Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நாடு நெருக்கடியில் பிரச்சினைகளுக்கு அரச தீர்வு அச்சுறுத்தல் - இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் 

நாடு நெருக்கடியில் பிரச்சினைகளுக்கு அரச தீர்வு அச்சுறுத்தல் – இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நாடு பாரதூரமான நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் பாதிப்பு மாத்திரமல்ல நாட்டை எங்கு  கொண்டு செல்கின்றனர் என்ற கேள்வியும் எழுக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வுககோரும் போது இறுதியில் ஒடுக்கு முறைதான் பதிலாக இருக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கொரோனாவால் பாரிய இழப்புகளை சந்தித்துள்ள சூழலில் நாம் மற்றுமொரு நெருக்கடிக்கும் முகங்கொடுத்துள்ளோம். கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் ஏற்பட்டுள்ள கப்பல் தீ விபத்தால் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளோம்.

எமது கடல் வலைய வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய நாசகரமான சம்பவமாக இது அமைந்துள்ளது.

சூற்றுச் சூழல் விஞ்ஞான நிறுவனம் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கும் தாக்கல் செய்துள்ளது. மீன்பிடித்துறைக்கு மாத்திரமல்ல எமது நாட்டின் உணவுகள் மற்றும் ஏனைய பல்வேறு துறைகளுக்கு நீண்டகால பாதிப்பை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.

உலகில் இரண்டு நாடுகள் இந்தக் கப்பலின் வருகையை நிராகரித்திருந்த சூழலில் எமது நாட்டுக்குள் எப்படி அனுமதிக்கப்பட்டதென கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் எதிராக கேள்விகள் கேட்கும் போது கருத்தியலை உருவாக்குபவர்களை அரசாங்கம் பேராசிரியர்களையும் அதிகாரிகளையும் அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யும் ஒரு நிலையே காணப்படுகிறது.

நாடு பாரதூரமான நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் பாதிப்பு மாத்திரமல்ல நாட்டை எங்கு  கொண்டு செல்கின்றனர் என்ற கேள்வியும் எழுக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வுககோரும் போது இறுதியில் ஒடுக்கு முறைதான் பதிலாக இருக்கும்.

அரச அதிகாரிகளை இந்த விடயம் தொடர்பில் கருத்துகளை வெளியிட வேண்டாமென கூறுகின் றனர்.

கருத்துச் சுதந்திரம் எமது அரசியலமைப்பில் உள்ளது. 20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட நாள் எமது நாட்டில் இருண்ட நாளாகும். நாட்டின் ஜனநாயகம் கேள்விக்குறியாகியுள்ளது.

இன்று நீதித்துறையின் சுயாதீனம் பற்றி சவால் ஏற்பட்டுள்ளது. தேர்தலொன்றை சுயாதீனமாக நடாத்த முடியுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இவற்றுக்கான அதிகாரிகளை நியமிக்கப்டுவது ஜனாதிபதியின் விருப்பத்திற்கமையவாகும்.

தோல்வியடைந்த அரசு இலங்கையின் ஜனநாயக உரிமைக்கு அச்சுறுத்தல் விடுப்பதையே ஏற்படுத்துவதையே எம்மால் அவதானிக்க முடிகின்றது.

கொரோனா தொற்றை சரியாக முகாமைத்துவம் செய்துள்ள நாடுகள் இன்று எங்குள்ளன. எமது வலையத்தை பாருங்கள்.

இன்று கொரோனாவிற்கு தடுப்பூசி ஏற்றச் சென்று பல மணிநேரங்கள் காத்திருந்து மேலும் நிற்க முடியாமல் முதியவர்கள் தடுப்பூசி ஏற்றாமலே வீடுகளுக்கு செல்கின்றனர்.

ஒரு சரியான ஒரு வேலைத்திட்ட​மொன்று  இல்லை, அவற்றுக்காக தயாராகுவதில்லை.  பி.சீ.ஆர் பரிசோதனைகளை சரியாக செய்வதில்லை. இன்று பி.சீ.ஆர் பரிசோதனையின் அளவு குறைவடைந்துள்ளது. ஆனால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் பி.சீ.ஆர் முடிவுகள் வருவதற்குள் குறித்த நபருடன் தொடர்புடைய பலருக்கு தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுவிடுகிறது.

மேலும் அரசாங்கம் அரசாங்கத்துடன் உள்ள நிபுணர்கள் மற்றும் சர்வதேச அனுபவம் பெற்றவர்களின் ஆலோசணைகளை அரசாங்கம் பெறுவதில்லை. மாறாக அவர்களை அச்சுறுத்தும் நிலையே உள்ளது.

எமது அண்மைய நாடான மாலைதீவில் கூட 59% மக்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. ஆனால் நாம் 7% குள்தான் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா கட்டுப்படுத்த நடவடிக்கைகளில் சுகாதார நிபுணர்களின் ஆலோசணைகளுக்கு பதிலாக அரசியல்வாதிகளின் செயற்திட்டமே நடைமுறைப்படுத்தப்படுகிறது. LNN Staff


 

 

நாடு பாரதூரமான நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் பாதிப்பு மாத்திரமல்ல நாட்டை எங்கு  கொண்டு செல்கின்றனர் என்ற கேள்வியும் எழுக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வுககோரும் போது இறுதியில் ஒடுக்கு முறைதான் பதிலாக இருக்கும் என்று…

நாடு பாரதூரமான நெருக்கடியான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் பாதிப்பு மாத்திரமல்ல நாட்டை எங்கு  கொண்டு செல்கின்றனர் என்ற கேள்வியும் எழுக்கிறது. பிரச்சினைகளுக்கு தீர்வுககோரும் போது இறுதியில் ஒடுக்கு முறைதான் பதிலாக இருக்கும் என்று…