Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நிலவு தொடும் பயணத்தின் சாரல்கள் 

நிலவு தொடும் பயணத்தின் சாரல்கள்

  • 28

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

எண்ணங்கள் எங்கே சென்றாலும்
நினைவுகள் வேறு இடம் நின்றாலும் -நெஞ்சின்
நினைவலைகளில் எல்லாம் நிறைந்து நிற்கின்றது
கடந்து வந்த பயணத்தின் சுவடுகள்.

தவிர்க்க முடியாத சில கணங்கள்
கடந்து தான் ஆக வேண்டும் என்கிற நாட்கள்
இவற்றையெல்லாம் தாங்கும்.
தாண்டும் வேலைகளில் மனதின்
கற்பனைகளுக்கெல்லாம் நிஜமான
ஓர் உருவம் தோன்றி- அந்நாட்களை
அழகாக்கிய சந்தர்ப்பங்கள் ஏராளம்

ஆயிரம் கோடி கனவுகள் – பல ஆயிரம்
எதிர்பார்ப்புக்கள், எண்ணங்கள்
இவற்றிற்கெல்லாம் நடுவே- சில
கோட்பாடுகளும் விதிமுறைகளும் – பல
எழுதப்படாத சட்டங்களும்
பயணப்பட வேண்டிய பாதையின்
தடைக்கற்களாய். – சில வேலைகளில்
அவை தேவை- சில வேலைகளில்
அவை முட்டுக்கட்டை

விருப்பத்திற்கும் தேவையிற்கும்
இடையே இருக்கும் திரையிற்குத் தெரியும் – பல
பொறுமைகளின் உச்சமும், பெறுமதியும்
சில சமயங்களில் தன்னிலைக்கைதியாய்.
பல சமயங்களில் சூழ்நிலைலை கைதியாய்
“வாழ்கை ஒன்றும் ஒத்திகை அல்லவே!”
எனும் வாழ்வின் யதார்த்தத்தை
ஏற்றுக் கொண்டு வாழப்பழகிய நாட்கள் அவை.

நிலவை அழகாக்கத் தானே
வானம் இருளைப் பூசிக்கொண்டது என்பதை
உணர்ந்த பொழுது தான்- வாழ்வில் ஏற்பட்ட
சில இருள்களையும் இலகுவாய் கடக்க முடிந்தது
இதயம் கூட இடைவெளி விட்டுத்தான் துடிக்கின்றது
என்பதை உணர்ந்த பொழுது தான்
விழுந்த சில இடைவெளிகளையும்
தாண்டி முன்னேற முடிந்தது

இந்தப் பயணத்தில் மறக்க முடியாத நிமிடங்கள்
பல- நினைவுகளுக்குத் தானே மறதி என்பது
மாறாக உணர்வுகளுக்கு அல்லவே!

நாளை ஏதோ ஓர் இடத்தில்;
சந்தர்ப்பத்தில்; நிமிடத்தில்
இன்றைய வினாக்கள் தேடல்கள் பயணங்களுக்கெல்லாம் பதில் கிடைக்கும் – அவை
பொக்கிஷம், புனிதம்.

ஜாஸிரா ஜுனைதீன்
கொழும்பு பல்கலைக்கழகம்
(தொழிநுட்பபீடம்)

எண்ணங்கள் எங்கே சென்றாலும் நினைவுகள் வேறு இடம் நின்றாலும் -நெஞ்சின் நினைவலைகளில் எல்லாம் நிறைந்து நிற்கின்றது கடந்து வந்த பயணத்தின் சுவடுகள். தவிர்க்க முடியாத சில கணங்கள் கடந்து தான் ஆக வேண்டும் என்கிற…

எண்ணங்கள் எங்கே சென்றாலும் நினைவுகள் வேறு இடம் நின்றாலும் -நெஞ்சின் நினைவலைகளில் எல்லாம் நிறைந்து நிற்கின்றது கடந்து வந்த பயணத்தின் சுவடுகள். தவிர்க்க முடியாத சில கணங்கள் கடந்து தான் ஆக வேண்டும் என்கிற…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *