பிரியாணி சிறுகதை விமர்சனம்

  • 7

எழுதியவர்: சந்தோஷ் ஏச்சுக்கானம் (மலையாளம்) மொழிபெயர்த்தவர்: கே.வி.ஜெயஸ்ரீ

அண்மையில் பிரியாணி எனும் சிறுகதையொன்றினுள் நீராட நேரம் கிடைத்திருந்தது. இது ஒரு விமர்சனத்திற்கு உட்பட்ட சிறுகதை என்பதனால் எழுதுவதற்கு மிகவும் தயங்கினேன். ஆனாலும் கூட, நாம் அன்னம் போல் நல்லதை எடுத்து விட்டு கெட்டதை விட்டு விடுபவர்கள் என்பதனால் பதிவுக்குள் கொண்டு வருகிறேன்.

வறுமை தலைவிரித்தாடியதன் காரணத்தினால் உள்புகுந்த பசிக் கொடுமை பற்றி வித்தியாசமான முறையில் விளக்குகிறார் இவர். பீகாரைச் சேர்ந்த லால் மாத்யா என்ற நபரை கருப் பொருளாக்கி கதையினை வேறுகண் கொண்டு நகர்த்தும் இவரின் கதைத் திறன் பாராட்டத்தக்கது.

பிரியாணி என்ற பெயர் உள்நுழைந்தமைக்கான காரணத்தை நீங்கள் கதையினை வாசித்தே அறிந்து கொள்ள வேண்டும். விமர்சனங்களை விட்டும் தூரமாக சென்ற என்னை ஆழ்ந்த தாக்கமுள்ள கிணற்றினுள் தள்ளி விட்டது இந்த கதை.

வறுமையை பிரதான கருவாகக் கொண்டு செல்வத்தை விலைப் பொருளாகக் காட்டி விளக்கும் நுட்பம் கதைக்கு வலுச் சேர்க்கின்றது.

வாசித்து தான் பாருங்களேன். உணர்வு பூர்வமாக இருக்கும். கதை இத்தளத்திலும் உள்ளது. Click for Read பிரியாணி

பொfடோ சகோதரர் Jibbry Jeesan இன் பதிவிலிருந்து பெறப்பட்டது.
முஷ்தாக் மிப்தார்.


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media

எழுதியவர்: சந்தோஷ் ஏச்சுக்கானம் (மலையாளம்) மொழிபெயர்த்தவர்: கே.வி.ஜெயஸ்ரீ அண்மையில் பிரியாணி எனும் சிறுகதையொன்றினுள் நீராட நேரம் கிடைத்திருந்தது. இது ஒரு விமர்சனத்திற்கு உட்பட்ட சிறுகதை என்பதனால் எழுதுவதற்கு மிகவும் தயங்கினேன். ஆனாலும் கூட, நாம்…

எழுதியவர்: சந்தோஷ் ஏச்சுக்கானம் (மலையாளம்) மொழிபெயர்த்தவர்: கே.வி.ஜெயஸ்ரீ அண்மையில் பிரியாணி எனும் சிறுகதையொன்றினுள் நீராட நேரம் கிடைத்திருந்தது. இது ஒரு விமர்சனத்திற்கு உட்பட்ட சிறுகதை என்பதனால் எழுதுவதற்கு மிகவும் தயங்கினேன். ஆனாலும் கூட, நாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *