Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
“நாட்டைவிட்டு வெளியேற மோடி அரசு கட்டாயப்படுத்தியது” – பெண் பத்திரிகையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு..! 

“நாட்டைவிட்டு வெளியேற மோடி அரசு கட்டாயப்படுத்தியது” – பெண் பத்திரிகையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

  • 2

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

தான் வெளியிட்ட செய்தியின் காரணமாக இந்தியாவை விட்டு வெளியேற மோடி அரசால் கட்டாயப்படுத்தப்பட்டேன் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Avani Dias: ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், ‘தான் வெளியிட்ட செய்தியின் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசால் கட்டாயப்படுத்தப்பட்டேன்’ எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏபிசி எனப்படும் ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனத்தின் தெற்காசிய பணியகத் தலைவராக பணிபுரிபவர் அவனி தியாஸ்.

இவர், அந்நிறுவனத்துக்காகக் கடந்த இரண்டரை ஆண்டுகளாக டெல்லியில் தங்கி பணிபுரிந்து வருகிறார். காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார், கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்த சர்ச்சைக்குரிய செய்தி ஒன்றை அவனி தியாஸ் சமீபத்தில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதை எல்லை மீறிய செயல் என கூறி அவரது விசாவை வெளியுறவுத்துறை அமைச்சகம் ரத்து செய்தது. இதனால், அவர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், ஏபிசி நிறுவனத்தின் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள நிஜார் கொலை குறித்த வீடியோவை இந்தியாவில் தடை செய்திருப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

Last week, I had to leave India abruptly. The Modi Government told me my visa extension would be denied, saying my reporting “crossed a line”. After Australian Government intervention, I got a mere two-month extension …less than 24 hours before my flight. 1/2

— Avani Dias (@AvaniDias) April 22, 2024

இதுகுறித்து செய்தியாளர் அவனி தியாஸ், ‘கடந்த வாரம் நான் திடீரென இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டியிருந்தது. ’நிஜார் கொலை குறித்த செய்தி, எல்லை மீறிய செயல்’ எனக் கூறி, விசா நீட்டிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்தது. மக்களவைத் தேர்தல் குறித்த செய்தி சேகரிக்கும் அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இதனால், ஜனநாயகத்தின் தாய் என பிரதமர் மோடி அழைக்கும், தேசிய தேர்தலின் முதல் நாள் வாக்குப்பதிவு குறித்த செய்திகளை சேகரிக்க முடியவில்லை. பின், ஆஸ்திரேலிய அரசு தலையிட்டதன் காரணமாக, இரண்டு மாதங்களுக்கு விசா நீட்டிக்கப்பட்டது’ என அவர் தன்னுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் வேதனையாக பதிவிட்டுள்ளார்.

Read More: PMO Modi | பிரதமர் மோடி பேச்சுக்கு அதிருப்தி.!! பாஜக சிறுபான்மை அணி தலைவர் அதிரடி நீக்கம்.!!

The post “நாட்டைவிட்டு வெளியேற மோடி அரசு கட்டாயப்படுத்தியது” – பெண் பத்திரிகையாளர் பரபரப்பு குற்றச்சாட்டு..! appeared first on 1NEWSNATION – Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

“}]]Read More 

​ 

[[{“value”:” தான் வெளியிட்ட செய்தியின் காரணமாக இந்தியாவை விட்டு வெளியேற மோடி அரசால் கட்டாயப்படுத்தப்பட்டேன் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். Avani Dias: ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர்…

[[{“value”:” தான் வெளியிட்ட செய்தியின் காரணமாக இந்தியாவை விட்டு வெளியேற மோடி அரசால் கட்டாயப்படுத்தப்பட்டேன் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார். Avani Dias: ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *