Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பரீட்சைக்கு முகங் கொடுப்பது எவ்வாறு? 

பரீட்சைக்கு முகங் கொடுப்பது எவ்வாறு?

  • 43

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இந்தப் பதிவு தற்போது பாடசாலையில் உயர்தரம் (12, 13) சாதாரணதரம்  (10,11) கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கானது. பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியடைவதற்கான சில ஆலோசனையே இன்றைய பதிவாகும்.

பரீட்சையில் வெற்றி கொள்ள உடல் உள ரீதியாக தயாராகுதல் வேண்டும். அதற்கான ஆரம்ப கட்ட ஆலோசனையே இப்பதிவாகும்.

எந்த ஒரு பரீட்சையாக இருப்பினும் அதற்கான வழிகாட்டல்களை பெற்றுக்கொள்ளுதல். உதாரணமாக செமினார் , குறிப்பிட்ட பரீட்சைக்கு ஏற்கனவே முகங்கொடுத்தோர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுதல்.

பரீட்சைக்கு முகங்கொடுப்பதற்கான தன்னம்பிக்கையும் முயற்சியும் அவசியம். பின்வாக்கக் கூடாது! குறிப்பிட்ட ஒரு பரீட்சையில் ஒரு தடவை அனுபவம் பெற்றால் போதும் அடுத்த தடவையில் வெற்றி.

குறிப்பிட்ட பரீட்சை தொடர்பான முன்னறிவு (மதிப்பீடு, கணக்கு) அவசியம். எவ்வாறான வரையறைகளுக்குள் கேள்விகள் அமையும், புள்ளிகளுக்கு ஏற்றாற்போல் பதில்கள் அமைய வேண்டும். மற்றும் நேரடி (derect) கேள்விகளுக்கு நேரடியாகவும், சிந்தனை ரீதியான கேள்விகளுக்கு சிந்தனை ரீதியாகவும், ஆய்வு ரீதியான கேள்விகளுக்கு எண்ணக்கருக்கள், எடுகோள்கள், வரலாறுகள், உவமானம் போன்றவற்றைக் கொண்டு பதில் கொடுத்தல் அவசியம்.

மொழி அறிவு அவசியம். தாய் மொழியில் எதிர்கொள்ளும் பரீட்சைகளில் பரீட்சையமான நாம்; ஏனைய மொழி பரீட்சைகளில் மிக இலகுவான கேள்விகளில் கூட கோட்டை விட்ட வரலாறுகள் பல! எனவே எந்த மொழியில் பரீட்சையை எதிர்நோக்குவோமோ அந்த மொழி அறிவு அவசியம்.

போதிய அளவு தூக்கம், ஓய்வு அவசியம். உடல் ஆரோக்கியமே தெளிவான சிந்தனைக்கு உதவும். தூக்க மயக்கத்திலோ, சடுதியான நிலையிலோ, உடல் சோர்வான நிலையிலோ படிப்பதால் எந்தவித பயனும் இல்லை.

ஒவ்வொருத்தரும் பரீட்சைக்கு படிக்கும் விதம் வித்தியாசம். அவரவர் தத்தமது வழிமுறைகளில் படிப்பதே சிறந்தது. சிலருக்கு சத்தமிட்டு படிக்க வேண்டும். அவ்வாறு படித்தால் மாத்திரமே அவரால் அதனை விளங்கிக்கொள்ள முடியும். இன்னும் சிலருக்கு அமைதியாக படிக்க வேண்டும். பலருக்கு படிக்கும் இடம் மற்றும் சூழல் அமைதியாக இருப்பதோடு வேறொருவர் படித்தும் கொடுக்க வேண்டும்! இன்னும் சிலருக்கு எழுதிப் படிக்க வேண்டும். உங்களுக்கு பொருத்தமான முறையை நீங்கள் தெரிவு செய்து கொள்ளவும்.

நாம் படித்தவைகளை ஞாபகத்தில் வைப்பதே கடினம்; கட்டாயமும் கூட. குழுவாக சேர்ந்து படித்தல், மீட்டல், கலந்துரையாடல் போன்றவையே படித்ததை மறக்காமல் இருக்க சிறந்த வழிமுறையாகும். ஆனால் சிலருக்கு தனிமையே இனிமை; சிறந்ததும் கூட. மீண்டும் சொல்கின்றேன்; அவரவர் தத்தமது வழிமுறைகளில் படிப்பதே சிறந்தது.

எதையும் படிப்பதற்கோ அல்லது படித்ததை மீட்டுவதற்கோ சிறந்த நேரம் இரவு (அதிகாலை); உலகம் அமைதியாக காணப்படும். யாருடைய தொல்லையும் இல்லாமல் இருக்கும் நேரம். ஆனால் நாம் தூக்க மயக்கத்தில் அந்த நேரத்தில் படித்தால்; அதை விட கொடிய (கெட்ட) நேரம் கிடையாது.

போட்டித் தேர்வுகளில் சித்தியடைவதற்கு ஆரம்பம் முதல் கடினமாகவும் தன்னம்பிக்கையோடும் படிப்பதே சிறந்த வழிமுறையும், புத்திசாலித்தனமும் கூட…

எல்லாம் சரி! கடைசி நேரத்தில்; உறக்கமே வணக்கம்! எனும் கோட்பாடுடைய நாம் பரீட்சைக்கு முந்தின நாள் இரவு நிம்மதியாக உரிய நேரத்தில் தூக்குவோமா? இல்லை. எனக்கருமையான தோழனே! தோழியே! உரிய நேரத்தில் தூங்கி எழுந்து பரீட்சை மண்டபத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர் அமைதியாய் போ!

இறைவா நீ கொடுப்பதை தடுப்பவன் எவனும் இல்லை! நீ தடுப்பதை கொடுப்பவன் எவனும் இல்லை! எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே!

NAFEES NALEER
(IRFANI)
South Eastern university of sri lanka
வியூகம் வெளியீட்டு மையம்

இந்தப் பதிவு தற்போது பாடசாலையில் உயர்தரம் (12, 13) சாதாரணதரம்  (10,11) கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கானது. பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியடைவதற்கான சில ஆலோசனையே இன்றைய பதிவாகும். பரீட்சையில் வெற்றி கொள்ள உடல் உள…

இந்தப் பதிவு தற்போது பாடசாலையில் உயர்தரம் (12, 13) சாதாரணதரம்  (10,11) கற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கானது. பரீட்சையில் சிறந்த முறையில் சித்தியடைவதற்கான சில ஆலோசனையே இன்றைய பதிவாகும். பரீட்சையில் வெற்றி கொள்ள உடல் உள…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *