Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
தீவிரமடையும் குரங்கு காய்ச்சல்..!! ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!! 

தீவிரமடையும் குரங்கு காய்ச்சல்..!! ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!!

  • 3

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION

கர்நாடகாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், தமிழக எல்லையோர 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடாவில் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 53 பேர் பாதிக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர். தொற்றுக்குள்ளான குரங்குகள், கால்நடைகள் வாயிலாக இந்த வகை வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது. காய்ச்சல், உடல்வலி, தலைவலி, வாந்தி, ஜீரண மண்டல பாதிப்புகள், ரத்தபோக்கு போன்றவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். பாதிப்பு ஓரிரு வாரங்களில் குணமாகி விடும். சிலருக்கு தீவிர எதிர்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த வகை காய்ச்சலை பி.சி.ஆர். மற்றும் ரத்த பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யலாம்.

இந்நிலையில் கேரளா, கர்நாடக எல்லைகளை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில், மருத்துவ கண்காணிப்பை முன்னெடுக்க, தமிழக பொது சுகாதாரத்துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உரிய பரிசோதனை செய்ய வேண்டும். கால்நடைகளை துாய்மையாக பராமரிக்க வேண்டும். அவை, காடுகளுக்குள் செல்லாமல் தடுப்பதை உறுதி செய்ய வேண்டும். தொற்றை பரப்பும் உண்ணி பூச்சிகளை கண்டறிந்து அழிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு, தருமபுரி ஆகிய நான்கு மாவட்டங்களில், குரங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதால், மாவட்ட ஆட்சியர்கள் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கடிதம் எழுதியுள்ளார்.

The post தீவிரமடையும் குரங்கு காய்ச்சல்..!! ஈரோடு, தருமபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.

“}]]Read More 

​ 

[[{“value”:” Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION கர்நாடகாவில்…

[[{“value”:” Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION கர்நாடகாவில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *