Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நாடாளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் - பிக்கு, பெண்கள் உட்பட 47 பேர் கைது 

நாடாளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் – பிக்கு, பெண்கள் உட்பட 47 பேர் கைது

  • 11

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நாடளாவிய ரீதியில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று இடம்பெற்ற ஆர்பாட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்கள், பெண்கள், பிக்குகள், பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் என்று பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

பிரதானமாக அகுறஸ்ஸ, கொழும்பு, அட்டன் ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் பதிவாகியுள்ளன.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற சுற்றுவடத்திற்கு அருகே தனிமைப்படுத்தல் விதிகளை மீறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட  31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் ரக்கரவ்வே ஜினரத்ன தேரர் உள்ளிட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக, அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்துக்கு செல்லும் வழியில், முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதனால், அங்கு பதற்றமான நிலமையொன்று ஏற்பட்டது.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்படு செய்யப்பட்டது.

பிக்குகள், பெண்கள் என பலரையும் பொலிஸார் அள்ளிச்சென்றனர். இதனால், பெரும் பதற்றமான நிலைமையொன்று அவ்விடத்தில் ஏற்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறினர் என்றக் குற்றச்சாட்டின் கீழே இவர்களை, பொலிஸார் சடுதியாக பிடித்து, பொலிஸ் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு பொலிசார் வந்து, அவர்களை கைது செய்ய முயன்றபோது அங்கு அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.

அகுறஸ்ஸ நகரில் ஆர்ப்பாட்டம்

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி அகுரெஸ்ஸ பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் இருவர் உள்ளிட்ட குழுவினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போராட்டம் நடைபெறுவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவை பொலிஸார் பெற்றிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் புறக்கணித்ததற்காக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

பாராளுமன்ற எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று (08) பாராளுமன்றத்திற்கு முன்னால் போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கி மக்கள் சக்தியின் ஏனைய உறுப்பினர்களின் பங்கேற்புடன் இது இடம் பெற்றது.

இதில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் எம்.பியுமான மனோ கணேசன் மற்றும் கொழும்பு மாவட்ட எம்.பியான முஜிபுர் ரஹ்மான் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

சிரச, சக்தி, சியத நிறுவனங்களை தாக்கியழித்த கறுப்பு வரலாறும், ஊடக நிறுவன உரிமங்களை அரசியல் நோக்கில் வழங்கிய, ரத்து செய்த வரலாறும் இந்த ஆட்சியாளருக்கு இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள மனோ கணேசன், ஆனால், மீண்டும் இந்த வரலாறு திரும்ப முடியாது. நாம் உறுதியாக சிரச சக்தி ஊடக சுதந்திரத்தை ஆதரித்து நிற்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

சக்தி மற்றும் சிரச ஊடக வலையமைப்பின் ஒளிப்பரப்பு அனுமதிப்பத்திரத்தை சட்ட நடவடிக்கையின் ஊடாக பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியினர், பாராளுமன்றத்தில் நேற்று (07) கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். இதனால், சபைக்குள் அமளி துமளி ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை உடன் மீள பெறுமாறு வலியுறுத்தி அட்டனில் ஆரப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அட்டன் மணிக்கூட்டு கோபுரச்சந்திக்கு முன்பாக ஜே.வி.பியினர் இன்று (08.07.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அக்கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்கள் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என அரச தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த பொலிஸார், இவ்விடயத்தை சுட்டிக்காட்டி அதனை நிறுத்துமாறு வலியுறுத்தினர். எனினும், போராட்டக்காரர்களால் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. இதனால் பொலிஸாருக்கும், அரசியல் செயற்பாட்டாளர்களுக்குமிடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து நால்வர் அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் அட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதுகளுக்கான பிரதான காரணம்

பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் பொது நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற செயற்பாடுகள், மீள அறிவிக்கப்படும் வரை மேற்கொள்ளக்கூடாது என, பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள DDG (PHS) 1/DO2/713/2017/20 எனும் கடிதத்தின் அடிப்படையில் பொலிஸ் மாஅதிபரினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் பொது நிகழ்வுகள், ஆர்ப்பாட்டங்கள் போன்ற செயற்பாடுகள் காரணமாக, கொவிட்-19 தொற்றும் பாரிய அபாயம் காணப்படுவதால் இவ்வாறு ஒன்றுகூடுவதை மேற்கொள்ளக் கூடாது என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

குறித்த தனிமைப்படுத்தல் உத்தரவு தொடர்பில் அதனை மீறுவோர் தொடர்பில் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு பாராளுமன்ற சுற்று வடம், அகுறஸ்ஸ மற்றும் அட்டன் நகரில் ஆர்ப்பாட்டம் செய்த பெண்கள், பிக்கு, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட 47 பேர் கைது செய்யபட்டுள்ளனர். LNN Staff

 

நாடளாவிய ரீதியில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று இடம்பெற்ற ஆர்பாட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்கள், பெண்கள், பிக்குகள், பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் என்று பலரும் கலந்து கொண்டுள்ளனர். பிரதானமாக அகுறஸ்ஸ, கொழும்பு,…

நாடளாவிய ரீதியில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று இடம்பெற்ற ஆர்பாட்டங்களில் பல்கலைக்கழக மாணவர்கள், பெண்கள், பிக்குகள், பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் என்று பலரும் கலந்து கொண்டுள்ளனர். பிரதானமாக அகுறஸ்ஸ, கொழும்பு,…