நாம் எதை நோக்கி நகர்கிறோம்.

  • 10

கடந்த சில நாட்களாக முகநூலில் பலரும் தமது பாடசாலைகளினதும், தமது உறவுகளினதும் பரீட்சை பெறுபேறுகளை இட்டு மிகவும் மகிழ்சி அடைந்தனர்.

பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி நாட்டில் இஸ்லாம் பாடம் சித்தியடைந்த மாணவர் தொகை 82.64% ஆகும். அத் தரவின் படி நோக்கும் போது 17% இற்கு மேற்பட்ட மாணவர்கள் இஸ்லாம் பாடத்தில் சித்தி அடையவில்லை. கிட்டத்தட்ட 28,000 மாணவர்கள் தோற்றிய இஸ்லாம் பாடத்தில் 23 ஆயிரம் மாணவர்கள் சித்தி அடைந்திருந்தாலும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இஸ்லாம் பாடத்தில் சித்தி அடைய தவறியுள்ளனர். பிற சமூகங்களுடன் ஒப்பிடும் போதும் பரீட்சைத் திணைக்களத்தின் அறிக்கையின் படி கூடுதலான அளவு மாணவர்கள் சித்தியடையாத சமய பாடமாக இஸ்லாம் பாடத்தை பார்க்க முடியும்.

ஒரு சமூகமாக நாம் இதற்கான காரணத்தை தேடி அறிய வேண்டும். இஸ்லாத்திற்கு எதிரான சவால்கள், முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாதம் என்றெல்லாம் நாங்கள் பந்தி பந்தியாக எழுதித் தள்ளுகின்றோம் .

சமூகம் படிப்படியாக அரிப்புக்கு உட்பட்டு கொண்டிருப்பதை நாங்கள் மறந்து விடுகின்றோம். பாடசாலைகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்யும் போது மாணவிகளும் கூடுதலாக சித்தி அடையாமை ஒரு மிகப்பெரிய அபாய எச்சரிக்கையாகும்.

ஆயிரக்கணக்கான மதரசாக்கள் இருப்பதாகவும் பல சமய நிறுவனங்கள் இருப்பதாகவும், ஆயிரக்கணக்கில் பள்ளிவாயல் இருப்பதாகவும் நாங்களும் கூறிக்கொள்கிறோம் பலரும் கூறுகின்றனர். இவைகள் இஸ்லாம் சமய அடிப்படை அறிவை வழங்க தவறி விட்டதா?

இஸ்லாம் ஒரு சம்பூரண வாழ்க்கைத் திட்டம் என்று நாங்கள் அடிக்கடி பேசிக் கொள்கின்றோம். அவ்வாறென்றால் முஸ்லிம் சமூகத்திலிருந்து இஸ்லாம் படிப்படியாக நீங்கி செல்கின்றதா? இந்த அடைப்படைகள் தொடர்பில் நாங்கள் கூடுதலான அளவு கவனம் எடுக்க வேண்டும்.

வாழ்க்கையில் கடைப்பிடித்தும், பாடசாலையில் கற்பித்தும், எமது இளம் தலைமுறையினர் இவ்வாறு இஸ்லாம் பாடத்தில் சித்தி அடையவில்லை என்பதை ஆய்வுக்குட்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

சில நேரம் மொழி அறிவின்மையே இதற்கான காரணமாக சிலர் முன் வைக்க முடியும் ஆனால் பரீட்சை திணைக்களத்தின் புள்ளி விவரங்களை பார்க்கும் போது மொழி ரீதியான காரணத்தை விட வேறு காரணங்கள் இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.

முஸ்லீம் சமூகத்துக்கு முன்னால் பாரிய பிரச்சினைகள் இருப்பது உண்மைதான் ஆனால் இதை சரி செய்வதற்கான மிகச் சிறந்த தளம் பாடசாலைகள் என்பதை நாங்கள் மறந்துவிடக் கூடாது. ஒவ்வொரு பள்ளியிலும் தமது பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளின் பரீட்சை முடிவுகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும். பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் கடுமையாக உழைத்தாலும், சமூகத்தின் பங்களிப்பு கிடைக்காமையினால் பிள்ளைகளின் பரீட்சை பேறுகள் குறைகின்றன.

பெருமளவு ஆண் மாணவர்கள் பரீட்சையில் சித்தி அடையாமல் சமூகத்துக்கு மிகப்பெரிய பாரமாக மாறுவதோடு, அவர்கள் இந்த சமூகத்தை எதிர்காலத்தில் பிழையாக வழி நடத்துவதற்கும், சமூகம் பற்றிய பிழையான பதிவை ஏற்படுத்துவதற்கும் காரணமாக அமைவார்கள் என்பதை நாம் உணர்ந்து தொழிற்பட வேண்டும்.

பாடசாலைகள் தொடர்பில் ஒரு மிகப்பெரிய கவனயீர்ப்பு தேவைப்படுகிறது. இதனை இந்த ரமழான் மாதத்தில் ஒரு பேசுபொருளாக மாற்றவேண்டும். கிராமங்கள்தோறும் இதற்கான நேரான கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும்.

அதிபர்களையும், ஆசிரியர்களையும் மாற்றுவது பிரச்சினையை இன்னும் ஆழமாக்குமே தவிர தீர்வுகளை கொண்டுவராது. பிரச்சினையின் உண்மையான மூலத்தை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை முன்வைத்து தொடர்பில் ஒவ்வொரு கிராமமும் செயலமர்வுகளை நடத்த வேண்டும்.

சமூக வலைத்தளங்களில் தேவையற்ற கலந்துரையாடல்களை நிறுத்திவிட்டு ஊர் மட்டங்களில் இவ்வாறான கலந்துரையாடல்களை ஆரம்பிக்கவேண்டும்.

எம் என் முஹம்மத் .

கடந்த சில நாட்களாக முகநூலில் பலரும் தமது பாடசாலைகளினதும், தமது உறவுகளினதும் பரீட்சை பெறுபேறுகளை இட்டு மிகவும் மகிழ்சி அடைந்தனர். பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி நாட்டில் இஸ்லாம் பாடம் சித்தியடைந்த மாணவர் தொகை…

கடந்த சில நாட்களாக முகநூலில் பலரும் தமது பாடசாலைகளினதும், தமது உறவுகளினதும் பரீட்சை பெறுபேறுகளை இட்டு மிகவும் மகிழ்சி அடைந்தனர். பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி நாட்டில் இஸ்லாம் பாடம் சித்தியடைந்த மாணவர் தொகை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *