Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நுவரெலியா கல்வி வலயத்திற்கு 10 புதிய தேசிய பாடசாலைகள் 

நுவரெலியா கல்வி வலயத்திற்கு 10 புதிய தேசிய பாடசாலைகள்

  • 18

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நுவரெலியா கல்வி வலயத்தில் பத்து பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மேலதிக வலய கல்வி பணிப்பாளர் எம்.மோகன்ராஜ் தெரிவித்தார்.

இதில் தமிழ் மொழி ஏழு பாடசாலைகளும் சிங்கள மொழி பாடசாலைகள் இரண்டும் தமிழ் மற்றும் சிங்கள மொழி கலவன் பாடசாலை ஒன்றும் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக மேலதிக வலய கல்வி பணிப்பாளர் எம்.மோகன்ராஜ் தெரிவித்தார்.

நுவரெலியா பரிசுத்த திரித்துவ கல்லூரி, கந்தப்பளை மெதடிஸ் தமிழ் மகா வித்தியாலம், தலவாக்கலை மகா வித்தியாலயம், கொட்டக்கலை மகா வித்தியாலயம், கொட்டக்கலை கேம்பிரிஜ்கல்லூரி, மெராயா தமிழ் மகா வித்தியாலயம், ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயம், நுவரெலியா உயர்தர மகளிர் வித்தியாலயம் (சிங்களம்), தலவாக்கலை சுமன மகா வித்தியாலயம் (சிங்களம்),நுவரெலியா நல்லாயன் மகளிர் கல்லூரி (தமிழ் சிங்களம் கலவன் பாடசாலை) ஆகிய பத்து பாடசாலைகளும் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய பாடசாலைகள் நேரடியாக கல்வி அமைச்சின் நிர்வாகத்தின் கீழ் செயற்படும் மாகாணமும் வலயமும் மேற்பார்வை மாத்திரமே மேற்கொள்ள முடியும். தேசிய பாடசாலைகளில் உயர் தரத்தில் கலைப்பிரிவு, கணிதப் பிரிவு, விஞ்ஞான பிரிவு, வர்த்தகப் பிரிவு ஆகிய பிரிவுகள் அனைத்துமே காணப்படும். தேசிய பாடசாலைகளுக்கு அரசாங்கத்தினால் நேரடியாக நிதியொதுக்கீடு செய்யப்படும்.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் அனைத்து வளங்களும் தேசிய பாடசாலைகளுக்கு கிடைக்கும். தேசிய பாடசாலைகளுக்கு அதிகளவில் நிதியொதுக்கீடு செய்யப்படும். தேசிய நீரோட்டத்தில் போகும்போது மாகாண பாடசாலைகளுக்கு கிடைக்கும் வளங்கள் மிக மிக குறைவு.

ஆனால் தேசிய பாடசாலைக்கு கிடைப்பது அதிகம். ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்களை கல்வி வலயமே விண்ணப்பம் செய்யும். தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் இடமாற்றம் பெற விரும்பின் தேசிய பாடசாலைகளிலிருந்து விடுவிக்கப்பட்டே மாகாண பாடசாலைக்கு இடமாற்றம் பெற முடியும். அதேபோல மாகாண பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் இடமாற்றம் பெற விரும்பின் மாகாண பாடசாலைகளிலிருந்து விடுவிக்கப்பட்டே தேசிய பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற முடியும்.

தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள் இன்னொரு தேசிய பாடசாலைக்கே இடமாற்றம் பெற முடியும். அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தேசிய பாடசாலைகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். TK

நுவரெலியா கல்வி வலயத்தில் பத்து பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மேலதிக வலய கல்வி பணிப்பாளர் எம்.மோகன்ராஜ் தெரிவித்தார். இதில் தமிழ் மொழி ஏழு பாடசாலைகளும் சிங்கள மொழி பாடசாலைகள் இரண்டும்…

நுவரெலியா கல்வி வலயத்தில் பத்து பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மேலதிக வலய கல்வி பணிப்பாளர் எம்.மோகன்ராஜ் தெரிவித்தார். இதில் தமிழ் மொழி ஏழு பாடசாலைகளும் சிங்கள மொழி பாடசாலைகள் இரண்டும்…