நித்யா… அத்தியாயம் -11

  • 19

அடுத்த நாள் காலையிலும் பவித்ராவுக்கோ ஒரே குழப்பமாகவே இருந்தது. அவள் கல்யாணியின் அறைக்குச் சென்றாள். அங்கு கண்ட காட்சி அவளை நிலை குலைய வைத்தது. ஓடோடி அவளருகே சென்று,

”ஐயோ…. சின்னக்கா… என்ன காரியம் நீ பண்ற…. பிளீஸ் கத்திய கீழ போடு…..”

”ஆ… என்னால இனிமே வாழ முடியாதுடீ… ஒங்க மச்சான் செத்துட்டானாம். இப்போ தா போன் வந்திச்சு..” கதறிக்கொண்டே கத்தியை கையருகே கொண்டு சென்றவளின் கைகளை ஒரேயடியாகப் பாய்ந்து பிடித்து,

”அக்கா…. என்ன நீ சின்னபுள்ள மாதி பண்ற…?  பிளீஸ் இங்க வா…. ” கைகளைப் பிடித்துக்கொண்டே அவசரமாக வினோத்திற்கு அழைப்பெடுத்தாள்.

”ஹலோ…. வினோத் அண்ணா… மச்சான யாரோ… யாரோ…..” அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை. அழுகை பொத்திக்கொண்டு வந்தது.

”என்ன சொல்ற? அது பொய்யா கூட இருக்கலாம். இங்க பாரு இந்த கட்டதுல நீயும் சேர்த்து அழாத… அக்காவ பாத்துகோ.. நா வரன்…” கல் போன்று உட்கார்ந்திருந்த கல்யாணியினருகே சென்று கைகளால் முகத்தை வருடியபடி,

”இங்க பாரு… யாரு ஒனக்கு போன் பண்ணாங்க?” பீதியுடன் அவளை நோக்கி,

”தெரியாது… கத்தி பேசினாங்க  தெரயுமா? என்னால….” அழத் தொடங்கியவளின் கைகளை அழுத்தி விட்டு,

”ஷ்… அழாத… ” ஏதோ யோசித்தவள் சட்டென கல்யாணியின் கை பேசியை எடுத்து ஆராய்ந்தாள்.

”இந்த நம்பராலயா கோல் வந்திச்சு… பாரு? ” போனை காட்டியவளைப் பார்த்து, ”ஆமா…”

” ம்…கொஞ்சம் இரு… நா ஒன்னு பண்ண..” மீண்டும் அதை எடுத்தவள் அந்த இலக்கத்துக்கே தொடர்பு கொண்டாள்.

”சீ… என்ன ஒவ்ட் ஒப் ஸேவிஸ் என்டு வருது…” கூறிக்கொண்டிருக்கும் போதே மணியொலித்தது.

”வினோத் அண்ணா….” கதவைத் திறந்ததும்,

”ஆமா… கல்யாணிய யாரு போன் பேசினது?” புருவத்தை உயர்த்தியபடியே நடந்து அவளருகே அமர்ந்தான். அவர்களை திரும்பிப் பார்த்தவள்.

”வினோத் அண்ணா… நா அந்த நம்பருக்கு ட்ரை பண்ண… பட் நோ வர்கிங்….” கைகளை விரித்தவளைப் பார்த்துக் கொண்டே,

”ஓ… அப்படியா? சரி… நீ கவலபடாத… நா பொலிஸ் ஸ்டேஷன் போயிதா வந்ததே….” அவனை உற்று நோக்கி விட்டு,

‘நீ தானே நேத்து சொன்ன பொலீஸ்கு போகாம பாத்துக சொல்லி… இப்போ…’ யோசித்தவளைப் பார்த்து,

”பவித்ரா…. இங்க பாருங்க நா நேத்து சொன்னன் தா… பட்… இப்போ பெரிய விஷயமாகிடுத்தே அதான்”

”ஓ… அப்டியா? சரி…” அவனையே நோட்டம் விட்டாள்.

”பவித்ரா… நீ என்னமோ சொல்ல வர்ர போலிருக்கே?” திடீரென அவன் கேட்ட கேள்வியால் திடுக்கமுற,

”ஐயோ…. ஒன்னுமில்ல…”

”ஆ… அப்போ ஓகே…” கல்யாணியின் பக்கமாக திரும்பி,

”நீங்க தைரியமா இருக்கணும் புரிஞ்சுதா? டோன்ட் வொரி…” கூறிவிட்டு எழுந்தவன்.

”பவித்ரா… நா போய் அப்றம் வர்ரன். கவனம்.” கைகளை காட்டியவன் சென்றதும்,

‘இங்க என்ன நடக்குது ஐயோ.’

தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தாள்.

****************************

”டேய்… விடுடா…. ஏன்டா என்ன இங்க கட்டி வெச்சிருக்கீங்க..”

இருள் படிந்த அறையிலிருந்து கார்த்திக் கத்தினான். சிறிது நேரத்தில் உயரமான இளைஞனொருவன் அங்கு வந்தான். கார்த்திக் அவனை பார்த்தான். ஆனால் அடையாளம் காண முடியவில்லை. முகத்தில் கருப்புத் துணியை கட்டியிருந்தான்.

” யாருடா நீ? எதுக்கு இங்க கட்டி வச்சிருக்க.” மீண்டும் கத்தியவனை நோக்கி சொடக்குப் போட்டவன்.

”இங்க பாரு…. அது ஒனக்கு தேவயில்லாத விசயம்… பொத்திட்டு இரு.”

”என்ன? பொத்திட்டீக்குறதா? பைத்தியம் மாதி பேசாத! சொல்லு எதுக்காக.” பேசத்தொடங்கியவனின் வாயில் குத்து விட்டவன்.

”ஏய்… வார்த்தய அளந்து பேசு… என்ன புரிஞ்சுதா? இல்லேன்னா..” மீண்டும் அவனை நோக்கி கை உயர்த்தியவனை,

”ஏய் போதும். அவன அடிக்காத.” பின்னாலிருந்து ஒலித்த குரலுக்கு கட்டுப்பட்டவன் போல கைகளை எடுத்துக் கொண்டான். அந்த உருவம் இப்போது கார்த்திக்கை நோக்கி வந்துகொண்டிருந்தது.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

அடுத்த நாள் காலையிலும் பவித்ராவுக்கோ ஒரே குழப்பமாகவே இருந்தது. அவள் கல்யாணியின் அறைக்குச் சென்றாள். அங்கு கண்ட காட்சி அவளை நிலை குலைய வைத்தது. ஓடோடி அவளருகே சென்று, ”ஐயோ…. சின்னக்கா… என்ன காரியம்…

அடுத்த நாள் காலையிலும் பவித்ராவுக்கோ ஒரே குழப்பமாகவே இருந்தது. அவள் கல்யாணியின் அறைக்குச் சென்றாள். அங்கு கண்ட காட்சி அவளை நிலை குலைய வைத்தது. ஓடோடி அவளருகே சென்று, ”ஐயோ…. சின்னக்கா… என்ன காரியம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *