Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
புரட்சிப் பெண் 

புரட்சிப் பெண்

  • 15

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நீ கூறியதும் விரும்பவும்
போ என்றால் வெறுக்கவும்
தலையாட்டி நிற்கவும்
நான் ஒன்றும் பொம்மையல்ல!

நீ அழைத்தவுடன் கொஞ்சவும்
உதறி விட்டால் கெஞ்சவும்
கூட்டிற்குள் அடைந்து விட
நான் ஒன்றும் பட்சியல்ல!

நீ புன்னகைத்தால் மயங்கவும்
விலகிச் சென்றால் கலங்கவும்
யாருமின்றித் தவித்திட
நான் ஒன்றும் அநாதையல்ல!

நீ சொல்வதெல்லாம் செய்யவும்
விரட்டி விட்டால் ஓடவும்
பயந்து உனக்கு அடங்கிட
நான் ஒன்றும் அடிமையல்ல!

நான் பெண்ணிணத்தை உயிர்தெழ
அகம்பாவம் அடக்கிடும்
அராஜகத்தை ஒழித்திடும்
பாரதி கூறிய புரட்சிப் பெண்!

நான் பெண்மையினை மதித்திட
கொடுமைகளை முடக்கிடும்
கொடியவரை அடக்கிடும்
சீற்றப் பெண்!

உயிர்தெழுகிறேன்
புதுத் தளிராய்
உலகை மாற்றும்
உருவக சக்தியாய்!

Shima Harees
Puttalam

நீ கூறியதும் விரும்பவும் போ என்றால் வெறுக்கவும் தலையாட்டி நிற்கவும் நான் ஒன்றும் பொம்மையல்ல! நீ அழைத்தவுடன் கொஞ்சவும் உதறி விட்டால் கெஞ்சவும் கூட்டிற்குள் அடைந்து விட நான் ஒன்றும் பட்சியல்ல! நீ புன்னகைத்தால்…

நீ கூறியதும் விரும்பவும் போ என்றால் வெறுக்கவும் தலையாட்டி நிற்கவும் நான் ஒன்றும் பொம்மையல்ல! நீ அழைத்தவுடன் கொஞ்சவும் உதறி விட்டால் கெஞ்சவும் கூட்டிற்குள் அடைந்து விட நான் ஒன்றும் பட்சியல்ல! நீ புன்னகைத்தால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *