Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் இன்று பதவியேற்பு - Youth Ceylon

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் இன்று பதவியேற்பு

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 5வது உபவேந்தராக சாய்ந்தமருதைச் சேர்ந்த பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் (வயது 43) இன்று (0908.2021) தவியேற்கின்றார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடாதிபதியாக இருந்த இவர் இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த ஒருவர் அப்பல்கலைக்கழகத்தில் உபவேந்தராக நியமிக்கப்ட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும். இவர் சாய்ந்தமருதைச் சேர்ந்த மிஸ்கின் பாவா அபூபக்கர்-உதுமான் கண்டு வதவியத்தும்மா தம்பதிக்கு மூன்றாவது பிள்ளையாக 1978ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி பிறந்தார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையிலும் கற்றுக் கொண்டார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை கற்ற ஆரம்ப மாணவர் தொகுதியைச் சேர்ந்த இவர், சமூகவியல் துறையில் முதல் வகுப்புச் சித்தியைப் பெற்றுக் கொண்டார.

2005 ஆம் ஆண்டில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக இணைத்துக் கொள்ளப்பட்ட பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், 2006ஆம் ஆண்டு இப்பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையின் நிரந்த விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். இவர் சமூகவியல் முதுதத்துவமாணி பட்டத்தை 2010ஆம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழகத்திலும், முரண்பாடு மற்றும் சமாதானம் தொடர்பான பட்டப்படிப்பினை 2010ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற பிரட்போர்ட் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக் கொண்டார்.

இவர் தனது கலாநிதி பட்டப்படிப்பினை சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் இரண்டுக்கும், 2017ஆம் ஆண்டு சிரேஷ்ட விரிவுரையாளர் தரம்ஒன்றுக்கும் பதவி உயர்த்தப்பட்டார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பிரிவை தனியான ஒரு துறையாக நிறுவுவதில் பெரும் பங்காற்றியவர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர். 2017ஆம் ஆண்டு அத்துறையின் முதலாவது தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.

பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச ஆய்வு மாநாடுகளில் பங்கேற்று ஆய்வுரைகளை ஆற்றியுள்ள இவர்,உலகத்தரம் வாய்ந்த ஆய்வுச் சஞ்சிகைகள் பலவற்றில் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் தனது ஆய்வு வெளியீடுகளுக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2019ஆம் ஆண்டக்கான சிறந்த ஆய்வாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

உலகத்தரம் வாய்ந்த சஞ்சிகைகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டமைக்காக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மூதவையினால் வழங்கப்படும் கௌரவப் பட்டத்தை பல முறை பெற்றுள்ளார். 2019ஆம் ஆண்டு கெய்சிட் என அழைக்கப்படும் வியன்னாவில் உள்ள சர்வதே சம்பாஷணை நிலையத்தின் பட்ட அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 5வது உபவேந்தராக சாய்ந்தமருதைச் சேர்ந்த பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் (வயது 43) இன்று (0908.2021) தவியேற்கின்றார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடாதிபதியாக இருந்த இவர் இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.…

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 5வது உபவேந்தராக சாய்ந்தமருதைச் சேர்ந்த பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் (வயது 43) இன்று (0908.2021) தவியேற்கின்றார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடாதிபதியாக இருந்த இவர் இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.…