Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பகிடிவதைக்கு ஓர் மாற்றீடு 

பகிடிவதைக்கு ஓர் மாற்றீடு

  • 13

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

பகிடிவதை அல்லது பகிடிவதை (Raging) என்பது பாடசாலைகளிலும்¸ கல்லூரிகளிலும் உடல்¸ உள ரீதியாக புதிய மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாகும். புதியவர்களை உள்வாங்குவதற்காக செய்யப்படுவது என்று கூறப்படும் இந்நடவடிக்கையால் புதிய மாணவர்கள் மோசமான பாதிப்புக்களை அடைவதுண்டு. இந்த பகிடிவதை தொடக்கத்தில் புதியவர்களுடன் நட்புறவை ஏற்படுத்தி கொள்ளும் நோக்குடன் இருந்தாலும் இது வன்முறைச்செயல்களுக்கும் குற்றங்களுக்கும் வித்திட்டது. கல்வியில் முன்னேற்றம் கண்டு சிறந்த கல்விமானாக வெளிவர வேண்டிய எத்தனையோ மாணவர்கள் இந்த ரேகிங்க் நடவடிக்கைகளால் பட்டப்படிப்பையே இடைநிறுத்தி விடுகின்றனர். புதிதாக கழகம் நுழையும் மாணவர்களுடன் நன்முறையில் பழகவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த பகடிவதை செயற்பாடுகள் நடைபெறுகின்றது என்றால் இது தவிர வேறு வகையிலான பல நல்ல முயற்சிகளை புதிய மாணவர்களுக்கு சார்பாக பழைய மாணவர்களால் நடைமுறைப்படுத்த முடியும்.

மூத்த மாணவர்கள் புதிதாக கழகம் நுழையும் மாணவர்களின் கூச்ச சுபாவத்தை போக்குவதற்காக அவர்களுடன் இன்முகத்துடனும் பண்புடனும்¸ விசுவாசத்தன்மையுடனும் முகம் கொடுக்க முடியுமானால் புதிய மாணவர்கள் பண்புடனும் விசுவாசத்தன்மையுடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ள சந்தர்ப்பங்கள் அதிகமாகும். சுமுகமாக நெருக்கத்தையும் ஏற்றத்தாழ்வில்லாத¸ பொறாமையற்ற மனோபாவத்தையும் பெற முடியும். இதனால் புதிய மாணவர்கள் மத்தியிலான உளப்பிரச்சினைகளையும் பகடிவதைகளையும் நீக்க முடியும்.

வறிய மாணவர்கள்¸ வசதி படைத்த மாணவர்கள் என்ற பாகுபாடின்றி எல்லா மாணவர்களுடனும் சமத்துவம் செலுத்தும் போது புதிய மாணவர்களுக்கிடையிலான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் போதும்¸ பிரச்சினைக்குட்பட்ட குற்றம் புரிந்த மாணவர்களை சரியான முறையில் அவர்களுடன் அணுகி கலந்துரையாடி அவர்கள் பொருந்திக்கொள்ளும் வகையில் நல்வழிப்படுத்துவதன் மூலமும்¸ புதிய மாணவர்கள் பழைய மாணவர்களுடன் நட்புறவினை தொடர்வதற்காக கலை மன்றங்கள் போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்தி வைப்பதன் மூலமும்¸ புதிய பழைய மாணவர்களுக்கிடையிலான வேறுபாட்டினை நீக்கி சிறந்ததொரு ஒற்றுமையான மாணவச் சமூகத்தினையும் சிறந்த பிரஜைகளையும் உருவாக்குவதோடு பகடிவதை அற்ற சிறந்த பல்கலைக்கழகங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Y.F.Niyafa
SEUSL

பகிடிவதை அல்லது பகிடிவதை (Raging) என்பது பாடசாலைகளிலும்¸ கல்லூரிகளிலும் உடல்¸ உள ரீதியாக புதிய மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாகும். புதியவர்களை உள்வாங்குவதற்காக செய்யப்படுவது என்று கூறப்படும் இந்நடவடிக்கையால் புதிய மாணவர்கள் மோசமான பாதிப்புக்களை அடைவதுண்டு. இந்த…

பகிடிவதை அல்லது பகிடிவதை (Raging) என்பது பாடசாலைகளிலும்¸ கல்லூரிகளிலும் உடல்¸ உள ரீதியாக புதிய மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாகும். புதியவர்களை உள்வாங்குவதற்காக செய்யப்படுவது என்று கூறப்படும் இந்நடவடிக்கையால் புதிய மாணவர்கள் மோசமான பாதிப்புக்களை அடைவதுண்டு. இந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *