தொழில் வழி காட்டிடு

  • 14

அடி முதல் முடி வரை புழுதி படிந்து..
உடை அவன் அணிவான் உடலும் தெரிந்து..
அணு தினம் நகரத்தில் அலைந்து திரிந்து..
நரகமாய்ப் போகுது வாழ்க்கை எரிந்து..

‘பிச்சைக்காரன், போக்கிரி, குடிகாரன் கவனம்..’
‘காசு கையில் கிடைத்தால் கள்ளடிப்பான் இவனும்..’
சாதியில்லை என்று கூவும் மானுடனைக் கேள்வி கேட்க
நாதியில்லை என்று தானே ஓரம் கட்டும் படலம்..

கண்ணில் கண்ட உண்மையெங்கே கதை சொல்லுது? – இங்கே
பொல்லாத பொய்கள் தானே ஊரை வெல்லுது!
ஏழையவன் வாழ்வைக் கண்டு கண்ணீர் சிந்தும்
கொஞ்ச நஞ்ச மானுடரைக் காணத் தானே உள்ளம் துள்ளுது..

பொறுமையின் சிகரம்.. திறமையின் அகரம்..
வறுமையில் சிறுவனும் சிக்கித் தவிக்க..
பெருமையின் மமதையில் அருமையை இழந்தவன்..
உரிமைகள் பறிப்பதைக் கையில் எடுக்க..

திருமண வயதினை அடைந்திட முன் அவளை..
மிருகங்கள் போல் சுற்றி சுற்றி வதைக்க..
அறிவினை இழந்து, உரிமையை இழந்து..
வாழ்க்கையை இழந்து துடிப்பது பார்!!

உதவி தேவையில்லை, இழிவைத் தவிர்த்திடு.. – கல்வி
தேடும் சிறுவனுக்கறிவைக் கொடுத்திடு..
உணவு தேவையில்ல, தொழில் வழி காட்டிடு.. – உரிமை
தேடும் அவனுக்கு வார்த்தை ஒதுக்கிடு..

Hashir Naufer


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media


அடி முதல் முடி வரை புழுதி படிந்து.. உடை அவன் அணிவான் உடலும் தெரிந்து.. அணு தினம் நகரத்தில் அலைந்து திரிந்து.. நரகமாய்ப் போகுது வாழ்க்கை எரிந்து.. ‘பிச்சைக்காரன், போக்கிரி, குடிகாரன் கவனம்..’ ‘காசு…

அடி முதல் முடி வரை புழுதி படிந்து.. உடை அவன் அணிவான் உடலும் தெரிந்து.. அணு தினம் நகரத்தில் அலைந்து திரிந்து.. நரகமாய்ப் போகுது வாழ்க்கை எரிந்து.. ‘பிச்சைக்காரன், போக்கிரி, குடிகாரன் கவனம்..’ ‘காசு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *