Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதியாக பேராசிரியர் எம்.எம்.பாஸில் - Youth Ceylon

தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீடாதிபதியாக பேராசிரியர் எம்.எம்.பாஸில்

  • 28

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடாதிபதியாக, அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.எம். பாஸில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கலை கலாசார பீடத்திற்கான புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்யும் கடந்த 16.08.2021 அன்று மணிக்கு கலை கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இப்பல்கலைக்கழக கலை கலாசார பீட உயர் சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சபையினரின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் பேராசிரியர் கலாநிதி எம்.எம். பாஸில் அவர்கள் போட்டியின்றி கலை கலாசார பீடத்திற்கான புதிய பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். கலை கலாசார பீடத்தின் பழைய மாணவரான பேராசிரியர் எம்.எம். பாஸில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அப்பீடத்தின் பீடாதிபதியாகச் செயற்படவுள்ளார்.

மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் வெள்ளைக்குட்டி மன்சூர்- முஹம்மது இப்றாஹிம் உம்மு சல்மா தம்பதியரின் மூத்த புதல்வரான பேராசிரியர் எம்.எம். பாஸில், தனது பாடசாலைக் கல்வியை மருதமுனை அல்-மனார் தேசிய பாடசாலையில் பெற்றுக் கொண்டார். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதற் தொகுதி மாணவர்களுள் ஒருவராக இவர் இருந்தார். பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தில் சிறப்புச் சித்திபெற்றார். அவர் சமூகம்சார் செயற்பாடுகளிலும் அக்கறையுடன் செயற்பட்டிருந்தார்

2000ஆம் ஆண்டு அரசியல் விஞ்ஞானத் துறையில் சிறப்புப் பட்டம் நிறைவு செய்த அவர், பின்னர் அத்துறையின் விரிவுரையாளரானார்.

ஜப்பான் நாட்டின் ஜெய்க்கா புலமைப் பரிசில் பெற்று, மேஜி பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத் துறையில் முதுமாணி பட்டம் நிறைவு செய்தார். பின்னர் உலக வங்கியின் நிதிப் புலமைப்பரிசில் பெற்று மலேசியாவின் மலாயாப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி கற்கை நிறைவு செய்துள்ளார்.

பேராசிரியர் எம்.எம். பாஸில் இலங்கை முஸ்லிம் அரசியல், இனத்துவப் பிணக்குகள், சமூக நல்லிணக்கம், மனித உரிமைகள், சர்வதேச உறவுகள் போன்ற துறைகளில் சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளார். அத்துறைகள் தொடர்பான பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். அவரது கட்டுரைகள் பல உலகத் தரம் வாய்ந்த ஆய்வுச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. சமூக – அரசியல் இயங்குநிலை குறித்த அவரது ஆய்வு முடிவுகள் தேசிய – சர்வதேச ஆய்வு மாநாடுகளில் சமர்ப்பிக்கப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றவை.

2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பேராசிரியராக செயற்படும் வகையில் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. இலங்கை முஸ்லிம்களில் அரசியல் விஞ்ஞானத் துறையில் பேராசிரியர் பதவி உயர்வு பெற்ற முதலாமவர் இவராவார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடாதிபதியாக, அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.எம். பாஸில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கலை கலாசார பீடத்திற்கான புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்யும் கடந்த 16.08.2021 அன்று…

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடாதிபதியாக, அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.எம். பாஸில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கலை கலாசார பீடத்திற்கான புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்யும் கடந்த 16.08.2021 அன்று…