Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பாகிஸ்தான் நாட்டுக்குள் இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொலைச் சம்பவங்கள்! 

பாகிஸ்தான் நாட்டுக்குள் இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொலைச் சம்பவங்கள்!

  • 3

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

பாகிஸ்தான் நாட்டில் குறிவைத்து இந்தியா சம்பவங்களை செயற்படுத்துவதாகவும், இதன் மூலம் பலர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்ைக வெளியான நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா சில பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு என்பது கிடையாது. பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் அத்துமீறி வந்து பயங்கரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக இந்தியா குற்றம் சாட்டி வருகின்றது.

இவ்வாறான நிலையில் பாகிஸ்தானில் இந்திய உளவு அமைப்பான ‘​ேரா’ சில நடவடிக்ைககளை மேற்கொள்வதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இது தொடர்பாக அமெரிக்கா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.

அதாவது பாகிஸ்தானில் சில கொலைச் சம்பவங்களை இந்தியா திட்டமிட்டு நடத்துவதாகத் தகவல் வெளியாவதாகவும், இந்த விவகாரத்துக்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக பிரிட்டனைச் சேர்ந்த ஊடகமான ‘தி கார்டியன்’ செய்தி வெளியிட்டு இருந்தது. இந்தியா தங்கள் நாட்டில் அத்துமீறி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாகப் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டிய நிலையில், அதற்கான ஆதாரங்கள் எனக் கூறி சில விஷயங்களையும் ‘தி கார்டியன் ‘இதழுக்குப் பாகிஸ்தான் வழங்கி இருந்தது.

இருப்பினும், இந்த அறிக்ைகயை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தவறான ஒரு அறிக்ைக என்றும் இந்தியாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலேயே இந்த அறிக்ைக வெளியிடப்பட்டுள்ளதாகவும் இந்தியா விளக்கமளித்துள்ளது.

இந்தச் சூழலில்தான் அமெரிக்காவும் இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று கூறிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், இருப்பினும் இந்த விவகாரத்தில் இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாகத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்த விவகாரம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறோம். இந்த விவகாரத்தில் கருத்துக் கூற விரும்பவில்லை. நிச்சயமாக, இந்த விடயத்தில் இரு நாடுகளுக்கு நடுவே நாங்கள் வரப்போவதில்லை. இருப்பினும், இரு தரப்பினருக்கு இடையே மோதலை தவிர்க்கப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.

2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்திய உளவு அமைப்பான ​ேரா பாகிஸ்தான் நாட்டுக்குள் புகுந்து இதுபோல சுமார் 20 சம்பவங்களை நடத்தியதாக ‘கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் வழங்கிய ஆதாரங்களையும், இருதரப்பு உளவு அதிகாரிகளின் நேர்காணல்களையும் ‘கார்டியன்’ வெளியிட்டு இருந்தது.

குறிப்பாக இந்தியா தனது தேசப் பாதுகாப்பிற்கு எதிராக இருப்பவர்கள் எனக் கருதுபவர்களைக் குறிவைத்து சம்பவங்களை நடத்தும் கொள்கையைப் பின்பற்றி வருவதாகத் தெரிவித்திருந்தது. இவ்விடயத்தில் பேசிய பாகிஸ்தான் உளவு அதிகாரி ஒருவர், ஐக்கிய அமீரகத்தில் உள்ள இந்திய உளவுத்துறையின் முகவர்கள் மூலம் இந்தக் கொலை சம்பவங்கள் அரங்கேறுவதாகக் கூறியுள்ளார்.

மற்றொரு பெயர் வெளியிடப்படாத இந்திய அதிகாரி ஒருவர் ‘தேசத்திற்கு எதிரானவர்களை காலி செய்ய இஸ்ரேலின் மொசாட் மற்றும் ரஷ்யாவின் கே.ஜி.பி பாணியில் இந்தியா செயல்படும்’ என்று கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மற்றைய நாடுகளில் நடத்தப்படும் கொலைகள் இந்திய அரசின் கொள்கை இல்லை என்று வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார்.

(நன்றி: இந்திய இணையம்)

The post பாகிஸ்தான் நாட்டுக்குள் இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொலைச் சம்பவங்கள்! appeared first on Thinakaran.

“}]]Read More 

​ 

[[{“value”:” பாகிஸ்தான் நாட்டில் குறிவைத்து இந்தியா சம்பவங்களை செயற்படுத்துவதாகவும், இதன் மூலம் பலர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்ைக வெளியான நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா சில பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே…

[[{“value”:” பாகிஸ்தான் நாட்டில் குறிவைத்து இந்தியா சம்பவங்களை செயற்படுத்துவதாகவும், இதன் மூலம் பலர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்ைக வெளியான நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா சில பரபரப்பான கருத்துகளைத் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *