நளீமிய்யா கலாபீட முகாமில் இதுவரை 2226 பேருக்கு சிகிச்சை

  • 9

அஜ்வாத் பாஸி

பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா இடைக்கால சிகிச்சை முகாமில் இதுவரை சுமார் 2226 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக வும், தற்போது 176.பேர் தங்கி நின்று சிகிச்சை பெற்று வருவதாகவும் நிலைய பொறுப்பாளர் டொக்டர் அவன்தி ரூபசிங்க நேற்று (09) தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி இடைக்கால சிகிச்சை முகாமில் களுத்துறை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுகின்ற ஆண் தொற்றாளர்கள் மாத்திரமே இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்தின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இராணுவத்தின் உதவியுடன் சிறந்த வைத்தியர் குழுவினர்களினால் மேற்படி நோயாளர்களுக்கு எவ்வித உயிரிழப்புகளுமின்றி சிகிச்சைகள் வழங்க முடிந்துள்ளதாக டொக்டர் அவன்தி ரூபசிங்க மேலும் தெரிவித்தார்.

இந்த முகாமின் குறைநிறைகள் தொடர்பில் அமைச்சர்களான ரோஹித்த அபேகுணவர்தன, பியல் நிசாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பளீல் ஆகியோர் தன்னை தொடர்பு கொண்டு கேட்டறிவதாகவும் மேலும் விசேடமாக நளீமிய்யா கலாபீட நிர்வாகம் வழங்கி வரும் ஆதரவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

அஜ்வாத் பாஸி பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா இடைக்கால சிகிச்சை முகாமில் இதுவரை சுமார் 2226 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக வும், தற்போது 176.பேர் தங்கி நின்று சிகிச்சை பெற்று…

அஜ்வாத் பாஸி பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீடத்தில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா இடைக்கால சிகிச்சை முகாமில் இதுவரை சுமார் 2226 பேர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக வும், தற்போது 176.பேர் தங்கி நின்று சிகிச்சை பெற்று…