பள்ளி வாசல்கள் மற்றும் மத்ரசா கல்வி நிறுவன ஊழியர்களின் பொருளாதார நிலைமை

  • 90

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையீன் இறைவன் நாமம் போற்றி துவங்குகின்றேன். கடந்த ஏப்ரல் தாக்குதல் நடைபெற்று இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில் அதன் பிறகு எமது நாட்டின் மீது அன்பு செலுத்த கூடிய தேசப்பற்று முஸ்லிம் மக்கள் பல துன்பம்களை அனுபவித்து வருகின்றனர். உதாரணமாக பஸ்களில் செல்ல முடியாத நிலை, அரச நிறுவனம்களில் ஹிஜாப் மீதான வெறுப்பு, எமது மத்ரசாகளை ஆரம்பிக்க கடினமான காரியம் என இன்னும் பல உள்ளன. அதில் நான் இன்று எதனை கூற முனைகிறேன் என்றால் இந்த நமது மத்ரசாகளின் இரண்டு மாத கால தடையினால் அங்கு பணி புரியும் ஆலிம்களின், ஆசிரியர்களின் மற்றும் பள்ளி இமாம், முஅத்தின்களின் பொருளாதார நிலை கவலைக்குறியது. அத்துடன் இந்த நிலையை எடுத்து கூற கடமைப்பட்டுள்ளேன்.

ஆம், கடந்த 2, 2 1/2 மாதங்களுக்கு முன்னர் ஆலிம்கள், இமாம்களின் நிலைமை அல்லாஹ்வின் உதவியினால் கிடைக்கும் ஊதியத்தை கொண்டு எவ்வித கடன்களும் இன்றி நிம்மதியாக வாழ்தனர். ஆனால் இந்த நாட்களில் இந்த நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதில் பள்ளி இமாம்கள், முஅத்தின்களின் பொருளாதார பாதிப்பு குறைந்த போதிலும் மத்ரசா ஆசிரியர்கள் நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் இந்த நோன்பு பெருநாள் காலங்களை சிறந்த முறையில் நடத்த முடியாதுள்ளது.

அத்துடன் எம் பள்ளிகளில் பணி புரியும் இமாம்களாயினும், மத்ரசா, மக்தப் ஆசிரியர்கள் ஆயினும் அவர்கள் அனைவரும் நம்மை போன்ற ஆசைகள் தேவைகள் உள்ள மனிதர்களே. நமக்கு போல் அவர்களுக்கும் தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் உள்ளனர். அவர்களும் உண்ண வேண்டும், பருக வேண்டும். வருகின்ற பெருநாளைக்கு ஆடையனிகள் அணிந்து பெருநாள் கொண்டாட அவர்களின் மணம் ஆசைப்படும் தானே. ஆனால் இந்த இரண்டு மாத காலமும் இப் பெருநாள் அன்மித்த நிலையிலும் அதை எப்படி செய்வது என்று அறியாமல் சொல்லன்னா துயர்பட்டு வருகிறனர். ஆனெனில் பல இடங்களில் சம்பளம் இல்லாமல் ஆகும்.

ஒரு தொழிலாளியின் வியர்வை உலர்வதற்கு முன் அவர்களின் கூலியை வழங்க வேண்டும் என நபியவர்கள் கூறியுள்ளார்கள்.(இப்னுமாஜா)

மேலும் அரச உத்தியோகத்தர்களை எடுத்துக்கொண்டால் அவர்கள் உத்தியோகம் பார்தாலோ இல்லையோ அரசு அவர்களுக்கு சம்பளத்தை தடையின்றி வழங்குகின்றது. ஆனால் எமது மத்ரசா ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வேலை செய்தால் மட்டுமே சம்பளம் கிடைக்கிறது. இன்னும் பல இடங்களில் இந்த நிலையில் கூட மத்ரசாகள் நடாத்தப்பட்டன. ஆயினும் இன்னும் அந்த நாட்களின் சம்பளம் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களும் வாழ வேண்டும். பெருநாள் கொண்டாட வேண்டும். இன்னும் பல தேவைகள் இருக்கும். அவற்றை நிறைவேற்ற அத்தியாவசியம் பணமே ஆகும்.

மேலும் மத்ரசா நிர்வாகம் பல முயற்சிகள் செய்து ஆலிம் ஒஸ்தாத்மார்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அவற்றில் போதாக் குறைகள் இருக்கும். அவற்றை சேகரிக்க வசூல் செய்ய வேண்டும். அவ்வாறு தற்போதய நிலையில் அங்கு இங்கு சென்று வசூல் பண்ண முடியாத நாட்டின் நிலை நன்கறிந்ததே. ஆகவே நம் சமூகத்தில் உள்ள செல்வந்தர்கள், நலன்விரும்பிகள் தத்தமது பகுதிகளில் உள்ள மத்ரசா நிருவாகிகளை தொடர்பு கொண்டு நம்மால் முடியுமான அளவு பணத்தையோ பொருளையோ வழங்கி இந்த ரமழானில் நன்மைகளை இரட்டிப்பாக்க முன் வருவோம். இது சதகதுல் ஜாரியாவாக அமையும். இதனால் உங்கள் கப்ருகளுக்கு நன்மை வந்துகொண்டே இருக்கும்.

ஆகவே இறுதியாக நாட்டில் பல இடங்களில் மக்தப் வகுப்புகள் நடைபெற்று வருகின்ற நிலையில் மக்தப் மாணவர்களின் பெற்றோர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய பணத்தை அவசரமாக செலுத்தி உதவ வேண்டும் என ஞாபகமூட்டுவதுடன் எமது மார்க்கதை கண்ணென காக்கும் நபியவர்களின் சந்ததிகள் என போற்றப்படும் ஆலிம், உலமாக்களின் வாழ்க்கை பொருளாதாரதில் கவனம் செலுத்தி இந்த நோன்பு பெருநாள் காலங்களை தன் எண்ணப்படி கொண்டாட உதவி ஒத்துழைப்புகள் வழங்கி இந்த புனித ரமழான் மாதத்தை சிறந்த முறையில் கழித்த நன் மக்கள் கூட்டத்தில் நாம் அனைவரும் சேர்வதற்கு இறைவன் அருள் புரிவானாக!!

R.M. Afzal Raza
Kanuketiya
Nikaweratiya
வியூகம் வெளியீட்டு மையம்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையீன் இறைவன் நாமம் போற்றி துவங்குகின்றேன். கடந்த ஏப்ரல் தாக்குதல் நடைபெற்று இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில் அதன் பிறகு எமது நாட்டின் மீது அன்பு செலுத்த கூடிய தேசப்பற்று…

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையீன் இறைவன் நாமம் போற்றி துவங்குகின்றேன். கடந்த ஏப்ரல் தாக்குதல் நடைபெற்று இரண்டு மாதங்கள் கழிந்த நிலையில் அதன் பிறகு எமது நாட்டின் மீது அன்பு செலுத்த கூடிய தேசப்பற்று…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *