Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பருவத்துளிர் 

பருவத்துளிர்

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஒரு படகு நிறைய
நிலவை அள்ளிக்
கொண்டிருக்கிறேன்

கடும் கங்குல் மயங்கிய
இரவின் வனாந்தரத்தில்
திசைகளற்று அலைந்து
திரிகிறது பருவத்துளிர்

நிலவற்ற வெருவெளியில்
நீளுகின்ற மௌனத்தின்
இடிபாடுகள்
சாத்தியத்திலிருந்து
அசாத்தியத்திற்கு
உன்மத்தமான காதலை
நகர்த்திக் கொண்டிருக்கின்றது

மலைமுகடுகளை மட்டும்
ரசிக்கப் பழக்கப் பட்டவள்
இவள் மரங்களுக்கடியில்
பூக்களை மட்டுமே
நட்டி வைத்தேன்

பூக்கள் இன்று
வேர்களை மும்முரமாய்
அரித்துக் கொண்டிருக்கின்றன

படகு நிறைந்தது
நிலவு படகேறவே இல்லை

மிஸ்ரா ஜப்பார்

ஒரு படகு நிறைய நிலவை அள்ளிக் கொண்டிருக்கிறேன் கடும் கங்குல் மயங்கிய இரவின் வனாந்தரத்தில் திசைகளற்று அலைந்து திரிகிறது பருவத்துளிர் நிலவற்ற வெருவெளியில் நீளுகின்ற மௌனத்தின் இடிபாடுகள் சாத்தியத்திலிருந்து அசாத்தியத்திற்கு உன்மத்தமான காதலை நகர்த்திக்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *