தேடல்
- by admin
- 21
Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425
எதற்காக என்னை விட்டு பிரிந்தாய்
ஏன் என்னை ஏற்க மறுக்கிறாய்
உன்னை சுமை என நினைத்த
கணங்களை பொய்ப்பித்து விட்டாய்
நீ கசக்கிறாய் என்று எண்ணி
முகம் சுளிக்கையில் இனிக்கிறாய்
நீ சுமையானவன் தான்
நீ கசப்பவன் தான்
உனது அருமை தெரியாத வரை
உன்னை புரிந்து கொண்டு
வரும்போது ஏன் தள்ளி போகிறாய்
ஆனாலும் நீ தொலைந்து போகவில்லை
தொலைவில் நின்று என்னை
ஏங்க வைக்கிறாய் உனக்காக
உன்னை தேடி வர வேண்டும்
என்பதற்காக தூரம் செல்கிறாய்
உனக்கான எனது தேடல்
இன்னும் எத்தனை காலம் நீளுமோ
என் தேடலுக்கு நீ பதிலளிக்க மாட்டாயா
வெறுமையாகிப் போன
என் வாழ்வின் அர்த்தங்கள்
உன்னால் தான் கலைகட்டியது
உன்னுடன் நான் கலந்தால்தான்
என் வாழ்வும் வசந்தமாகும்
ஏனென்றால் நீ தான்
நான் நேசித்த செல்வம்
நீயே கல்விச் செல்வம்
Noor Shahidha
SEUSL
Badulla
எதற்காக என்னை விட்டு பிரிந்தாய் ஏன் என்னை ஏற்க மறுக்கிறாய் உன்னை சுமை என நினைத்த கணங்களை பொய்ப்பித்து விட்டாய் நீ கசக்கிறாய் என்று எண்ணி முகம் சுளிக்கையில் இனிக்கிறாய் நீ சுமையானவன் தான்…
எதற்காக என்னை விட்டு பிரிந்தாய் ஏன் என்னை ஏற்க மறுக்கிறாய் உன்னை சுமை என நினைத்த கணங்களை பொய்ப்பித்து விட்டாய் நீ கசக்கிறாய் என்று எண்ணி முகம் சுளிக்கையில் இனிக்கிறாய் நீ சுமையானவன் தான்…