கியத்துவப்படுத்தப்படுகிறது.

  • பொருளதார நிலை (Finances)
  • தொடர்பாடல் (Communication)
  • நம்பிக்கைகளும் விழுமியங்களும் (Beliefs and Values)
  • பாலியல் கவர்ச்சி (Affection and Sex)
  • குடும்ப உறவு (Family relationships)
  • தீர்மானம் எடுத்தல் (Decision Making)
  • கோபம் பற்றிய கருத்துக்கள் (Dealing with anger)
  • இருவரும் ஒன்றாக இருக்கும் நேரம் (Time spent together)
  • கல்வியும் அனுபவமும் (Education and experience)
  • வேலை செய்யும் சூழ்நிலை (Office Treatment)

கனடிய, அமெரிக்க மக்கள் திருமணத்திற்கு முன் ஒரு அங்கீகரிக்கப்பட்ட உளவளத்துணையாளரை நாடி ஒரு பரீட்சை எழுதி அங்கீகார சான்றிதழுடன் திருமனம் செய்யும் அளவிற்கு இத்துறை வளர்ச்சியடைந்துள்ளது. இவனது முக்கியத்துவத்தை பல வியூகங்களில் நோக்கலாம்

  • பல கலாச்சாரத்தினதும் வலியுருத்தப்பட்ட விடயமாக இது காணப்படுகிறது.

பொதுவாக பல கலாச்சாரமும் இது போன்ற திருமணத்திற்கு தயாராகுதல் என்ற நிலையை அதிகம் வலியுறுத்துகின்றன. புத்த மதத்தினர் திருமணத்திற்கு முன்னர் தேவாலயத்திற்கு தரிசித்து திருமணம் தொடர்பான ஆலோசனைகளை பெரும் வழக்காரு காணப்படுவதுடன் புத்தரும் ஒரு ஆடவன் தனது மனைவியிற்கு உபகாரம் செய்வதற்கான ஜந்து காரணிகளையும் அடையாளமிடுகின்றார் . மேலும் சிகாலோவாத சுத்ததில் ஒரு மனிதன் தவிர்க்க வேண்டிய 14 பிரச்னைக்குறிய நடவடிக்கைகளை அடையாளம் காட்டி கணவனது பிரதான 5 கடமைகளையும் மனைவியின் கடமைகளையும் அறிவூட்டுகிறது . மேலும் இஸ்லாமிய மதத்திலும் நபிகள் நாயகம் அவர்கள் மனைவியை தெரிவு செய்வதற்கான காரணம் என்பவற்றை நான்கு விடயங்களாக பட்டியலிடுகிறார். பொதுமையாக அனைத்து கலாச்சாரமும் வேண்டிநிற்கும் விடயமாக திருமணத்திற்கு முன்னைய ஆலோசனை அமைகிறது.

  • அதிகரித்து வரும் விவாகரத்தினை குறைப்பதற்கு.

இலங்கையில் 2015 ஆம் ஆண்டு ஆண்டில் நடைபெற்ற ஆய்வொன்றின் பிரகாரம் 175,000 திருமணம் வருடாந்தம் நிகழ்வதாகவும் அவற்றில் 50 % விவாகரத்து பெருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாளாந்தம் 400 பேர் விவாகரத்து வேண்டி விண்ணப்பித்தாக ஒரு புள்ளிவிபரம் கூருகிறது. மேலும் இலங்கையில் 1.5% குடிமக்கள் விவாகரத்தில் ஈடுபட்டவர்கள் காணப்படுவதாக 2018 இல் ஒரு புள்ளிவிபரம் குறிப்பிடுகிறது.

திருமணத்திற்கு முற்பட்ட உளவளத்துணை மேற்கொள்வதன் மூலம் தம்பதியினர் தமது பொருப்புக்கள், கடமைகள் , தீர்மானம் எடுத்தல் , பொருத்தப்பாடு பார்த்தல் என்பவை தொடர்பிலான அறிவும் திறனும் மேன்படுத்தப்பட்ட நிலையத்தில் திருமண பந்தத்தில் இனைவர். இதன் மூலம் திருமண வாழ்க்கையை ஆரோக்கியமாக கொண்டு செல்வதுடன் பிரச்சினை தீர்க்கும் (conflict resolution ) திறனும் வளர்க்கப்பட்டிருக்கும் . இதன் மூலம் பிரச்சினைகளை முறையாக தீர்ப்பதன் நாட்டின் விவாகரத்து விகிதம் குறையும்.

  • கணவன் மனைவிக்கு மத்தியிலான விருப்பு வெறுப்புக்களை பரஸ்பரம் புரிந்து கொள்வதற்கு.

மேலைத்தேய நாடுகளின் கலாச்சாரத்தில் திருமணத்திற்கு முன்னரான சந்திப்பு , காதல் தொடர்பு தொடக்கம் திருமணத்திற்கு முன்னைய உடலுறவு ( pre marital sex) வரையில் ஏற்புடையதாக பொது சனத்திற்கு மத்தியில் மாறியுள்ளது. ஆனால் நமது கலாச்சாரத்தின் அடிப்படையில் காதல் மற்றும் திருமணத்திற்கு முன்னைய தனிமையிலான சந்திப்புக்கள் கலாச்சார சீர்கேடாகவே நோக்கப்படுகின்றன. இதன் மூலம் நிச்சிய திருமண ( proposed marriage) தம்பதியினரின் முன்கூட்டிய அறிமுகமின்மை காரணமாக இருவருக்கு மத்தியிலான விருப்பு, வெறுப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு இன்மை நிகழ்கிறது.

உளவியல் நிபுணர் john Gary தனது Man are from Mars , women are from Venus எனும் நூலில் குறிப்பிடுவது போன்று கணவன் , மனைவிக்கு மத்தியிலான விருப்பு வெருப்புக்கள் வேறுபட்டு காணப்படுகின்றது. இந்நிலையில் தமக்கிடையே பொதுவான விருப்பு, வெறுப்புக்கள் (commom like and dislike ) தொடர்பான புரிந்துணர்வுடன் திருமண வாழ்வில் நுலைவது அவசியமடைகிறது. இதற்கு மதரீதியாக ஒரு நெருக்கமானவரின் (மஹ்ரமி) முன்னிலையில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பமும் உண்டு. இந்த செயல்முறையை திருமணத்திற்கு முன்னைய உளவளத்துணை( Premarital counseling) சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறது.

  • சிறந்த தொடர்பாடல் விருத்திக்கு

தொடர்பால் இன்றி ஆரோக்கியமான உறவு கட்டியெழுப்பப்பட முடியாது. கணவன் மனைவிக்கு மத்தியிலான ஆரோக்கியமான தொடர்பாடலே ஆரோக்ககியமான தம்பதியினர் உறவினை உருவாக்கும். தொடர்பாடல் எனும் பட்சத்தில் வெரும் வாயாடல் மாத்திரமின்றி சைக்கினை, மற்றவர் பேசுவதை கேட்டல் (Active Listening), கண் தொடர்பு (Eye contact) போன்ற பல விடயங்களும் உள்ளடக்கப்படும். பொதுவாக ஆண்களின் தொடர்பாடல் முறையும் பெண்களின் தொடர்பாடல் முறையும் அதிகம் வேருபாடானவை. ஓர் ஆண் நாளொன்றிக்கு 5000 வார்த்தைகள் கதைத்தால் ஒரு பெண் 20000 வார்த்தைகள் கதைப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

இருவருக்கு மத்தியில் அழகானதும், அன்புகரமானதும், சமயோசிதமானதுமான உரையாடல் மேம்பாட்டிற்கும் one-on-one therapy போன்ற அமர்வுகளின் மூலம் திருமணத்திற்கு முன்னைய உளவளத்துணை( Premarital counseling) சிறந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கப்படுகிறது.

  • பொருளாதார ரீதியான தயார்படுத்தல் மற்றும் தகுந்த எதிர்பார்ப்பு.

பொருளாதாரரீதியாக மனைவி கணவனிடம் பரந்த எதிர்பார்ப்புக்கள் வைப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம் உன்டு. குறித்த எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாத அல்லது நிறைவேற்றிய சந்தர்ப்பத்தில் திருப்தி அளவு அதிகம் குறைவாக காணப்படும் சமயத்தில் expected need (எதிர்பார்ப்பு) satisfaction (திருப்தி) க்கு மத்தியில் இடைவெளி (gap) உண்டாவதாகவும் அந்த இடைவெளியின் அதிகரிப்பில் மோதல்/ முரண்பாடுகள் தோன்றுவதாகவும் Davies என்ற அறிஞர் குறிப்பிடுகிறார்.

இவரது குறிப்பின் பிரகாரம் மனைவியின் அதிமிஞ்சிய எதிர்பார்ப்பு திருப்தி தராத சமயத்தில் முரண்பாடுகள் உருவாகுவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். இதனை தடுப்பதற்கு மனைவிக்கு துணையின் பொருளாதார நிலை தொடர்பான உன்மை நிலையை திருமணத்திற்கு முந்திய உளவளத்துணையின் மூலம் தெரியப்படுத்துவது தகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்த வழிவகுக்கும். இதன் மூலம் எதிர்பார்ப்பு – திருப்திக்கு மத்தியிலான இடைவெளி (gap) பரந்த அளவில் உருவாகாது பேனலாம்.

  • பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்கு தயார்படுத்தல்.

Premarital counseling (திருமணத்திற்கு முந்தியஉளவளத்துணை) மூலம் தம்பதியினர் தொடர்பான மதிப்பீட்டின் அடிப்படையில் அனுபவமும் அங்கீகாரமும் உடைய உளவளத்துணையாளறிக்கு ‘கருதுகோல்’ வைப்பதற்கு முடியுமாக அமையும். அதன் மூலம் தம்பதியினர் முகம் கொடுக்க இருக்கும் பிரச்சினைகளையும், பொதுவான திருமணம் தொடர்பான பிரச்சினைகளையும் தம்பதியினர் மத்தியில் முன்வைப்பதன் மூலம் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அதற்கான மாற்றீட்டுத்திட்டங்களை வடிவமைக்கவும் முடியுமாக அமையும்.

  • குடும்ப வாழ்விற்கு தேவையான திறன், அறிவை விருத்திக்கு.

திருமண வாழ்க்கை என்பது ஒரு கலை. அதற்கு அறிவும் , திறனும் அதிகம் அவசியமடைகிறது. இது Premarital counseling (திருமணத்திற்கு முந்தியஉளவளத்துணை) செயல்முறையில் தம்பதிகளுக்கு உளவளத்துணையாளரின் மூலம் திறன் பயிற்சியும் அறிவு விருத்தியும் ஏற்படுத்தப்படும்.

  • திருமணத்திற்கு முற்பட்ட பிரச்சினைகளின் தாக்கம் திருமண வாழ்வில் தாக்கம் செலுத்தாமல் இருக்க.

தம்பதிகளின் ஒருவர் திருமணத்திற்கு முன் காதல் தொடர்புகளில் இருந்தால் அல்லது ஒருவர் உளவியல்சார் கோளாருகளிற்கு ஆளாகிய நிலையிலோ அல்லது நடத்தைசார் பிறப்பில் இருக்கும் சமயத்தில் அவரிற்கான முறையான சிகிச்சை அழிக்கப்படாத நிலையில் திருமண உறவு திருப்திகரமாக இருக்காது. மாற்றமாக அவற்றின் தாக்கம் தம்பதிகளின் மகிழ்ச்சிகரமான திருமண உறவில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம்.

மேலும் இருவரில் ஒருவருக்கு பாரிய உள நோய்கள் காணப்பட்டால் திருமணவாழ்வு முழுமையாக பாதிப்பை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் அதிகமாக காணப்படும். இதற்கான ஒரு முறையான இடையீட்டு செயல்முறையின் மூலம் பொருத்தமான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும். மேற்குறித்த பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கும் , தம்பதியினருக்கு தம் நிலையை அல்லது தன் துணையின் நிலையின் உன்மை தன்மையை தெரியப்படுத்துவதற்கும் திருமணத்திற்கு முற்பட்ட உளவளத்துணை அதிகம் அவசியமடைகிறது.

  • தம்பதியினர் தமது எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு இது சந்தர்ப்பம் அமைத்துக்கொடுக்கிறது. இதன் மூலம் வெரும் கட்பனா நினைவுகளுடன் திருமண பந்தத்தில் இருதரப்பினரும் இணையாமல் மெய்யான யாதார்ததரீதியான வாழ்வை தயார்படுத்த திருமணத்திற்கு முற்பட்ட உளவளத்துணை அதிகம் அவசியமடைகிறது.
  • இன்றைய நமது கலாச்சாரத்தில் பாலியல் அறிவு பெரிதும் மட்டமான நிலையிலே உள்ளது. வெரும் கற்பனைக்கதைகள் அல்லது போலி வழிகாட்டல்கள் அல்லது பாலியல் நடிப்புக்கள் (pornograpgy) மூலமாக மாத்திரமே அது இளம் தலைமுறையினறிற்கு ஊட்டப்படுகிறது. 50% ற்கும் அதிகமான தம்பதியினர் தாம்பத்திய வாழ்க்கையில் திருப்தி காணவில்லை என அண்மைக்கால ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. மேலும் தம்பதியினரிற்கு காணப்படும் உடல்சார் பாலியல் பிரச்சினைகள் ( sexual dysfunction ) மற்றும் உளவியல்சார் பாளியல் கோளாருகள் ( sexual deviation ) தொடர்பான விளிப்புணர்வு அவசியமடைகிளது . இவற்றை தொழில்வான்மையான உளவளத்துணையாளர் மூலம் திருமணத்திற்கு முற்பட்ட உளவளத்துணை செயல்முறையின் மூலம் செய்ய முடியுமாக அமையும்.
  • தமது எதிர்பார்ப்புக்களை பரஸ்பரம் தெரிவிக்க
  • தத்தமது துறைகளையும் கனவுகளிற்கும் பொருத்தமான துணையா என பரீட்சிக்க
  • தமது எதிர்கால சந்ததியினர் தொடர்பான திட்டமிடல் மற்றும் தயார்படுத்தலுக்க தயார்படுத்த
  • தமது பாத்திரம் ( roals) இனை முறையாக தெரிந்து கொள்வதற்கு?

என இதுபோன்ற பலவிடயங்களின் காரணமாக நமது இன்றைய நிலையில் திருமணத்திற்கு முன்னைய உளவளத்துணை அவசியமடைகிறது. வெரும் இடைத்தரகரின் வார்த்தையை மாத்திரம் வாக்காக கருதி திருமண வாழ்வில் இணைவதற்கு பகராமாக முறையான அறிவும் அங்கீகாரமும் படைத்த உளவளத்துணையாளரின் விஞ்ஞான ரீதியான துணை நடவடிக்கையை மேற்கொன்டதின் பின் திருமண நடைபெறுவது ஆரோக்கியமான குடும்ப கட்டமைப்பிற்கான ஆரம்ப முதலீடாக அமையும். இது தொடர்பான பொதுசன விளிப்புணர்வு மற்றும் அனைத்து பாத்திரங்கள் மத்தியிலான அறிவூட்டல் அதிகம் அவசியம் அடைகிறது.

சட்ட ரீதியாக மேற்சொன்ன விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட்டாலும் திருமண வாழ்வு என்பது இரு தனிநபர்களின் உள்ளங்கள் இணைந்து வாழ்வது என்பதுவும் அவற்றின் திருப்தியே அதிகமாக நோக்கப்பட வேண்டும் என்பதுவும் யாமறிந்த உண்மையே. ஆகவே¸ திருமணத்திற்கு முன் அது பற்றிய அறிவு வழங்கப்படுவதுடன்¸ பிரச்சினைகளை இனங்கண்டு தீர்ப்பதற்கான திறனும் வளர்க்கப்பட வேண்டும். அந்த வகையில் திருமணத்தின் நோக்கம்¸ தன்னுடைய வாழ்க்கைத் துணையை எவ்வாறு தேர்வு செய்வது என்பவற்றை அறிவதன்மூலமும் திருமண வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் புரிந்துணர்வோடு¸ பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான சகலவிதமான வழிகாட்டல்களை வழங்குவதன் மூலமும் பிரச்சினைகள் வருவதற்கு முன்பே அவற்றைத் தவிர்க்க முடிவதோடு சந்தேகங்கள்¸ ஐயங்கள் போலியான நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்வது தவிர்க்கப் படுவதுடன்¸ மணவாழ்வுக்கு முன்பாகவே போதிய ஆயத்தங்களை மேற்கொண்டு மகிழ்வான வாழ்வை வாழ வழியமைத்துக் கொடுக்க முடியும்.

திருமணத்திற்கு முன் ஒரு தாயே பெண் பிள்ளையின் முன்மாதிரி. அதேபோன்று தந்தையே ஆண் பிள்ளையின் முன்மாதிரி. அந்த வகையில் ஒரு பெண் தன் தாயிடமிருந்தும் ஒரு ஆண் தன் தந்தையிடமிருந்து திருமணத்திற்கு முன்னரான குடும்ப வாழ்க்கை பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில் பின்வரும் விடயங்கள் பெற்றோரால் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய தேவை உண்டு.

  1. தமது நடத்தைகளால் கணவனுக்கும் மனைவிக்குமான முன்மாதிரியாக இருத்தல்.
  2. குடும்ப வாழ்வைப் பற்றிய அடிப்படையான அம்சங்களைக் குமரிப் பருவத்தின் தொடக்கத்திலிருந்து பயிற்றுவித்தல்;.

இன்னும் திருமணம் அல்லது குடும்ப வாழ்வு என்பது வெறுமனே ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான சட்ட ரீதியான ஒப்பந்தம் என்ற பொருள் கொண்டாலும் அது ஒரு உள ரீதியான ஒப்பந்தம்¸ மனங்களின் இணைவு என்பதைப் புரிய வைப்பதுவும் குடும்ப வாழ்வின் நோக்கம். பொறுப்பு¸ கடமைகள்¸ செயல்பாடுகள் என்பன குறித்து அறிவூட்டுவதும் இன்றியமையாதது. குறிப்பாக இவ்விடத்தில் திருமணத்தின் நுட்பம்¸ கணவன் மனைவி தெரிவு அவர்களின் கடமைகள் பற்றி அறிவூட்டப்படுவதுடன்¸ பயிற்றுவிக்கப்படவும் வேண்டும்.

அந்தவகையில் பின்வரும் விடயங்கள் கீழ்வரும் தலைப்புக்களில் பேசப்படுவது சிறப்பாக அமையும்.

  1. திருமணத்தின் நோக்கம் பற்றி விழிப்புணர்வூட்டல்
  2. கணவன்¸ மனைவி தெரிவு பற்றிய அறிவு
  3. கடமைகள்¸ பொறுப்புக்கள் பற்றித் தெளிவூட்டல்.

எனவே¸ திருமணத்திற்கு முன் இவ்வாறான வழிகாட்டல்களை புதிதாக வாழ்க்கையை ஆரம்பிக்க இருக்கும் தம்பதியினருக்கு வழங்குவதன்மூலம் திருமண வாழ்வின் உயரிய நோக்கத்தை உணர வைத்து¸ அந்த வாழ்க்கைக்கு அவர்களைத் தயார்படுத்தி யதார்த்தங்களை முன்னமே உணர வைக்க முடியும். இதனூடாகவும் பிற்காலங்களில் தலாக் நிகழும் விகிதாசாரத்தைக் குறைக்கலாம்.

  • சிறந்த குடும்பம் தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கல்

எவ்வாறு தான் திருமணத்திற்கு முன்னர் பல்வேறு வழிகாட்டல்கள் வழங்கப்பட்ட போதிலும் குடும்ப வாழ்வை வாழும்போது ஏற்படும் பிரச்சினைகளை வேறு விதமாகவே தீர்க்க வேண்டியுள்ளது. அந்தவகையில் மூன்றாவது முன்மொழிவாகச் சிறந்த குடும்பம் தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்குவதனைக் கூறலாம்.

  1. குடும்பமும் தம்பதியினரும்
  2. குடும்பத்தின் அடிப்படைகள்
  3. சமூக ரீதியாக தலாக்கினை எவ்வாறு தீர்க்கலாம்?

எனவே¸ இவை பற்றி கலந்துரையாடுவதும் இவ்வாறு குடும்ப விவகாரங்கள் சம்பந்தமான ஆய்வுகள்¸ வழிகாட்டல்கள்¸ கருத்தரங்குகளுக்கென்று தனியானதொரு பிரிவு இயங்குவதும் நாம் வாழும் காலகட்டத்தில் மிகவும் அவசியமானது. ஏனென்றால் குடும்பங்களின் சீரழிவானது முழு இஸ்லாமிய சமூகத்தின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்து விடும். எனவே¸ மேற்சொன்ன விடயங்களைப் பிரதேச வாரியாக நடைமுறைப்படுத்தி அறிவூட்டுவதன் மூலம் குடும்பங்களிடையே தோன்றும் தலாக் வீதத்தினைக் குறைக்கலாம்.

தனது வாழ்க்கை துணையின் மூலம் எட்டிவிடுவதற்கு முனைகின்ற போது அவரது வருமானம் ஈட்டலும் எதிர்பார்ப்பும் மலையும் மடுவும் போன்றதான இடைவெளியை உண்டு பண்ணி விடுகின்றது. இது காலப்போக்கில் தனது வாழ்க்கை துணை மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தி விரிசல் பெரிதாகி மணமுறிவில் கொண்டு சென்று விடுகின்றது.

தற்காலத்தில் தொழில்நுட்ப வசதிகளின் அதிகரித்த வளர்ச்சி போக்கு அதனை அன்றாட வாழ்வில் தவிர்த்து வாழமுடியாத நிலையில் ஏதோ ஒரு விதத்தில் தொழில்நுட்ப சாதனங்களின் பாவனையால் ஏற்படுகின்ற புதிய நட்புகள் புதிய தொடர்புகள் என்பன சாதாரண தகவல் தொடர்பினை கடந்து தகாத உறவு நிலையாக மலர்ந்து விடுகின்ற பொழுது இந்த விடயம் தமது வாழ்க்கை துணைக்கு தெரிய வருகின்ற பொழுது மனஉடைவினை ஏற்படுத்தி ஏமாற்றம் விரக்தியுற்ற நிலைக்கு ஆலாக நேரிடுகின்றது இதன் மூலம் மன வாழ்வு சட்டத்தின் முன் தமது விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் மணமுறிவிற்கு வித்திட்டு விடுகின்றது,

குடும்ப உறுப்பினர்களிடையிலான சரியான பரஸ்பர தொடாபாடல், விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை, தனது வாழ்க்கை துணையின் நிறைவில் திருப்தி காணுதல் போன்ற விடயங்களுக்கும் தனது வாழ்க்கை துணையின் எதிhபார்ப்புக்கள் அபிலாசைகளை நிறைவேற்றுவதனால் புறக்காரணிகளின் இடையீடுகள், தமது தேவையை நிறைவு செய்ய முடியாத வாழ்க்கை துணையினை கவனத்தில் எடுக்காது தனது அபிலாசைகளை நிறைவு செய்யக்கூடிய ஒருவரது தொடர்பு நிரந்தரமாகி விடுகின்ற பொழுது அது நிரந்தர குடும்ப உறவினுள் விரிசல்களை ஏற்படுத்தி விடுகின்றது.

மேற்கண்ட காரணிகள் போன்று இ;னும் பல காரணிகள் போன்று செல்வாக்கு செலுத்தி குடும்ப உறவினை மணமுறிவு வரை சென்று விடுகின்றது இதன் மூலம் கூடதலாக பாதிக்கப்படுவது அக்குடும்பத்தின் சிறுவர்களேயாவர் தாம் வளர்ந்து வரும் சுழலில் அன்பு, பாசம், பாதுகாப்பு, அரவணைப்பு, வழிகாட்டுதலுக்காக எப்பொழுதும் தமது பெற்றோரது அன்பையும் பாராமரிப்பையும் எதிர்பார்த்திருக்கும் சிறுவர்கள் பெரும் மன உளைச்சல், மனநெருக்கீடு போன்றவற்றால் பாதிப்பிற்குள்ளாகி விரக்தியுற்ற வாழ்க்கை வட்டத்திலுள் அமுல்படுத்தப்பட்டு விடுகின்றனர் இது அவர்களது உடல் உள அறிவு விருத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி அவர்களது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடும் அபாயம் தோற்றம் பெற்று விடுகின்றது.

சமுக அந்தஸ்து மரியாதை என்பவற்றை இல்லாதொழித்து குடும்ப தலைவன், தலைவியின் நடத்தை குடும்பத்தின் ஏனையவர்களது கௌரவத்தையும் கெடுத்து விடும் நிலை உருவாகி விடுகின்றது. இது அவர்கள் மனநிலையில் கூட மீள் தாக்கம் செலுத்தும் ஒரு விடயமாக மாறிவிடுகின்றது நின்மதி இன்மை, மனநிலை குழப்பம், சோர்வு, இயலாமை, விரக்தி எனும் நிலைகளை கடந்து செல்கின்ற பொழுது ஆரோக்கியம் குன்றிய தனிமனிதர்களாக மாறிவிடுகின்ற அபாயம் உண்டு.

இளைய தலைமுறையினர் தாம் விரும்பிய படி தமது திருமண வாழ்வினை அமைத்துக் கொண்டு விடுகின்றனர் இருந்தும் திருமணமாகி ஆரம்ப காலங்களில் இல்லற வாழ்வு இனிதாக அமைந்திருந்தாலும் சில வருடங்களின் பின்னர் பல்வேறு காரணிகள் குடும்ப வாழ்வில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தி தொடங்கி விடுகின்றது குறிப்பாக அதிகரித்துச் செல்லும் வாழ்க்கை செலவீனங்கள் தமது குடும்பத்திற்கான நிரந்தர வருமானத்தை ஈட்டிக் கொண்டு வாழ்க்கை செலவீனங்களை ஏதிர்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை மறுத்து விடுகின்றது .இந்நிலையில் தனது மனைவியை சீதனம் எனும் கேள்வியாலும் கோரிக்கையாலும் துளைத்தெடுக்கின்றன நிலை உருவாகி விடுகின்றது. இதனால் இனிமையாய் மலர்ந்திருந்த காதல கல்யாண வாழ்க்கையை கசப்படைய தொடங்கி விடுனகின்றது இவ்வாறான எதிர்பார்ப்பு பொய்த்து விடுகின்ற சந்தர்ப்பங்களில் வன்கொடுமைகள் என விரிவடைந்து சட்ட நடவடிக்கை என வளர்ந்து மணமுறிவினை ஏற்படுத்தி விடுகின்றது.

வேகமான பொருளாதாரம் ஈட்டும் செயற்பாடுகள் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் நிலை மற்றும் தொழில் நிமிர்த்தமாக இருவரும் இருவேறு இடங்களில் தங்கியிருப்பதற்கு நிர்ப்பந்தமாக விடுகின்ற நிலை ஆரோக்கிய குடும்ப வாழ்விற்கு அவசியமான பரஸ்பர உணர்வு பகிர்வு, திறந்த மனதுடனான உரையாடல், ஒருவரை ஒருவர் தட்டிக் கொடுத்தல்,பாராட்டுதல், பிள்ளைகளுடனான நேரம் செலவழப்பதற்கான சந்தர்ப்பம் குறைவடைந்து செல்லும் நிலை அல்லது நேரமே கிடைக்காமை போன்ற சந்தாப்பங்கள் குடும்பத்தை ஈடேட்டத்தை குறைத்து அவர்களின் முக்கியத்துவம் அவசியமற்ற குடும்ப சூழ்நிலையை காலஒட்டத்தில் ஏற்படுத்துகின்ற நிலை வலுவடைந்து செல்லும்போது சிறு சிறு முரண்பாடுகளின் பின்னணியும் இணைந்து செயற்படுகின்ற போது தம்மால் தனித்து செயற்பட முடியும் அல்லது தனித்து தனது குடும்பத்தினை கொண்டுசெல்ல முடியும் எனும் மன நம்பிக்கையும் சுயமான வருமான ஈட்டலும் உத்வேகத்தை கொடுத்து விட அற்புதமான மணவாழ்வு கேள்விக்குறியாகி விடுகின்றது.

திருமணமமாகிய பின்னரும் பெற்றோரின் தலையீடு தமது பிள்ளைகள் மீதான பாச பிணைப்பு காரணமாக அவர்களது குடும்பத்திலும் தொடாவதனை பல குடும்பங்களில் அவதானிக்க முடிகின்றது திருமணமான பிள்ளைகளை nhதடர்ந்தும் தமது சிறு பிள்ளைகள் போன்ற எண்ணப்பட்டுடனே அனேக பெற்றோர் வாழ்ந்து வருகின்றனர் இந் நிலை அவர்களது குடும்ப தீர்மானங்களை கூட தாம் தலையிட்டு தமது விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் அமைய வேண்டும் எனும் எண்ணப்பாடு புதிய குடும்பத்தில் முரண்பாட்டு நிலையினைத் தோற்றுவித்து விடுகின்றது தற்கால அவதானிப்பின் படி பெண் பிள்ளைகளுடன் பெற்றோரது இணைவு அதிகரித்து செல்வதினை அவதானிக்க முடிகின்றது இவ்வாறான செயற்பாடடு முறைமை சகிப்பு தன்மையின் அளவினை கடந்து விடும் நிலையில் அது மணமுறிவிற்கு வித்திடுகின்றது.

எனவே தான் அடிப்படையில் திருமண வாழ்வு என்றால் என்ன என்பதை விளங்கி கொண்டு செயற்படுவதும் அதன் பணியின் உச்ச விளைவை அனுபவித்து ஆரோக்கியமான மனவாழ்வினூடாக சிறப்பான குடும்ப கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்ளுதல் தனிநபருக்கு மாத்திரமின்றி அவரது குடும்பம், குடும்பம் அமைந்துள்ள சமுதாயம் அனைத்திற்கும் மிக பெரிய பொக்கிசத்தை ஏற்படுத்தி விடுகின்றமையை காணக்கூடியதாக உள்ளது.

தொகுப்பு
NAFEES NALEER
&
FAZLAN A CADAR

திருமணத்திற்கு முந்திய காதல் தொடர்பு, கணவன்- மனைவி உறவு. பெற்றோர்- பிள்ளை உறவு, குடும்ப – சமூக உறவு போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகள், சிக்கல்களைக் குறைத்து குடும்ப நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு…

திருமணத்திற்கு முந்திய காதல் தொடர்பு, கணவன்- மனைவி உறவு. பெற்றோர்- பிள்ளை உறவு, குடும்ப – சமூக உறவு போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற பிரச்சினைகள், சிக்கல்களைக் குறைத்து குடும்ப நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *