Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
தொலைக்காட்சி, இணையதளமூடாக ஜும்ஆவை நிறைவேற்றல் 

தொலைக்காட்சி, இணையதளமூடாக ஜும்ஆவை நிறைவேற்றல்

  • 6

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

Online Jummah

கொரோனா தொற்றுநோயின் காணமாக மஸ்ஜிதில் ஜும்ஆ தொழுகைகள் நிறைவேற்றுவதில் சங்கடமிருப்பதனால் தொலைக்காட்சி, வானொலி மற்றும் நவீன தொடர்பு சாதனங்களால் ஜும்மா தொழுகை நிறைவேற்றல் மற்றும் குத்பா பிரசங்கத்தை செவிமடுத்தல் தொடர்பான் ஷரீஆவின் தீர்ப்பு.

தொலைக்காட்சி, வானொலி போன்ற சாதனங்களால் ஜும்மா தொழுகை நிறைவேற்றல் மற்றும் குத்பா பிரசங்கத்தை செவிமடுத்தல் ஷரீஆ ரீதியாக ஆகுமானதல்ல. அது ஜும்மாவின் அர்கான்கள் மற்றும் ஷர்த்துகளோடு முரண்படுகிறது. மேலும் இது மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும்.

இது ஜும்மா மற்றும் கூட்டுத் தொழுகையின் நோக்கங்களுக்கு முற்றிலும் முரணானது. ஜும்மாவை நிறைவேற்றுவதில் சங்கடங்கள் ஏற்படுமானால் அதற்கான ஷரீஆரீவின் மாற்றீடாகவும் சலுகையாகவும் லுஹர் தொழுகையைக் கொண்டு அமல் செய்ய முடியும்.

தீர்ப்புக்கான காரணங்கள் மற்றும் ஆதாரங்கள்.

ஜும்மா தொழுகை வெள்ளிக் கிழமை லுஹருடைய நேரத்தில் கடமையாக்கப்பட்ட ஒரு தொழுகையாகும்.

அல்லாஹ் அல்குர்ஆனிலே கூறும் போது:

“ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவு கூற (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் – நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.” (ஜும்ஆ:9)

ஜூம்மாவிற்கான சில ஈமானிய, சமூக மற்றும் ஒழுக்க ரீதியான நோக்கங்கள் உண்டு. அதனாலேயே அல்லாஹ் குளித்தல், நேர காலத்தோடு செல்லல், விரைவாக செல்லல் என்பவற்றை விஷேடமாகக் கூறியுள்ளான்.

மேலும் ஜும்மாவிற்கென அல்லாஹ் விதியாக்கிய சில அர்கான்கள் மற்றும் ஷர்துக்கள் உள்ளன. அவற்றை அல்லாஹ் விதியாக்கியதற்கு மாற்றமாக செயற்பட முடியாது. இது பகுத்தறிவை பயன்படுத்த முடியாத இபாதத் ஆகும். இதில் எவ்வித கூட்டலோ குறைத்தலோ செய்ய முடியாது. இது போல நேரம், இடம் மற்றும் அமைப்பு போன்றவற்றை ஷரீஆ வரையறுத்து கடமையாக்கிய விடயங்கள் இயலுமைக் கேற்பவே ஒருவர் மீது கடமையாகும். இயலாத போது லுஹர் தொழ முடியும்.

இப்னு அப்பாஸ(றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் (தொழுகைக்கான) அழைப்பைக் கேட்டும் அதற்கு பதிலளிக்கவில்லையோ அவருக்கு நியாயம் இருந்தாலே தவிர தொழுகை கிடையாது. அப்போது ஸஹாபாக்கள் கேட்டார்கள் “நியாயம் என்றால் என்ன?” அதற்கு அவர்கள் “அச்சம் அல்லது நோய்” என பதிலளித்தார்கள் (இப்னு மாஜா).

அச்சம் எனும் போது எல்லா வகையான அச்சத்தையும் உள்ளடக்கும். இதனுள் நோய்த் தொற்று பற்றிய அச்சமும் உள்ளடங்கும். இந்நிலைமை தனிநபருக்கு மாத்திரமோ அல்லது பெரும் சமூகத்திற்கோ நாட்டுக்கோ ஏற்பட முடியும். தற்போது கொரனாவால் ஏற்பட்டது போல் முழு உலகிற்குமே ஏற்பட முடியும். இதன் போது சலுகை நோக்கி நகர வேண்டும். அடிப்படைக்கு பகரமாக விதிவிலக்கு முற்படுத்தப்படும். மேலும் புகஹாக்கள் தடுத்து வைத்தலையும் கூட்டுத் தொழுகையை விடுவதற்கான நியாயமாக குறிப்பிட்டுள்ளனர். எனவே தற்போது கொரனாவிலிருந்து பாதுகாப்பதற்காக வீடுகளில் இருப்பதும் இதில் அடங்கும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இமாம் ஆக்கப்பட்டிருப்பது பின்பற்றப்படுவதற்காகும். அவர் ருகூஉ செய்தால் நீங்களும் ருகூஉ செய்யுங்கள். அவர் எழுந்தால் நீங்களும் எழும்புங்கள். அவர் அமர்ந்த நிலையில் தொழுதால் நீங்களும் அமர்ந்த நிலையில் தொழுங்கள் (முவத்தா மாலிக், புகாரி)

இந்த ஹதீஸின் படி இமாமத் என்பது இமாமும் மஃமூமும் தொழுகைக்காக ஒரே இடத்தில் ஒன்று கூடியிருப்பதாகும். (வேறுவேறு இடங்களில்ல) இதுவே நபிகளாரதும் ஸஹாபாக்களினதும் வழிமுறையாகும். மேலும் இதுவே அனைத்து மத்ஹபுகளினதும் ஏகோபித்த கருத்துமாகும்.

அபூ ஹுரைரா (றழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது “யார் குளித்து பின்பு ஜூம்ஆவிற்கு வந்து, பின்னர் அவரால் இயலுமானதை தொழுதுவிட்டு (இமாம்) பிரசங்கத்தை முடிக்கும் வரை காது தாழ்த்திக் கேட்டு, அவருடன் தொழுதால், இந்த (ஜும்ஆவிற்கும்) அடுத்த ஜும்ஆவிற்கும் இடையிலான அவரது பாவங்கள் மன்னிக்கப்டும். மேலும் மூன்று நாட்களுக்கும். (பாவமன்னிப்பு வழங்கப்படும்)” (முஸ்லிம்) இந்த ஹதீஸிலே ஜும்ஆவின் விஷேட அமல்களாக குளித்தல்,
ஜும்ஆவை நிறைவேற்றும் இடத்திற்கு வரல், குத்பாவை செவிமடுத்தல், இமாமோடு தொழுதல் என்பவை குறிப்பிடப்பட்டுள்ளன.

கேள்வியில் உள்ளவாறு தொலைக்காட்சியை பின்பற்றித் தொழுவதால் நாம் தற்போது கூறிய ஜும்ஆ எனும் இபாதத் செயலற்றுப் போவதோடு இது கடமையாக்கப்பட்டதற்கான மகாஷிதும் (நோக்கங்களும்) பலவீனமடையும்.

ஜும்ஆ என்பது முஸ்லிம்களுக்கான வாராந்த பெருநாளாகும். இங்கு தங்களுக்கு மத்தியில் அறிமுகமாகிக் கொள்வர். ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொள்வர். மேலும் நன்மையிலும் இறைபிரக்ஞையிலும் பரஸ்பரம் உதவிக் கொள்வர். ஆனால் மக்காவிலுள்ள இமாமை தொலைக்கட்சியினுடாக பின்பற்றித் தொழுவது ஒரு நூதனமான முறையாகி விடுகிறது. எனவே பதிலீடான சலுகையாக லுஹர் தொழுகை இருக்கும் நிலையில் ஜும்ஆவின் ஷர்த்துக்களை, அர்கான்களை மற்றும் மகாஷிதுகளை இல்லாமலாக்கும் பித்அத்தான் இவ் அமைப்பு செல்லுபடியாகாது.

இம் முறையானது ஷரியாவிற்கு முரணானது என்பதையும் தாண்டி ஜும்ஆ உடன் தொடர்பான உயர் இலக்குகளையும் (மகாஷிதுகளை) இல்லாமல் செய்கிறது.

ஜூம்ஆவானது முஸ்லிம் உம்மத்தின் அடிப்படைப் பெறுமானங்களில் ஒன்றாய் உள்ளது. சமுக மற்றும் அரச ஒழுங்கின் அடிநாதமாக திகழ்கிறது. மேலும் குழு உணர்வு, பங்குபற்றல் மற்றும் வினைத்திறன் என்பவற்றைப் பலப்படுத்துவதோடு முரண்பாடு மற்றும் பிளவுகளை குறைக்கிறது. இது இஸ்லாமிய மற்றும் மனித பிணைப்பைப் பலப்படுத்துவதோடு அபிவிருத்தி மற்றும் நாகரீக விளைவுகளை விசாலமாக்கும்.

அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்

சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தின்
பிக்ஹ் மற்றும் பத்வா குழு
மொொழிபெயர்ப்பு
அத்தாஸ்
இஸ்லாமிய கற்கைகள் பீட மாணவன்,
நளீமியா.

Online Jummah கொரோனா தொற்றுநோயின் காணமாக மஸ்ஜிதில் ஜும்ஆ தொழுகைகள் நிறைவேற்றுவதில் சங்கடமிருப்பதனால் தொலைக்காட்சி, வானொலி மற்றும் நவீன தொடர்பு சாதனங்களால் ஜும்மா தொழுகை நிறைவேற்றல் மற்றும் குத்பா பிரசங்கத்தை செவிமடுத்தல் தொடர்பான் ஷரீஆவின்…

Online Jummah கொரோனா தொற்றுநோயின் காணமாக மஸ்ஜிதில் ஜும்ஆ தொழுகைகள் நிறைவேற்றுவதில் சங்கடமிருப்பதனால் தொலைக்காட்சி, வானொலி மற்றும் நவீன தொடர்பு சாதனங்களால் ஜும்மா தொழுகை நிறைவேற்றல் மற்றும் குத்பா பிரசங்கத்தை செவிமடுத்தல் தொடர்பான் ஷரீஆவின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *