Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
புகைத்தல் உயிரை கொள்ளும் 

புகைத்தல் உயிரை கொள்ளும்

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

“மகன்!”

ஸபீனாவின் கண்ணின் கண்ணீர் காயாமல் மலுங்கிய குரலில் அழைக்கிறாள். தூரமாக இருந்த மகன் ஸபான் ஓடிவருகிறான்.

“உம்மா!! கண் முழிச்சிடீங்களா? நான் பயந்தே போய்ட்டன்”

என்று ஆஸ்பத்திரி கட்டிலில் முடங்கி இருந்த தாய் சபீனாவின் கைபிடித்து வண்ணம் சாய்ந்தான் சபான். கனங்கள் நகர ஆரம்பமாகின. தொடர்ந்து பேசுகிறான் மகன் சபான்,

“உம்மா உங்களுக்கு என்னமா குறை வெச்சன். என்னமா சித்திரவதை செய்தேன். யேமா இப்படி செஞ்சிடீங்க. சந்தோஷமா தானேமா நான் உங்கள பாத்துன்டன்……”

வாய் தடுமாறிய படி,

“ஆனால் நீங்க இப்படி செஞ்சிட்டீங்களே உம்மா!”

மலுங்கிய குரலுடன் சபீனா பேச துடங்கினால்,

“மகன்… நீ என்டால் எனக்கு உசுரு ராசா… உன்னோட வாப்பா மெளத்தாகுர நேரம் நீ சின்ன புள்ள. உன்ன என் மடியில வெச்சுட்டு மனுசன் ரூஹவிட்டுட்டுது. நீ சின்னதுல இருந்து இப்ப வரக்கிம் எனக்கு நீதான் ராசாத்தி உலகம்”

“மகன்… நான் உன்ன பாத்து பாத்து வளர்த்தன். உன்னோட சந்தோஷத்துக்காகவே வாழ்ந்தன். யே, கூலி வேல செஞ்சி சம்பாரிச்சி உன்ன படிக்க வெச்சன். உன்னோட சின்ன சின்ன சந்தோஷத்துல எல்லாம் நான் அளவே இல்லாம சந்தோஷப்பட்டேன். ஆனால் நீ இன்னக்கி.வாயில் பத்தட்டம் தொடர்ந்தவாரு
எனக்கு முன்னாலயே சிகரட் குடிக்கிர.எத்தன தடவயும் சொல்லிடன் என்ன எல்லாமோ செஞ்சிட்டன் நீ மார்ரதா இல்ல மகன்! உனக்கு விளங்குதோ இல்லையோ! ஆனால் நீ குடிக்கிரது சிகரட் இல்ல ராசா அது விஷம், உன்ன சாகடிச்சிடும். அத என்னால பாத்துட்டு இருக்க முடியாது. நான் ஆசையா வளர்த்த புள்ளயோட உயிர் கொஞ்சம் கொஞ்சமா போரத என்னால தாங்கிட்டு இருக்க ஏலாது… அதுதான் நானே முழுசா வெசத்த குடிச்சிட்டன்.”

“என்ன மகன் அழுகுர?.
வெஷம் குடிச்சிட்டன் என்டா?
எனக்கும் நீ ஒவ்வாரு தடவ சிகரட் குடிக்கர நேரமும் அதே தானே யாபகம் வரும். அதே கவலை தானே வரும்”

என்டு அழ துவங்கினாள். ஸபான் எதுவும் பேசாமலே ஓரமாக நடந்தான். தன் பைக்கட்டில் வைத்திருந்த சிகரட் பெட்டியை குப்பையில் போட்டுவிட்டு சில கனங்கள் சாந்தமாகவே. ஏதோ முனுமுனுத்தான்.

“உம்மா !! தப்பு பன்னிட்டன்…” .

ஸபீனா ஏக்கக்குரலின் மகன் ஸபான் என்டு கூப்பிடவே, ஓடிவந்து தாயை அனைத்துக்கொன்டு அழ ஆரம்பித்துவிட்டான்.

“புகைத்தல் உயிரை கொள்ளும்”

Binth Akram

[Classified add]

“மகன்!” ஸபீனாவின் கண்ணின் கண்ணீர் காயாமல் மலுங்கிய குரலில் அழைக்கிறாள். தூரமாக இருந்த மகன் ஸபான் ஓடிவருகிறான். “உம்மா!! கண் முழிச்சிடீங்களா? நான் பயந்தே போய்ட்டன்” என்று ஆஸ்பத்திரி கட்டிலில் முடங்கி இருந்த தாய்…

“மகன்!” ஸபீனாவின் கண்ணின் கண்ணீர் காயாமல் மலுங்கிய குரலில் அழைக்கிறாள். தூரமாக இருந்த மகன் ஸபான் ஓடிவருகிறான். “உம்மா!! கண் முழிச்சிடீங்களா? நான் பயந்தே போய்ட்டன்” என்று ஆஸ்பத்திரி கட்டிலில் முடங்கி இருந்த தாய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *