Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் இல்லையேல் ஜனவரியில் மரணம் 30 ஆயிரத்தை கடக்கும் - உலக சுகாதார ஸ்தாபனம் - Youth Ceylon

பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் இல்லையேல் ஜனவரியில் மரணம் 30 ஆயிரத்தை கடக்கும் – உலக சுகாதார ஸ்தாபனம்

  • 17

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நான்கு வாரங்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதன் மூலம் கொவிட் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளுடன் செயற்பட்டால் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 30,000 ஆக அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிக்கையொன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நான்கு வாரங்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதன் மூலம் கொவிட் பரவலை கட்டுப்படுத்த முடியும் எனவும், இதனால் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையை 12,000 வரை குறைத்துக் கொள்ள முடியும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது காணப்படும் பயணக் கட்டுப்பாடுகளுடன் செப்டெம்பர் மாதத்திற்குள் நாளாந்தம் 6,000 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படலாம்.

ஒக்டோபர் மாதத்திற்குள் 226 பேர் நாளாந்தம் கொவிட் தொற்றால் மரணிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விசேட வைத்திய நிபுணர்கள் குழு மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஒன்றிணைந்து முன்வைத்துள்ள அறிக்கையின்படி, ஒக்டோபர் முதல் வாரத்திற்குள் நாளாந்தம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைபெறும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சுமார் 275 ஆக அதிகரிக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த மே – ஜூன் மாதங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடுகளை மீண்டும் அமுல்படுத்துவதன் மூலம் நாள்தோறும் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை 1,000 பேர் வரை குறைத்துக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரைக்கிறது.

இதற்கமைய, கொவிட் பரவலை கட்டுப்படுத்த அவர்கள் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.அதில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது மிக முக்கிய விடயமாக முன்வைக்கப்பட்டுள்ளது.அத்துடன், மாகாண பயணக் கட்டுப்பாடுகளுக்கு பதிலாக மாவட்டங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நான்கு வாரங்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதன் மூலம் கொவிட் பரவலை கட்டுப்படுத்த முடியும். தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளுடன் செயற்பட்டால் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 30,000…

நான்கு வாரங்களுக்கு கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதன் மூலம் கொவிட் பரவலை கட்டுப்படுத்த முடியும். தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளுடன் செயற்பட்டால் அடுத்த வருடம் ஜனவரி மாதத்திற்குள் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 30,000…