Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நித்யா… அத்தியாயம் -3 

நித்யா… அத்தியாயம் -3

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

 ”அதயே நெனச்சி மனச கொழப்பிக்காத.. வா உள்ளுகு…”

அவளை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள். அறைக்குள் சென்றவள்  ”சின்னக்கா….. நாம எவ்வளவு கஷ்டத்த அனுபவிச்சிருக்கோம். இப்பவும் மனசு வலிக்குதுகா…”  குரலில்  சோகம் கலந்திருந்தது.

அவளையே பார்த்தபடி நின்றவள்

”ஓ மனசுல என்ன இருக்குன்னு தெரியல? ஆனா… பிளீஸ் ஏகிட்ட சொல்ல மாட்டியா?” கெஞ்சும் குரலில் கேட்டாள்.

புன்னகைத்தவாறே ” நேரம் வரும் போது நீயே பாரு….” கல்யாணி பெருமூச்சுடன் வெளியேறினாள்.

தனது ஆடைகளை பையிலிருந்து அடுக்கிக் கொண்டிருந்தவள் ஏதோ விழ குனிந்து எடுத்தாள். ”ஓ… மை கோட்…. இத கவனமா வெக்கனும். இந்த பொடோல தா விசயமே இருக்கு….” என்றபடி அந்த கறுப்பு வெள்ளை புகைப்படத்தை அலுமாரியினுள் வைத்தாள். மணிச் சத்தம் கேட்டு பவித்ரா முன் வாசல் பக்கமாக ஓடினாள். கதவைத் திறந்ததும்,

”கார்த்திக் மச்சான்… ” வாயைப் பிளந்தவளைப் பார்த்த கார்த்திக் சிரித்துக் கொண்டே ”வட் அ ஸப்ரய்ஸ்… பவி…நீயா?”

” ஆமா… வேறயாரு? ஆளே மாரிட்டீங்க. இந்த ஒரு வரிஷத்துல…”

”ம்..ம்.. என்ன கிண்டல் பன்றதுலே இரு எப்பவும்…” பொய்க்கோபம் காட்டியபடியே சென்றவனைப் பார்த்து புன்னகைத்தவள்

”சின்னக்கா… ஓ ஆளு வந்திருக்கு…ஓடிவா…”

”அடி…. ஏன்டி பழயத நீ இன்னும் விடல… இப்போ அவரு ஏ ஹஸ்பன் டீ….” கன்னங்களில் செம்மை படர்ந்ததும்

”போதும்…போதும்… சின்னக்கா தாங்கமுடியல…” பவித்ரா அவளின் பட்டான கன்னத்தைத் தட்டி விட்டு,

”சின்னக்கா ஓ கன்னோம் அப்டியே…” மேலே கூற முடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். அருகில் வந்த கார்த்திக் கைகளை காட்டி ”என்னாச்சு….”

” இல்ல… பழய ஞாபகம்… ம்…. வாங்க சாப்பிட… நா அவள கூட்டி வாரன்..”

கார்த்திகின் முகத்திலிருந்த புன்னகை காணாமல் போனது.

”சின்னக்கா… என்னால… சாப்பிட முடியாது போ….” வழிந்த கண்ணீரைத் துடைத்தபடியே கூறியவளை நோக்கி,

”இங்க பாரு.. பவி… முடிஞ்சத பத்தியே யோசிச்சதுல பலனில்ல… வா சாப்பிட… கல்யாணி ஒனக்கு புடிச்சத சமச்சிருக்கா… வா…” கார்த்திக்கின் வார்த்தைகளில் கண்களைச் சுருக்கி ”மச்சான்… நடந்தத எப்படி மறக்க? அதுக்கு எனக்கு மனசில்ல….”

”இங்க பாருடா… ஓ நல்லதுகு தா சொன்ன… வா…”

மூவருமாக சாப்பிட்டு முடித்து ”சின்னக்கா… சூப்பர்… ஓ கை பக்குவம்.. மச்சானுக்கு தினம் தினம் விருந்து தா… நமக்கு தா.. ” கைகளை விரித்து கண்களை பட்டென அடித்தவளின் கன்னத்தை லேசாகக் கிள்ளி

”போடி… ஒனக்கு எப்பவும் எல்லாமே ஜோக் தா…”

” ஆ… ஒன்னு சொல்ல மறந்துட்ட.. சனிக்கெழமை  நாளேக்கி தானே… மாணிக்க வாசகர் அவர்ட வீட்டுக்கு வரச் சொன்னாரு. கல்யாணி…. பவியயும் கூட்டி போகலாம்…”

கைகளை கழுவிக் கொண்டிருந்தவள் சட்டென நிமிர்ந்து ”என்ன? அழையா விருந்தாளியாவா?”

”போடி… அது ஓ மச்சானோட பெரியப்பா வீடு..  வா போலாம்.. பேத்திக்கு காது குத்து.. வா..”  கல்யாணியின் வார்த்தைகளுக்கு சம்மதம் தெரிவிப்பது போலவே தலையாட்டிவிட்டுச் சென்றவளை ஆச்சரியமாகப் பார்த்து ,

”வீட்லயினா.. இப்படி கூப்பிட்டா வரவே மாட்டா… இப்ப பாருங்க…”

அவளது தலையைத் தட்டி விட்டு  ”கல்யாணி…ஓ தங்கச்சிக்கு இப்ப தேவ ரெஸ்ட்…. நா சொன்ன தானே… வா..”

என்றபடியே கார்த்திக் அறைப் பக்கம் நடை கட்டினான்.

**********

அறைக்குள் வந்தவள் பையிலிருந்து தனதாடைகளை அலுமாரியில் அடுக்கத் தொடங்கினாள். அப்போது ஏதோ ஒரு காகிதம் தரையில் விழுந்தது.  அதை எடுத்தவளுக்கு ஆச்சரியம்.

தொடரும்….
Rifdha Rifhan
SEUSL

 ”அதயே நெனச்சி மனச கொழப்பிக்காத.. வா உள்ளுகு…” அவளை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள். அறைக்குள் சென்றவள்  ”சின்னக்கா….. நாம எவ்வளவு கஷ்டத்த அனுபவிச்சிருக்கோம். இப்பவும் மனசு வலிக்குதுகா…”  குரலில்  சோகம் கலந்திருந்தது. அவளையே…

 ”அதயே நெனச்சி மனச கொழப்பிக்காத.. வா உள்ளுகு…” அவளை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள். அறைக்குள் சென்றவள்  ”சின்னக்கா….. நாம எவ்வளவு கஷ்டத்த அனுபவிச்சிருக்கோம். இப்பவும் மனசு வலிக்குதுகா…”  குரலில்  சோகம் கலந்திருந்தது. அவளையே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *