நீங்க நின்னுட்டு போக வரல்லயா மகள்?

  • 8

திருப்பு முனை
பாகம் 12

மணி 7.30 ஐ காட்டியது. அப்போது தான் அவர்கள் வந்திறங்கினர். வாசலில் நின்றிருந்த மாமி இவர்களை வரவேற்றாள். லீனா ஸலாத்துடன் மாமியை கட்டியணைத்தாள்.

“வாங்க மேடம். சரியான புடிவாதம் தான் எனா ஒஙலுக்கு?” என்று மாமி கூற,

“இல்லயே” என்று கூறிக் கொண்டே லீனா உள்ளே சென்றாள். வீட்டில் எவரும் இல்லை.

“சாச்சி எங்க?”

“அவங்க தான் இப்ப உம்மா கிட்ட நிக்கிற.”

“ஆ அப்ப மத்தவங்க எல்லாம் எங்க?”

“புள்ளகள் கடையில மாமாவோட இரிக்கிறான்வள். அப்ராக்கு நைட் க்ளாஸ் இப்ப கொஞ்சத்துல வருவா.”

வீட்டில் தாய் இல்லாதது அவளுக்கு ஏதோ போலிருந்தது. தாயின் அறையை எட்டி பார்த்தாள். அது இருளில் வெறுச்சோடிக் கிடந்தது. முன்பு ஒருமுறை வந்த போது அந்த அறையில் தாயுடன் அவள் கிண்டலடித்து சிரித்து மகிழ்ந்தது கண் முன் வந்தது.

அவள் மனம் கனத்தது. தாயின் மடியில் தலை வைத்து தனது மனதில் உள்ள சோகங்களை சொல்லி வாய் விட்டு அழனும் போலிருந்தது அவளுக்கு.

சிறிது நேரத்தில் அப்ராவும் க்ளாஸ் முடிந்து வந்திருந்தாள். லீனாவுக்கு குஷி. அவளுடன் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தாள்.

“என்னா life எல்லாம் எப்படி போகுது தாத்தி?”

அப்ரா கேட்டாள்.

“அல்ஹம்துலில்லாஹ். நல்லா போகுது.”

ஷரீப்பை பற்றி குறை கூற அவளுக்கு அப்போது மனம் வரவில்லை. ஏனென்றால் ஷரீப்பின் அன்றைய திடீர் மாற்றமே அதற்கு காரணம்.

வாசலில் ஷரீப் ஆட்டோ driver உடன் கதைத்து கொண்டிருந்தான். பிறகு கடையை மூடிவிட்டு மாமாவும் தம்பிமாரும் வரவே வீடே கலகலப்பாகியது.

***************

மறுநாள் காலையில் தாயைப் பார்க்க வைத்தியசாலைக்கு சென்றிருந்தாள். தாயை கட்டியணைத்துக் கொண்டு அழுதாள். மர்யமும் அழுதாள். பிறகு லீனா தாயின் கண்ணீரை துடைத்து விட்டு,

“அழாதீங்க உம்மா? இப்ப எப்படி ஒஙல்க்கு?”

“இப்ப பரவல்ல நாளக்கி டிக்கட் வெட்டுவ. நீங்க ஊட்ல தானே இரிப்பீங்க?”

“இல்ல உம்மா. நா இன்டக்கி அந்திக்கி போறேன்.”

“அல்லாஹ். ரெண்டு நாள் இருந்துட்டு போங்களேன் லீனா.”

“இல்லம்மா. இவருக்கு அங்க நெரய வேல இரிக்காம். அதான் அவசரமா போறேன்.”

“அப்ப நீங்க நின்னுட்டு போக வரல்லயா மகள்.”

அந்த கேள்வியில் மர்யமின் ஏக்கம் தெரிந்தது. உடனே மாமி குறுக்கிட்டு,

“நெனச்ச Time கு எல்லாம் இவக்கு வந்துட்டு போக ஏலுமா. அவங்கட வேலகளயும் பாக்கனுமே. மைனி நீங்க சும்மா லீனாட மனச கொலப்ப வானா. அவக்குன்டு ஒரு குடும்பம் இரிக்கி இப்ப அத தான் அவ பாக்கனும்.”

மாமியின் இந்த அகங்கார பேச்சு லீனாவுக்கு எரிச்சலை தூண்டியது. இருந்தாலும் அவளால் எதிர்த்து எதுவும் பேசவா முடியும்? எனவே மௌனம் காத்தாள்.

தாயை பார்க்கவே பரிதாபமாக இருந்தது அவளுக்கு.

“மாமி அப்ப உம்மா கிட்ட நா பகல் வரைக்கும் நிக்கிறேன். சாச்சி இப்ப பெய்த்துட்டு பகலக்கி வரட்டும்.”

“என்ன பைத்தியமா லீனா? ஒங்களுக்கு உம்மாவா தூக்கி புடிக்க எல்லாம் ஏலுமா? அதும் ஒஙல உம்மா கிட்ட நிப்பாட்டினா ஷரீப்ட வேலகள யாரு செய்ற?”

மாமி கடிந்து கொண்டாள். எல்லாம் அவங்கட பக்கத்த மட்டும் தான் பாக்குறாங்க. அடுத்தவங்க எப்படி போனாலும் ஒன்டு. லீனா உள்ளூர பொருமினாள். சிறிது நேரத்தில் பார்வையாளர்கள் நேரம் முடிவடையவே லீனா போக மனமின்றி தாயிடமும் சித்தியிடமும் விடை பெற்று சென்றாள். அவள் வீட்டுக்கு வந்து சிறிது நேரத்தில் அவள் வருகையை கேள்வி பட்டு ஷெரீன் வந்திருந்தாள். அது அவளுக்கு ஆறுதலாக இருந்தது.

“இனி என்ன கத. என்ன பிரச்சின ஒனக்கு?”

“பிரச்சின ஒன்டும் இல்ல. இப்ப எல்லாம் Ok.:

“நல்லம் டி.நானும் பயந்துட்டேன் என்னமோ ஏதோன்னு. நீ சந்தோசமா இரிக்கிறாய் தானே.”

“அல்ஹம்துலில்லாஹ் நல்லா இருக்கிறேன்.”
லீனா புன்னகையுடன் கூறினாள்.

இப்படியே நேரமும் சென்றது. அயல் வீட்டு பேகம் தாத்தா வந்தாள்.

“என்ன லீனா முடிச்சத்துக்கு பொறகு எஙட ஊட்டு பக்கமே காணம்?”

“இல்ல தாத்தா. இவருக்கும் அங்க வேலயே அதான் வர கெடக்குறல்ல.”

“நீங்க இன்டக்கி வந்தா நாளக்கே ஓடி உடுறதே. வந்தா மாப்புளய கூட்டிட்டு நாலு எடத்துக்கு போகனும். இல்லாட்டி அதுக்கும் கத சொல்லுவாங்க தெரிமா?”

“ம்ஹூம்.”

‘ஒஙல்க்கு எங்க தெரியும். கட்டாயம் நா சொல்ற எடத்துக்கு இவர் கூட்டி பெய்த்துட்டு
தான் மறுவேல.’

என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் லீனா. பகலுணவின் பின் லீனா எல்லோரிடமும் கண்ணீருடன் விடை பெற்று சென்றாள்.


மனம் வலித்தது. ஷரீப்பின் தோளில் சாய்ந்து கொண்டாள். அவனோ,

“ச்சே. லீனா எனக்கு கஷ்டமா இரிக்கி. அங்கால ஷீட்ல சாய்ங்க.”

அது வரை அவன் அணிந்திருந்த முகத்திரை அப்போது கிழிக்கப்பட்டது. உடைந்த கண்ணாடியை போல் அவள் மனம் சுக்கு நூறானது.

தொடரும்.
Noor Shahidha.
SEUSL.
Badulla.

திருப்பு முனை பாகம் 12 மணி 7.30 ஐ காட்டியது. அப்போது தான் அவர்கள் வந்திறங்கினர். வாசலில் நின்றிருந்த மாமி இவர்களை வரவேற்றாள். லீனா ஸலாத்துடன் மாமியை கட்டியணைத்தாள். “வாங்க மேடம். சரியான புடிவாதம்…

திருப்பு முனை பாகம் 12 மணி 7.30 ஐ காட்டியது. அப்போது தான் அவர்கள் வந்திறங்கினர். வாசலில் நின்றிருந்த மாமி இவர்களை வரவேற்றாள். லீனா ஸலாத்துடன் மாமியை கட்டியணைத்தாள். “வாங்க மேடம். சரியான புடிவாதம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *