தெற்கில் விரைவில் சிறுகதை பட்டறை – தென் கலைஞர்களின் ஒன்று கூடலில் தீர்மானம்

  • 12

முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் வழிகாட்டலில் தென் மாகாணக் கலைஞர்களுக்கான 3ஆவது கலந்துரையாடல் நிகழ்வு 2021.06.26 ஆம் திகதி ஸூம் இனூடாக நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில்  மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் சிறுகதை எழுதுவதன் ஆர்வத்தை தூண்டுவதற்காக, சிறுகதை எழுத ஆர்வமுடையோருக்கான சிறுகதைப் பட்டறையொன்றை ஸூம் செயலியினூடாகவும், நாட்டில் நிலைமை சீரானதும் பாடசாலைகளிலும் நடாத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தென்மாகாண கலைஞர்களின் ஆக்கங்களை இணைத்து சஞ்சிகையொன்று வௌியிட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் தென் மாகாண முஸ்லிம் எழுத்தாளர்கள் தழிழுடன் சிங்களம், மலாய் இலக்கியத்திலும் பங்களிப்பு செய்துள்ளனர். குறிப்பாக ஹம்பாந்தோட்டை மலாய் சமூகம் முஸ்லிம்களின் கலை, கலாசார, உணவு விடயங்களில் பங்களிப்பு செய்துள்ள விதத்தை நினைவு கூர்ந்ததுடன் அவற்றை பாதுகாப்பதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் தென் மாகாண ஒருங்கிணைப்பாளர் திக்குவல்லை ஸப்வான், மாவட்ட இணைப்பாளர்கள், கலைஞர்கள், கலாசாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அங்கத்தவர்கள் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு ஆக்க பூர்வமான தகவல்களைப் பரிமாறிக் ​கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியை மூத்த எழுத்தாளர்களான திக்குவல்லைக்கமால், அஷ்ரப் சிஹாப்தீன், அல்-அஸூமத், நாச்சியாத்தீவு பர்வின், நூருள் ஐன் நஜ்முல் ஹுசைன் ஆகியோர் நெறிப்படுத்தினர்.

இறுதியாக, இக் கலந்துரையாடலில் சிறுகதை எழுத ஆர்வமுடையோருக்கான சிறுகதைப் பட்டறையொன்றை ஸூம் செயலியினூடாகவும், நாட்டில் நிலைமை சீரானதும் பாடசாலைகளிலும் நடாத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

Ibnuasad

முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் வழிகாட்டலில் தென் மாகாணக் கலைஞர்களுக்கான 3ஆவது கலந்துரையாடல் நிகழ்வு 2021.06.26 ஆம் திகதி ஸூம் இனூடாக நடைபெற்றது. இக் கலந்துரையாடலில்  மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் சிறுகதை எழுதுவதன் ஆர்வத்தை தூண்டுவதற்காக, சிறுகதை…

முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் வழிகாட்டலில் தென் மாகாணக் கலைஞர்களுக்கான 3ஆவது கலந்துரையாடல் நிகழ்வு 2021.06.26 ஆம் திகதி ஸூம் இனூடாக நடைபெற்றது. இக் கலந்துரையாடலில்  மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் சிறுகதை எழுதுவதன் ஆர்வத்தை தூண்டுவதற்காக, சிறுகதை…