Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
தூய எண்ணம் 

தூய எண்ணம்

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பாலைவனத்தில் ஒரு நாள் தனது ஒட்டகத்துடன் களைப்பாறினான் ஒரு வழிப்போக்கன். தனது ஒட்டகத்தை கட்டிப்போடுவதற்காக ஒரு கம்பை நாட்டி அதில் ஒட்டகத்தை கட்டிப்போட்டான். களைப்பாறிவிட்டு போகையில் தான் நட்ட கம்பை அப்படியே பிறர் வந்தால் பயன்படுத்திக்கொள்ளட்டும் என்ற எண்ணத்துடன் விட்டுச் சென்றான்.

இன்னொரு வழிப்போக்கன் அதே இடத்தில் வந்து களைப்பாறினான். ஏற்கனவே நடப்பட்டிருந்த கம்பில் தனது ஒட்டகத்தை கட்டி சிறிது நேரம் களைப்பாறிவிட்டு அந்த கம்பு அவ்வாறு நடமாடும் பாதையில் இருப்பதால் வழிப்போக்கர் யாரும் தடுக்கி விழக்கூடும் என்ற எண்ணத்துடன் அதை கழற்றி அப்படியே ஒரு ஓரத்தில் இட்டுச் சென்றான்.

இருவரும் செய்தது ஒன்றுக்கு மாற்றமான செயல். ஒருவன் கம்பை நட்டுகிறான், மற்றொருவன் கம்பை உடைத்து எறிகிறான். ஆனால் இருவரது எண்ணமும் பிறர் நலத்தின் அடிப்படையில் செய்யப்பட்டதால் இறைவன் இருவரின் செயலையும் பொருந்திக் கொண்டான்.

நீதி: எண்ணத்திற்கு அமையவே கூலி கிடைக்கும்.

M.I.M.Anver Sadath

பாலைவனத்தில் ஒரு நாள் தனது ஒட்டகத்துடன் களைப்பாறினான் ஒரு வழிப்போக்கன். தனது ஒட்டகத்தை கட்டிப்போடுவதற்காக ஒரு கம்பை நாட்டி அதில் ஒட்டகத்தை கட்டிப்போட்டான். களைப்பாறிவிட்டு போகையில் தான் நட்ட கம்பை அப்படியே பிறர் வந்தால்…

பாலைவனத்தில் ஒரு நாள் தனது ஒட்டகத்துடன் களைப்பாறினான் ஒரு வழிப்போக்கன். தனது ஒட்டகத்தை கட்டிப்போடுவதற்காக ஒரு கம்பை நாட்டி அதில் ஒட்டகத்தை கட்டிப்போட்டான். களைப்பாறிவிட்டு போகையில் தான் நட்ட கம்பை அப்படியே பிறர் வந்தால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *