Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பஸ் டிக்கட் 

பஸ் டிக்கட்

  • 12

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இன்று எனது 440 ரூபாய் பணத்தை யாரோ திருடி விட்டார்கள். யாரென்று தெரியவில்லை. மிகவும் கவலையில் நடுவீதியில் நின்று கடுமையாக அழுதேன். உண்மையைச் சொல்லப் போனால் வீட்டில் 10 ரூபாய்கூட இல்லை. பரீட்சைக்கு வர வேண்டுமென்பதற்காக பக்கத்து வீட்டாரிடம் போக்குவரத்து செலவுக்காக மாத்திரம் நூறு ரூபாய் கடனாக கேட்டேன். அவர்களும் 100 ரூபாய் இல்லை, 500 ரூபாய்தான் இருக்கிறது என்று 500 ரூபாய் பணத்தை என்னிடம் கொடுத்தார்கள். நானும் வாங்கிக் கொண்டு செமஸ்டர் எக்ஸாமிற்காக பஸ்ஸில் வந்து சேர்ந்தேன்.

பரீட்சை மண்டபத்துக்குள் பைகள் அனுமதி இல்லை என்பதால், மண்டபத்துக்கு வெளியில்தான் எனது பையை வைத்திருந்தேன். அந்த பையினுள்தான் பஸ் டிக்கட் 60 ரூபாய் செலவு போக மீதி 440 ரூபா பணமும், எனது மொபைல் போனும் இருந்தது.

02 மணி நேரமாக நடைபெற்ற English linguistic பரீட்சையை ஒரு மணி நேரத்திற்குள் முடித்து விட்டு மீதி ஒரு மணித்தியாலயத்தில் என்ன செய்வதென தெரியாமல் விழி பிதுங்க உட்கார்ந்திருந்து பரீட்சை முடிந்த பின்னர் பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியே வந்து எனது பையை எடுத்து ஏதாவது தொலைபேசி அழைப்புக்கள் வந்திருக்கிறதா? என்று மொபைலை எடுத்துப் பார்த்த போதும் பணம் அந்த பைக்குள்தான் இருந்தது. அது எனக்கு உறுதியாக தெரியும்.

பின்னர், வீடு செல்ல முன்பு இன்ஸ்டிடியூடில் வொஷ் ரூம் சென்று கைகால்களை சற்று அலம்பி விட்டு வரலாம் என்ற எண்ணத்தில் எனது பையை வெளியில் வைத்து விட்டு உள்ளே சென்று சொற்ப நேரத்தில் பஸ்ஸில் ஏறுவதற்காக வீதியை நோக்கி நடந்தேன்.

பஸ்ஸும் வந்தது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் ஏறி சுமார் 15 நிமிடங்கள் கடந்த நிலையில், டிக்கட் வாங்குவதற்காக எனது பையை திறந்த போது பைக்குள் பணம் எதுவும் இருக்கவில்லை. பணம் இல்லாததை கண்டு மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளானேன்.

பஸ் கன்டக்டரிடம் பணம் காணாமல் போய் விட்டதென சொன்னேன். கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை உபயோகித்து பஸ்ஸை விட்டு கீழே இறங்குமாறு கூறினார். எனக்கு கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. எதுவும் பேசாமல் இறங்கி விட்டேன்.

பேரூந்து பயணக் கட்டணம் மெறுமனே ஐம்பது ரூபாய்தான். பலருக்கு அது ஒரு தொகையே இல்லை. ஆனால், சிலருக்கு அது மிகப் பெரிய தொகை. அதீத கஷ்டத்துக்கு ஆளாகும் போது இரண்டு ரூபாயும் மிகப் பெரிய தொகைதான் என்பதை வாழ்வில் கஷ்டப் பட்டோருக்கு கண்டிப்பாக தெரியும்.

பேருந்தை விட்டு இறங்கிய போது, உண்மை நிலையை அறிந்து குறிந்த பேரூந்தில் பயணித்த பல கைகள் எனக்காக ஐம்பது ரூபாய் பணத்தை நீட்டினர். பேரூந்தில் ஏறுமாறு கூறினர். ஆனாலும், அந்த பஸ் நடத்துனரின் வார்த்தை பிரயோகங்கள் காதுகளில் கணீர் கணீரென அம்பாக குத்தியது. மீளவும் ஒரு தடவை பஸ்ஸில் ஏற மறுத்து வீதியின் ஓரத்தில் நின்றேன். பேரூந்தும் புறப்பட்டது. என்ன செய்வது ஏது செய்வதென்றே தெரியவில்லை.

நீண்ட நேர மௌனத்தின் பின்னர், ஒருவாறு மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மொபைல் போனை எடுத்து தந்தைக்கு அழைப்பை ஏற்படுத்தி விடயத்தைக் கூறினேன். தந்தையும் கவலைப் பட வேண்டாமென்று கூறி, மோட்டார் சைக்கிளில் நான் நின்ற இடத்தை நோக்கி அரை மணி நேரத்திற்குள் வந்து சேர்ந்தார். நானும் வீட்டுக்கு சென்று விட்டேன்.

தயவு செய்து எனக்கு செய்த இப்படியொரு துரோகத்தை யாரும் யாருக்கும் செய்து விடாதீர்கள். இந்நிலை என்னோடு போகட்டும் என்று மொத்தக் கதையையும் எம்மோடு டிப்ளோமா கோர்ஸுக்கு வருகின்ற சக நண்பி சொல்லி முடிக்கையில் கேட்டுக் கொண்டிருந்த எம் ஒவ்வொருவருடைய கண்ணிலும் மெல்லிதாக தண்ணீர். கண்களின் ஓரம் வெள்ளையாய் ஈரம். 440 ரூபாய் என்பது பெரிய தொகையே இல்லை. ஆனால், இன்ஸ்டிடியூட்டின் சக நண்பி பட்ட அவமானங்கள், துயரங்கள் எல்லாம் எமக்கும் வாழ்க்கையின் இன்னுமொரு அனுபவப் பாடமே.

நஸார் இஜாஸ்

இன்று எனது 440 ரூபாய் பணத்தை யாரோ திருடி விட்டார்கள். யாரென்று தெரியவில்லை. மிகவும் கவலையில் நடுவீதியில் நின்று கடுமையாக அழுதேன். உண்மையைச் சொல்லப் போனால் வீட்டில் 10 ரூபாய்கூட இல்லை. பரீட்சைக்கு வர…

இன்று எனது 440 ரூபாய் பணத்தை யாரோ திருடி விட்டார்கள். யாரென்று தெரியவில்லை. மிகவும் கவலையில் நடுவீதியில் நின்று கடுமையாக அழுதேன். உண்மையைச் சொல்லப் போனால் வீட்டில் 10 ரூபாய்கூட இல்லை. பரீட்சைக்கு வர…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *