Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நியுஸ்லாந்து தாக்குதல் தொடர்பான இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை - Youth Ceylon

நியுஸ்லாந்து தாக்குதல் தொடர்பான இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரால் இன்று ஆக்லாந்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் கேட்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைவதாக இலங்கையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படும் 22 அமைப்புகள் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நியூசிலாந்தில்‌ நடைபெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதலை நாங்கள்‌ மிக வன்மையாகக்‌ கண்டிப்பதோடு, இதனால்‌ காயமடைந்தவர்களுக்கு எமது வருத்தத்தை தெரிவித்துக்‌ கொள்கின்றோம்‌. தாக்குதல்தாரி இலங்கையைச்‌ சேர்ந்தவர்‌ என்பதை அறிந்து மிகவும்‌ கவலையடைகின்றோம்‌.

அனைத்து இலங்கையர்கள் சார்பாகவும், குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமூகத்தின் சார்பாகவும், இந்த அர்த்தமற்ற மற்றும் பயங்கரமான வன்முறைச் செயலை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிப்பதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டன் அவர்களின் அறிக்கையுடன் தாம் இணங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர்‌ ஜே. ஆர்டெர்ன்‌ இத்தாக்குதல்‌ ஒரு தனிநபரால்‌ நடத்தப்பட்டது; இதற்கு மதம்‌ அல்லது இனம்‌ அல்லது கலாச்சாரம்‌ தொடர்புபட்டதல்ல என்று குறிப்பிட்டுள்ளது பாராட்டத்தக்கதாகும்‌. வன்முறை தீவிரவாத செயல்களை தேசியம், இனம், கலாச்சாரம் அல்லது மதத்துடன் தொடர்புடுத்தக்கூடாது.

துக்கமான இந்த தருணத்தில் நியூசிலாந்து மக்களுக்கு எங்கள் மனவருத்தத்தை  கொள்கிறோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்டவர்களுடனும் அவர்களது குடும்பத்தினருக்கும் உள்ளது.

“யார் ஒரு அப்பாவி உயிரைக் கொன்றாலும் அவர் மனித குலத்தையே கொன்றார் போலும் … மேலும் ஒரு உயிரைக் காப்பாற்றினால் அது எல்லா மனிதர்களின் உயிர்களையும் காப்பாற்றியது போலாகும்” (புனித குர்ஆன் 5:32) என்று குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரால் இன்று ஆக்லாந்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் கேட்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைவதாக இலங்கையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படும் 22 அமைப்புகள் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று…

நியூசிலாந்தில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரால் இன்று ஆக்லாந்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் கேட்டு அதிர்ச்சியும் வருத்தமும் அடைவதாக இலங்கையில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்படும் 22 அமைப்புகள் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று…