பள்ளிவாசல் நிர்வாகிகளின் சேவை கஞ்சு காச்சுதல் மட்டுமல்ல

  • 19

வருங்காலம் வளர்ச்சியாக ஆதங்கமாக குறையல்ல

பள்ளிவாசல் நிர்வாகிகள் 30 நாளுக்கு மட்டும் கஞ்சி காய்ச்சலில் ஏழைகளின் மீது கரிசனம் காட்டினால் போதுமா? கஞ்சி காய்ச்சுவது மட்டுமே சேவை அல்ல.

  1. ஓலை குடிசைகளை மாற்றி ஒட்டு வீடாக மாற்றுங்கள்.
  2. அதிக மதிப்பெண்களை எடுக்கும் வருடத்திற்கு ஒருவரை, உங்கள் முகல்லாவில் கண்டறிந்து. IAS. IPS. (AdvanceLevel, Higher Education) படிக்க ஏற்பாடு செய்யுங்கள்.
  3. 25-30வயது திருமணம் முடிக்காமல் இருக்கும் பெண்ணை நிக்காஹ் செய்து வையுங்கள்.
  4. உங்கள் ஜமாஅத் சார்பில் தையல் தொழிற் கற்று கொடுக்கும் பயிற்சி பள்ளியை ஆரம்பியுங்கள். அதில் குறிப்பாக ஆண்கள் இல்லாத விதவை பெண்கள் வீட்டை கண்டறிந்து ஜாக்கட் சுடிதார் வெட்டி தைக்க எந்த கட்டணமும் இல்லாமல் கற்று கொடுங்கள். அவள் வீட்டிலே மிசின் போட்டு தைத்து கண்ணியமாக ஜீவனம் செய்வார்.
  5. இதற்கெல்லாம் ஜக்காத் நிதியை திரட்டுங்கள்.
  6. சமுதாயத்தை கஞ்சியாக்குவதை நிறுத்துங்கள்
  7. வருடம் தோறும் கஞ்சிக்கு வறுஞ்சுகட்டுவதை நிறுத்துங்கள்.

வழி கேட்டில் செல்ல கூடியவர்களை இதன் மூலம் 100%. தடுக்கப்படும். சமுதாயத்தில் வறுமையை ஒழிக்க இன்னும் எண்ணற்ற திட்டங்கள் இருக்கிறது.

உங்கள் முகல்லாவில் படித்த இளைஞர்களுக்கு, பட்டதாரிகளுக்கு உங்களுக்கு அறிமுகமான கம்பெனிகளில் வேலையை பெற்றுக்கொடுங்கள்.

ஓவ்வொரு பள்ளிவாசலுக்கு வருடம் ஒரு கோடிக்கு மேல் வருமானம் வரும் திட்டத்தை ஏற்படுத்துங்கள்.

ஜமாஅத் சார்பில் ஏக்கர் கணக்கில் இடம் வாங்கி ஆட்டு பண்ணையை உருவாக்குங்கள். பணம் குவியும் பண்ணை உருவாக்கி வறுமையை ஒழியுங்கள்.. பள்ளிவாசல் சொத்தில் வாடகைக்காக காம்ப்ளக்ஸ் கட்டுவதை அடியோடு நிறுத்துங்கள். சிறிய கல்வி கூடாரங்களை முதலில் கட்டுங்கள்..

வயது முதிர்ந்த பெரியோர்களை ஜமாஅத் பொறுப்புக்கு கொண்டு வருவது நிறுத்துங்க படித்த இளைஞர்களை நிர்வாகியாக கொண்டு வாருங்கள்.

50- நபர்கள் கொண்ட பேஜ் பேஜாக வட்டி இல்லா கடன் திட்டம் அவர்களிடமே வசூல் செய்து அவர்களுக்கே கடன் கொடுங்கள். குழுவில் உள்ளவர்களுக்கு மட்டும் கடன்.

உதாரணமாக. வாரம். 100-க்கு ஒரு குழு 200-க்கு ஒரு குழு. 500-1000-5000-என்று மிக பெரிய வட்டி இல்லா வங்கி திட்டதை ஏற்படுத்துங்கள். வாரம் வாரம் செலுத்தும் தொகை திருப்பி கொடுக்க கூடாது தொடர்ச்சியாக குறைந்த பட்சம் 5-வருடதிற்கு ஒருமுறை. குழுவை முடிக்க வேண்டும்.

இன்னும் எண்ணற்ற திட்டங்கள் உள்ளது ஜமாஅத் நிர்வாகிகள் அதிலே கவனம் செலுத்துங்கள் வருடாந்திர கஞ்சியை கை விடுங்கள்.

சமுதாயத்தின் வறுமைக்கு கொள்ளி வைத்து ஆயுள் முழுக்க வறுமை இல்லா, முன்னேற்றத்திற்கான தடங்களை ஏற்படுத்துங்கள்.

வறுமையில் வாழாதவர்களுக்கு காணாதவர்களுக்கும் இதன் அருமை தெரியாது ஏனென்றால் நிர்வாகியாக வருபவர்கள் வசதி படைத்தவர்கள். அதனால்தான் சொல்கிறேன் படித்த இளைஞர்களை நிர்வாகத்திற்கு கொண்டு வாருங்கள்.

என்னறிவுக்கு எட்டிய சிந்தனையில் தவறாக இருந்தால் பொறுத்த படுங்கள்.

சமுதாய மேம்பாட்டுக்காக.
மதுரை இஸ்மாயில்.

வருங்காலம் வளர்ச்சியாக ஆதங்கமாக குறையல்ல பள்ளிவாசல் நிர்வாகிகள் 30 நாளுக்கு மட்டும் கஞ்சி காய்ச்சலில் ஏழைகளின் மீது கரிசனம் காட்டினால் போதுமா? கஞ்சி காய்ச்சுவது மட்டுமே சேவை அல்ல. ஓலை குடிசைகளை மாற்றி ஒட்டு…

வருங்காலம் வளர்ச்சியாக ஆதங்கமாக குறையல்ல பள்ளிவாசல் நிர்வாகிகள் 30 நாளுக்கு மட்டும் கஞ்சி காய்ச்சலில் ஏழைகளின் மீது கரிசனம் காட்டினால் போதுமா? கஞ்சி காய்ச்சுவது மட்டுமே சேவை அல்ல. ஓலை குடிசைகளை மாற்றி ஒட்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *