புதுமையிலும் புலமை இருக்க வேண்டும்

  • 9

சட்டம் பேசும் பலரும்
சந்தர்ப்பம் அறிவதில்லை
சடுதியாய் நடந்த ஒன்றையும்
சல்லடை போட நினைப்பர

சரிதத்தில் இடம் பிடிக்க – பிறர்
சதிரத்தில் குறைபிடிப்பர்
சாக்கடைத் தண்ணிக்குக்கூட
சாதி மதம் பார்த்து நிற்பர்

விழுமியம் பேசும் மக்களிடம் – எந்த
ஒளிமயமுமில்லை
குழுமிக் கலையும் குழுக்களிடம்
லட்சியமும் சாத்தியமில்லை

அலட்சியப் போக்கும்
இலட்சிய நோக்கும்
மொழிச்சலில் ஒன்றாகலாம்
துணிச்சலில் வேறாகளாம்

ஆழமாய் சொல்ல நினைக்கவில்லை
அனுபவத்தை மெல்ல நினைத்தேன்
ஆரம்பமும் முடிவும் இன்றி
எனக்குள்ளே புதைத்துக் கொள்கிறேன்

Asana Akbar
Anuradhapura
SEU Of Srilanka

சட்டம் பேசும் பலரும் சந்தர்ப்பம் அறிவதில்லை சடுதியாய் நடந்த ஒன்றையும் சல்லடை போட நினைப்பர சரிதத்தில் இடம் பிடிக்க – பிறர் சதிரத்தில் குறைபிடிப்பர் சாக்கடைத் தண்ணிக்குக்கூட சாதி மதம் பார்த்து நிற்பர் விழுமியம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *