Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
நோன்பும் மனநலமும் 

நோன்பும் மனநலமும்

  • 13

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நோன்பு உடலிலுள்ள கலங்களை சுத்தம் செய்வதாகவும் பயம், மனப்புழுக்கம், கவலை, பதற்றம், மனஉழைச்சல், அழுப்புத்தன்மை போன்ற மனதிற்கு ஏற்படும் பல கோளாறுகளை அகற்றிவிடுவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. நச்சுப்பொருட்கள் மூளையிலிருந்து நீக்கப்படும் பொழுது பல காரணங்களினால் உருவான பாதிப்புகளிலிருந்து மனம் விடுதலை பெருகிறது. அதாவது மனம் அமைதியை, ஆறுதலை அனுபவிக்க ஆரம்பிக்கிறது.

இன்று மனக்கோளாறுகளால் பாதிக்கப்பட்ட பலர் அதிலிருந்து மீள பலவகை மருந்துகளை உபயோகித்து வருவதை காண்கிறோம். நோயின் தீவிரத்தன்மைக்கு ஏற்ப மருந்து பாவிக்க வேண்டிய தேவையிருந்தாலும் மருந்து மாத்திரைகள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதை போன்று நோன்பு நோற்பதன் மூலம் மூளை அமைதியடைவதாகவும் மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

நோன்பு மனதைக் கூர்மையாக்கி மனதை ஒருமுகப்படுத்த துணைபுரிவதாக அதுபற்றி ஆய்வு செய்தவர்கள் கூறுகின்றனர். நோன்பு நோற்பதன் மூலம் உடலிலுள்ள நச்சுக்கள் துப்பரவாகி, மாசுகள் அகற்றப்பட்டு மூளைக்கு போதியளவு சுத்தமாக்கப்பட்ட இரத்தம் கிடைப்பதன் மூலம் மனம் தெளிவடைகிறது. சிந்தனை அழகடைகிது.

உடலை மீண்டும் உட்சாகமூட்டி உள்ளத்தை அமைதியடையச் செய்வதற்கான மிகவும் பொருத்தமானதும் சரியானதுமான இயற்கைமுறை நோன்பு நோற்பதாகும் என மருத்துவ விஞ்ஞானத்தின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நவீன மருத்துவ அறிவியலில் நோன்பு ஒரு இயற்கை மருத்துவக் குணமாக்கியாக கருதப்படுகிறது. நோன்பு எமக்குள் அமைதி, அடக்கம், சந்தோசம், உட்சாகம், போன்ற அழகான மனஉணர்வுகளை அனுபவிக்கவும் துணைசெய்கிறது.

ஆரோக்கியமான ஆகாரங்களை அளவாக உண்டு நோன்பு நோற்று எமது உடலும் உள்ளமும் இந்த அற்புதமான இயற்கை அருளுடன் சேர்ந்து குணம்பெற வழிவகுத்துக்கொள்வோம்.

அஸ்ஹர் அன்ஸார்
மனோதத்துவ ஆலோசனை நிபுணர்
மனோதத்துவ எழுத்தாளர்

நோன்பு உடலிலுள்ள கலங்களை சுத்தம் செய்வதாகவும் பயம், மனப்புழுக்கம், கவலை, பதற்றம், மனஉழைச்சல், அழுப்புத்தன்மை போன்ற மனதிற்கு ஏற்படும் பல கோளாறுகளை அகற்றிவிடுவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. நச்சுப்பொருட்கள் மூளையிலிருந்து நீக்கப்படும் பொழுது பல காரணங்களினால்…

நோன்பு உடலிலுள்ள கலங்களை சுத்தம் செய்வதாகவும் பயம், மனப்புழுக்கம், கவலை, பதற்றம், மனஉழைச்சல், அழுப்புத்தன்மை போன்ற மனதிற்கு ஏற்படும் பல கோளாறுகளை அகற்றிவிடுவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. நச்சுப்பொருட்கள் மூளையிலிருந்து நீக்கப்படும் பொழுது பல காரணங்களினால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *