Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நிறைவேற்றதிகாரம் 

நிறைவேற்றதிகாரம்

  • 26

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

சிங்க புத்திரன்

உகண்டாவின் தென் கிழக்கு பகுதியில விக்டோரியா ஏரிக்கு அருகில உள்ள தம்ப தீவிலுள்ள (Damba Island) பள்ளிவாசலின் பெயர் கல்யாம்புதி பள்ளிவாசல். (Kalyambuzi Mosque).

இப்பள்ளிவாசலுக்கான நிர்வாக சபை தேர்தல் கடந்த ஆறு ஆண்டு கால போராட்டத்திற்கு பின் அன்று உகண்டாவின் 38 வது விடுதலை தினமாகிய ஜனவரி 26 அன்று இடம்பெற்றது.

ஊர் மக்களின் எதிர்ப்பை பெற்ற, உகண்டா முஸ்லிம் உயர் சபையின் ஆதரவு பெற்ற நிர்வாக சபையிடமுள்ள பள்ளிவாசலை குறித்த ஊர் மக்கள் கேட்டதோ 3ஆண்டுகளுக்குத்தான் ஆனால் அதனை வழங்குவதற்குள் கடந்து விட்டது ஆறு ஆண்டுகள்.

அதற்குள் குண்டு, கொரோனா என பல காய் நகர்த்தல்கள், திட்டமிட்ட குழப்பங்கள் என நடாத்தியும் ஊர் மக்கள் அவ் வலையில் சிக்கவில்லை.

அன்றும் ஊரில் குழப்பங்கள் வெடிக்கலாம் என்று போலீஸ் மற்றும் இராணுவ பிரிவின் பாதுகாப்புடன்தான் தேர்தலும் நடந்தது. ஆனாலும் உகண்டா முஸ்லிம் உயர் சபையோ முன்னாள் உறுப்பினர்களோ எதிர்பார்த்த கலவரங்கள் நடக்கவில்லை.

அன்று பிற்பகல் 4மணிக்கு தேர்தல் முடியுது. 5 மணியாகும் போது தேர்தல் முடிவு வெளியாகுது.

அதன்படி பெரோஸ் அப்பாஸி, ஜாமில் முகுலு, அப்துல் நாதுலி, முஸ்தபா அத்ரிஸி, ரமழான் காமிஸ், மொஹமட் முருலி, யூஸுப் கொவோன் ஆகிய ஏழு பேர் தெரிவாகின்றனர். உகண்டா முஸ்லிம் சபையின் புள்ளியும், முன்னாள் நிர்வாக சபை உறுப்பினருமான மொஸெஸ் அலியோ 9 வது இடம்.

உடன் குழுமியிருந்த இளைஞர்கள் தேர்தல் முடிவுகளை சமூக வலைத்தளங்களில் பரப்ப சில மணி நேரங்களில் இது தொடர்பான செய்தியறிக்கை, 1954 இல் உகண்டா ஒலிபரப்பு சேவையாக ஆரம்பிக்கப்பட்டு 1980 இல் வானொலி உகண்டா என பெயர் மாற்றப்பட்ட உகண்டா அரச வனொலி சேவையிலும் ஒலிபரப்படுகிறது.

தேர்தல் முடிவுகள் வந்ததும் அங்கு குழுமியிருந்த பொது மக்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் கூறவே மக்களும் செல்கின்றனர். வெற்றி பெற்ற ஏழு பேருக்கு மாத்திரம் நிற்குமாறு உகண்டா முஸ்லிம் உயர்சபை உத்தியோகத்தர் யூசுப் லுலே கூறுகிறார்.

கூட்டம் ஆரம்பிக்குது, ஸலாம் கூறி ஆரம்பிக்கிறார் யூசுப் லுலே. முஸ்லிம் உயர் சபைக்கு உள்ள சர்வாதிகாரம் பற்றி கூறுகையில், “ஊர் மக்கள் இணைந்து ஏழு பேரை தெரிவு செய்தாலும் நமக்கு அதனை 15 வரை அதிகரிக்கிற அதிகாரம் இருக்குது.” என்கிறார்.

“இது என்ன அநியாயம் ஆசியாவின் முத்தான ராஜபக்ஷாக்கள் ஆளூர லங்காவிலும் சட்டத்தில் இந்தளவுக்கு ஓட்டைகள் இல்லை. அந் நாட்டு பார்ளிமன்ட் இலக்ஷன்ல பல பிரபலங்கள் தோற்றார்கள். அதற்காக பார்ளிமன்ட் உறுப்பினர் எண்ணிக்கையை 225 இல் 252 ஆக அதிகரிக்கவில்லை. ஆனாலும் அந்த நாட்டின் சட்டத்தில் உள்ள ஒட்டை ஒன்றினால் 196 தேர்தல் மூலம் தெரிவு செய்ற மீதி 29 நஷனல் லிஸ்ட்ல அந்த ஓட்டையால தோல்வியடைந்த பின் வந்த ரணில் ராஜபக்ஷ இன்று ஜனாதிபதியும் ஆகி விட்டார்.

நம்ம ஊர் பள்ளி லக்ஷன்ல நஷனல் லிஸ்ட் இல்ல, அதே மாதிரி இந்த ஊர் மக்கள் வொட்டு போட்டது 7 பேருக்குதான் 9 பேருக்கோ 11 பேருக்கோ அல்ல.

எனவே இப்படி அதிகரிக்க உங்க சர்வாதிகாரத்தை பயன்படுத்தி ஊரில் பிரச்சினய ஏற்படுத்த வாணம்.” என பட பட வென பேசி முடித்தான் ரமழான் காமிஸ்.

ஏனைய உறுப்பினர்களும் மேலதிகமாக அதிகரிக்க முடியாது என உறுதியாக நின்றனர்.

உடன் கூட்டத்தில் பிரச்சினையை தூண்டினார் ரமலான் காமிஸ் என்று கூட்டத்தை இடை நடுவில் நிறுத்திச் சென்றார் யூசுப் லுலே.

இரண்டு வாரங்களாகியும் புதிய நிர்வாகம் உத்தியோகபூர்வமாக பதவி ஏற்கவில்லை. அதற்குள் அடுத்த இரு மாதங்களில் வரவுள்ள ரமழானில் ஈப்தாருக்கு ஈச்சம்பழம் பெற தகுதியுள்ள குடும்பங்களின் பெயர்பட்டியலை வெளியிட்டது பழைய நிர்வாகம்.

மூன்றாம் வாரம் யூசுப் லுலே தலைமையில் அடுத்த கூட்டம் பழைய மூவரும் புதிய என்வரும் (8) மொத்த பதினொருவருடன் இனிதே இடம் பெற்றது அடுத்த மூவாண்டுக்கான பதவியேற்பு. அன்று எதிர்த்த ஏழ்வரும் இன்று மனம் காத்த மர்மம் தெரியாமல் தவித்தனர் ஊரவர்.

யாவும் கற்பனை

சிங்க புத்திரன் உகண்டாவின் தென் கிழக்கு பகுதியில விக்டோரியா ஏரிக்கு அருகில உள்ள தம்ப தீவிலுள்ள (Damba Island) பள்ளிவாசலின் பெயர் கல்யாம்புதி பள்ளிவாசல். (Kalyambuzi Mosque). இப்பள்ளிவாசலுக்கான நிர்வாக சபை தேர்தல் கடந்த…

சிங்க புத்திரன் உகண்டாவின் தென் கிழக்கு பகுதியில விக்டோரியா ஏரிக்கு அருகில உள்ள தம்ப தீவிலுள்ள (Damba Island) பள்ளிவாசலின் பெயர் கல்யாம்புதி பள்ளிவாசல். (Kalyambuzi Mosque). இப்பள்ளிவாசலுக்கான நிர்வாக சபை தேர்தல் கடந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *