Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு முயற்சி; வழக்கு ஒத்திவைப்பு 

நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு முயற்சி; வழக்கு ஒத்திவைப்பு

  • 3

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு முயற்சி தொடர்பான வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி, அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படாததால் , வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22ஆம் திகதி நீதிபதி இளஞ்செழியன் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் , நேற்று (25) நடைபெற்றது.

அதன் போது , நீதிபதியின் மெய்ப்பாதுகாவலராக அக்காலத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகஸ்தர் மன்றில் தோன்றி சாட்சியமளித்தார்.

அதன் போது, உங்கள் கைத்துப்பாக்கியை அடையாளம் காட்ட முடியுமா ? என அரச சட்டவாதி சாட்சியிடம் கேட்ட போது , “ஆம்” என பதிலளித்தார்.

ஆனால் குறித்த துப்பாக்கியை சாட்சி அடையாளம் காட்ட துப்பாக்கி மன்றில் இருந்திருக்கவில்லை. கைத்துப்பாக்கியை அரச பகுப்பாய்வு திணைக்களத்திடம் வழங்கப்பட்ட நிலையில் , அது மீள பெறப்படவில்லை என்பது தெரியவந்தது.

அதனை அடுத்து , பிரதான சான்று பொருள் இல்லாது , விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என தெரிவித்த நீதிபதி வழக்கினை எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி ஒத்திவைத்தார்.

அத்துடன் அரச பகுப்பாய்வு திணைக்களத்திடம் இருந்து கைத்துப்பாக்கியை மீள பெற்று , சான்று பொருளாக மன்றில் அதனை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிபதி கட்டளையிட்டார்.

யாழ்.விசேட நிருபர்

The post நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு முயற்சி; வழக்கு ஒத்திவைப்பு appeared first on Thinakaran.

“}]]Read More 

​ 

[[{“value”:” நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு முயற்சி தொடர்பான வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி, அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படாததால் , வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…

[[{“value”:” நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூடு முயற்சி தொடர்பான வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி, அரச பகுப்பாய்வு பிரிவிடம் இருந்து மீள பெறப்படாததால் , வழக்கு மே மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *