Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நரகம் 

நரகம்

  • 137

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நெருப்பு நாக்குகள் சிவந்து
நெடுஞ்சாலையாய் அகன்று
கனல் கம்பளமாய் விரிந்திருக்கும்
பாவிகளின் அரண்மனையிது

அகிலத்தில் அன்புப் பானம் சுரக்காத
கல்நெஞ்சங்களின் சொந்தங்களுக்கு
அன்பளிப்பாய்க் கிடைத்திடும்
அழியா அரியாசனமிது

தரணியில் சுவனத்தை தேடி
தம் கவனத்தை சொகுசுகளால் மூடி
மறுமையை மறந்த மாந்தர்களின்
முகத்திரை முழுதாய் கிழிக்கப்பட்டு
முத்திரையிடும் கொடூர தளமிது

சிற்றின்பச் சோலையில் புகுந்து
சிந்தனையில் வஞ்சனைகள் கொண்டோர்க்கு
சங்கையாளன் நிரந்தரமாய் நல்கிடும்
சர்ப்பங்களின் சந்நிதானமிது

வாழ்க்கை என்ற தேர்வினிலே
தோற்றுப்போன தேகங்கள்
வேகமாய் நுழையும் தளமும் இதுவே…..

இல்மா அனீஸ்
SEUSL
வெளியீடு : வியூகம் வெளியீட்டு மையம்

நெருப்பு நாக்குகள் சிவந்து நெடுஞ்சாலையாய் அகன்று கனல் கம்பளமாய் விரிந்திருக்கும் பாவிகளின் அரண்மனையிது அகிலத்தில் அன்புப் பானம் சுரக்காத கல்நெஞ்சங்களின் சொந்தங்களுக்கு அன்பளிப்பாய்க் கிடைத்திடும் அழியா அரியாசனமிது தரணியில் சுவனத்தை தேடி தம் கவனத்தை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *