Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு வழங்கிய அக்கரைப்பற்று பிரதேச சபை 

நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு வழங்கிய அக்கரைப்பற்று பிரதேச சபை

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நூருல் ஹுதா உமர்

மிக நீண்டநாள் தேவையாக இருந்து வந்த அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பட்டியடிப்பிட்டி ஜவாத் மரைக்கார் வீதிக்கு நீர் குழாய்கள் பொருத்தப்பட்டு இணைப்புக்கள் வழங்கப்பட்டது.

பிரதேச சபையினுடைய சகல வீதிகளுக்குமான நீர்க் குழாய்களை இணைக்கும் இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் ஜவாத் மரைக்கார் வீதி உள்வாங்கப்பட்டு இவ்வேலைத்திட்டம் முற்றுப்பெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச சபையும், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் இணைந்து மேற்கொள்ளும் இத்திட்டத்தில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசீக், சபை உதவித் தவிசாளர் ஏ. எம். அஸ்ஹர் ஆகியோரின் பிரசன்னத்தோடு வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த உப தவிசாளர் ஏ.எம்.அஸ்ஹர், “எதிர்காலத்தில் இன்னும் இருக்கின்ற எல்லா வீதிகளும் இந்த வேலைத்திட்டத்தில்  உள்வாங்கப்பட்டு இருப்பதனால் அவசர அவசரமாக எல்லா வீதிகளும் நீர் இணைப்பை பெற்றுக் கொள்ள வாய்ப்பு இருப்பது சந்தோசத்தை தருகிறது, சபையில் காணப்படும் ஐந்து வட்டாரங்களிலும் பேதங்கள் இல்லாமல் நடைபெற இருக்கும் இத்திட்டம் கூடுதலான மக்களின் கோரிக்கையின் அடிப்படையிலும் அவசர அவசரமாக புனரமைப்பு செய்யப்பட இருக்கின்ற வீதிகள் அடிப்படையிலும் முன்னுரிமைப்படுத்தப்பட்டு  தெரிவுசெய்யப்பட்டு நீர் இணைப்பு வழங்கப்படுகிறது.

மாத்திரமல்லாமல் இணைப்பு வழங்கப்பட்ட வீதியுடன் சேர்த்து இந்த பிராந்தியத்தில் மட்டும் (பட்டியடிப்பிட்டி) 2.3 கி.மீ வீதிகள் கொங்கிரீட் இடுவதற்கு எல்லா ஆயத்தங்களும் செய்யப்பட்டுள்ளன என்பதனை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இன்னும் சொற்ப நாட்களில் அவ்வேலைத் திட்டம் வெற்றிகரமாக தேசிய காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்றம் உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்களின் பிரசன்னத்தோடு  ஆரம்பித்து வைக்கப்பட இருக்கிறது. எமது மக்கள் பணிக்கு ஒத்தாசையாக இருந்த தவிசாளருக்கும், இன்னும் ஏனைய உறுப்பினர்களுக்கும் நன்றிகளை கூறிக்கொண்டார்.

தவிசாளர் றாசிக் கருத்து தெரிவிக்கும் போது இந்த வருட இறுதிக்குள் எமது பிரதேசத்தில் எஞ்சியிருக்கும் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள  எல்லா வீதிகளுக்கும் தண்ணீர்  இணைப்புடன் கொங்கிரீட் இடுவதற்குமான பூரணபடுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள்  ஒவ்வொன்றும் முற்றுப்பெற்று வேலைகள் ஆரம்பிக்கின்ற தருவாயில் இருப்பதாக தெரிவித்தார்.

நூருல் ஹுதா உமர் மிக நீண்டநாள் தேவையாக இருந்து வந்த அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பட்டியடிப்பிட்டி ஜவாத் மரைக்கார் வீதிக்கு நீர் குழாய்கள் பொருத்தப்பட்டு இணைப்புக்கள் வழங்கப்பட்டது. பிரதேச சபையினுடைய சகல வீதிகளுக்குமான நீர்க்…

நூருல் ஹுதா உமர் மிக நீண்டநாள் தேவையாக இருந்து வந்த அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பட்டியடிப்பிட்டி ஜவாத் மரைக்கார் வீதிக்கு நீர் குழாய்கள் பொருத்தப்பட்டு இணைப்புக்கள் வழங்கப்பட்டது. பிரதேச சபையினுடைய சகல வீதிகளுக்குமான நீர்க்…