Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொவிட் ஒழிப்பு பணிக்கான அன்பளிப்பு - Youth Ceylon

பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொவிட் ஒழிப்பு பணிக்கான அன்பளிப்பு

  • 9

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

எம்.எஸ்.எம். முன்தஸிர்

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் ஒன்றிணைக்கப்பட்ட பாணந்துறை தொட்டவத்தை முஸ்லிம் வாலிபர் இயக்கம், பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ‘பேஸ் சீல்ட்’ (Face Shield) அன்பளிப்பு செய்துள்ளது. ஆதார வைத்தியசாலையின் கொரொனா தடுப்பு வேலைத் திட்டத்துக்கு பங்களிப்பு செய்யும் நோக்கில் இந்த அன்பளிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொட்டவத்தை வாலிபர் இயக்கத்தின் தலைவர் இஸ்மத் ரிப்தி தலைமையில் தொட்டவத்தை பள்ளிவாசல்கள் பரிபாலன சங்கத் தலைவரும், விவாகப் பதிவாளருமான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் இம்தியாஸ் முஸம்மில், இயக்கத்தின் செயலாளர் மௌலவி இஸ்மத் சில்மி ஆசிரியர் ஆகியோரால் இந்த அன்பளிப்பு கையளிக்கப்பட்டது.

வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் திருமதி ஐ.பீ.கொடகந்த உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த இயக்கம் பிரதேசத்தில் வாழும் சகோதர இன மக்களுடன் நல்லுறவை உருவாக்கும் நோக்கில் குறிப்பிட்ட சர்வதேச தினங்களை மையமாகக் கொண்டு மதவழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள், அரச நிறுவனங்களுக்கு சிறந்த மரக்கன்றுகள் மற்றும் பொருட்களை அன்பளிப்புச் செய்து வருகின்றது. மேலும் பல்வேறு விடயங்களிலும் தமது பங்களிப்பை வழங்கி நல்லிணக்கத் திட்டத்தை மேம்படுத்த செயலாற்றி வருகின்றது.

போதைப்பொருள் ஒழிப்பு, தேசிய மரநடுகை, சுற்றாடல் உள்ளிட்ட முக்கியமான தேசிய தினங்களில் மரநடுகை உட்பட பல்வேறு பணிகள் தொட்டவத்தை வாலிபர் சங்கத்தின் தலைவர் ஏ.எச் இஸ்மத் ரிப்தியின் தலைமையில் இயக்க உறுப்பினர்கள் பங்களிப்புடன் வைத்தியசாலைகள், பாடசாலைகள், விகாரைகள், புகையிரத நிலையம் உள்ளிட்ட இடங்களில் கடந்த பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் தடுப்பு வேலைத் திட்டம் தொடர்பில் இவர் தலைமையிலான இயக்கத்துக்கு தேசிய பேரவையின் சிறந்த விருதும் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தலைவர் ரிப்தி இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பினரும் முன்னாள் தலைவருமான மர்ஹூம் ஏ.எச். அப்துல் ஹனியின் புதல்வராவார்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. (Y.M.M.A) பேரவையின் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், புரிந்துணர்வு வேலைத் திட்ட சிந்தனை வழிகாட்டலின் அடிப்படையில் தொட்டவத்தை வாலிபர் சங்கத்தினால் மேற்படி சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக சங்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் முன்னாள் தேசியத் தலைவரும் 1976 முதல் செயற்குழு உறுப்பினராக இருந்து வருபவருமான எம்.எம்.அப்துல் வஹாப் தெரிவித்தார்.

உலகளாவிய கொரொனா தொற்று நோயினால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களைப் பாதுகாக்க பிரதேச வைத்தியசாலைகள் முன்னெடுக்கும் திட்டங்களுக்கு எல்லா மக்களும் சமூகத்தின் சார்பில் பிரதேச வாரியாக தமது பங்களிப்பை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமானதும் காலத்தின் தேவையெனவும் அவர் வலியுறுத்தினார்.

சுமார் ஐந்து தசாப்த கால வரலாறு கொண்ட தொட்டவத்தை வாலிபர் இயக்கம் 1972 ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையில் இரண்டு வருட காலம் பார்வையாளர் உறுப்பினர் நிலையிலிருந்த பின்னர், 1974 இல் கம்பளையில் மக்கி ஹாசிம் தலைமையில் இடம்பெற்ற வருடாந்த மகாநாட்டில் நிரந்தர உறுப்புரிமை அந்தஸ்தைப் பெற்றுள்ளது. ஐம்பதாண்டுகால நிறைவை எட்டியுள்ள தேசிய பேரவையுடன் ஒன்றிணைக்கப்பட்ட இச்சங்கம் பேரவையின் தேசிய மட்டத்திலான மீலாத் விழா மற்றும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியை தொட்டவத்தையில் வெற்றிகரமாக நடத்தியதையும் முன்னாள் தேசிய தலைவர் மகிழ்வுடன் நினைவுபடுத்தினார்.

தொட்டவத்தை பள்ளிவாசல்கள் பரிபாலன சங்கத்தின் முன்னாள் தலைவரும் வக்பு சபை உறுப்பினருமான மர்ஹூம் எஸ்.எம்.ஏ.எம். முஸம்மில் ஆலிம்(கபூரி) தொட்டவத்தை வாலிபர் இயக்கத்தின் ஆரம்ப போஷகராகவிருந்து இயக்கத்தின் செயல்பாடுகளுக்கும் முன்னோக்கிய பயணத்துக்கும் காத்திரமான வழிகாட்டுதல்களை வழங்கியதை முன்னாள் தேசிய தலைவர் எம்.எம்.ஏ.வஹாப் மகிழ்ச்சியுடன் நினைவுபடுத்தினார்.

இயக்கத்தின் ஸ்தாபக தலைவராக தொட்டவத்தை பள்ளிவாசல்களின் முன்னாள் தர்மகர்த்தாவான மர்ஹூம் எம்.ஏ.எம்.ஸாலிஹ் மற்றும் ஸ்தாபக செயலாளராக எஸ்.டீ.எம்.தனூஸ் ஆகியோர் பதினாறு பேர் கொண்ட குழுவுடன் பள்ளிவாசல் பரிபாலன சங்கத்துடன் தொடர்புபட்டவர்களாக மக்களுக்கான கலாசார, கல்வி உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் சிறப்பாக முன்னெடுத்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இயக்கத்துக்கான நிரந்தர கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கான காணி ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.ஏ.எம்.ஸாலிஹ் மற்றும் அன்னாரின் குடும்ப உறுப்பினர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டது. இக்கட்டடம் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்பட்டதை பேரவையின் முன்னாள் தலைவர் நினைவு கூர்ந்தார்.

எம்.எஸ்.எம். முன்தஸிர் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் ஒன்றிணைக்கப்பட்ட பாணந்துறை தொட்டவத்தை முஸ்லிம் வாலிபர் இயக்கம், பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ‘பேஸ் சீல்ட்’ (Face Shield) அன்பளிப்பு செய்துள்ளது. ஆதார வைத்தியசாலையின் கொரொனா தடுப்பு…

எம்.எஸ்.எம். முன்தஸிர் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் ஒன்றிணைக்கப்பட்ட பாணந்துறை தொட்டவத்தை முஸ்லிம் வாலிபர் இயக்கம், பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு ‘பேஸ் சீல்ட்’ (Face Shield) அன்பளிப்பு செய்துள்ளது. ஆதார வைத்தியசாலையின் கொரொனா தடுப்பு…