நீ தந்த பரிசினால்

  • 12

அன்பை பரிசளித்து
உணர்வினை திருடிச் சென்றாய்!
வெளிச்சத்தை பரிசளித்து
பார்வையை கொள்ளை கொண்டாய்!

நகங்களை பரிசளித்து
கரங்களை வெட்டிச் சென்றாய்!
காற்றினை பரிசளித்து
சுவாசத்தை திருடிக் கொண்டாய்!

இரத்தத்தை பரிசளித்து
நரம்பினை வெட்டி விட்டாய்!
துடிப்பினை பரிசளித்து
இதயத்தை கொள்ளை கொண்டாய்!

கால்களை பரிசளித்து
நடைபிணமாய் நடக்க விட்டாய்!
தண்ணீரை பரிசளித்து
கானலாய் மறைந்து சென்றாய்!

கானலை தேடிச் செல்லும்
கருங்குருவி வாழ்க்கையானதே!
கடைசியில் எந்தன் வாழ்வில்
வசந்தமும் தூரமானதே!

Shima Harees
puttalam

அன்பை பரிசளித்து உணர்வினை திருடிச் சென்றாய்! வெளிச்சத்தை பரிசளித்து பார்வையை கொள்ளை கொண்டாய்! நகங்களை பரிசளித்து கரங்களை வெட்டிச் சென்றாய்! காற்றினை பரிசளித்து சுவாசத்தை திருடிக் கொண்டாய்! இரத்தத்தை பரிசளித்து நரம்பினை வெட்டி விட்டாய்!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *