பெண்ணும் ஆணும்

  • 6

பிறப்பு முதல் இறப்பு வரை தியாகத்திற்கு மறுபெயராய்
பொறுமையின் உறைவிடமாய்
மண்ணில் வாழ்பவள் பெண்
பிறப்பு முதல் இறப்பு வரை
பொறுப்புக்களின் சுமை தாங்கியாய்
உழைப்புக்கு அஞ்சாதவனாய் மண்ணில் வாழ்பவனே ஆண்

மகளாய், மாணவியாய், மனைவியாய்,
மருமகளாய் மாதாவாய், மாமியாய், பாட்டியாய்
பல அவதாரங்கள் எடுப்பாள் பெண்
மகனாய், மாணவனாய், மணவாளனாய்,
மருமகனாய், தந்தையாய், மாமனாராய், தாத்தாவாய்
அவதாரங்கள் எடுப்பவனே ஆண்

மென்மை, நாணம், அன்பு, பொறுமை, அடக்கம், அழகு என்ற
பண்புகளை இயற்கையாக பெற்றவள் பெண்
வீரம், தைரியம், அரவணைப்பு, வலிமை, கம்பீரம் என்பவற்றை
தன்னுள் கொண்டவனே ஆண்

பத்து மாதம் மகவை சுமந்து
தன் பிரசவத்தில் மறு பிறப்பு எடுப்பவள் பெண்
பத்து மாதம் மகவை சுமந்த
தன் மனைவியின் பிரசவத்தின் போது
மனதளவில் மறுபிறப்பு எடுப்பவனே ஆண்

பிடுங்கி வேறிடம் நாட்டும் செடியாய்
தன் வீட்டினை விட்டு கணவன் வீடு புகுவாள் பெண்
தந்தையின் அரவணைப்பிலிருந்து தனை
நம்பி வரும் மனைவியை தந்தை போல் அரவணைப்பவனே ஆண்

வேலை, குடும்பம் என இரட்டை
பொறுப்புக்களை தைரியமாய் சுமப்பவள் பெண்
விருந்தாளி போலன்றி வீட்டாளியே நானும் என்று
வீட்டு வேலைகளில் ஒத்தாசை வழங்குபவனே ஆண்

மென்மை சுபாவத்தினாலோ சிறு கவலை ஏற்படினும்
கண்ணீரிலே கவலையை குறைப்பவள் பெண்
பெருங்கவலை ஏற்படினும் நீர் மறைத்த கண்களுடன்,
இறுகிய முகத்துடன் கலங்கிய மனதுடன் கவலையை மறைப்பன் ஆண்

மகளாய் நட்பு வலையில் தனை பிணைத்தவள்
மனைவியாகியவுடன் குடும்பமே நண்பர் என அர்பணிப்பவள் பெண்
நட்பு என்று வந்து விட்டால் தன்னையும் தருவேன் என
கடைசி வரை நட்பை பேணுபவன் ஆண்

கணவனின் திருப்தியே சுவனத்திற்கு
அழைத்து செல்லும் என வாழ்பவள் பெண்
மனைவியே சுவனத்திலும் தன்
துணையாய் வர வேண்டும் என் பிராத்திப்பவன் ஆண்

தன் மகள் புகுந்த வீட்டில்
நற்பெயர் எடுக்கனும் என்ற கவலையில்
அன்புடன் சிறிது கண்டிப்பையும் காட்டுபவள் பெண்
தன் மகள் இறுதிவரை தன் இளவரசியே
அவளுக்கு எங்கும் சமாளிக்கலாம் என்ற
நம்பிக்கையில் கனிவையே அளிப்பவன் ஆண்

ஆண்களின் மதியுக மந்திரி
ஆணின் வெற்றிக்கு பின் நிற்பவள் பெண்
பெண்ணிற்கு நம்பிக்கையூட்டி
உதவிக் கரம் நீட்டி அவளை
பிரகாசிக்க வைக்கும் துணையே ஆண்

ஆணுக்கு நிகராய் தானும் மிளிரனும்
என சம உரிமை கேட்பவள் பெண்
பெண்ணுக்கும் சம பங்கு உண்டு தானே என
அனைத்திலும் பங்கிடுபவன் ஆண்

குடும்பம் என்ற கட்டுமானத்திற்கும்
உயிர் நாடிகளாய் சமூகத்திற்கும்
நாட்டின் சிறந்த இயக்கதிற்கும்
இன்றியமையா மூலக்கூறு
பெண்களும் ஆண்களும்

இரு பாலும் இல்லாவிட்டால் உலகம் இல்லை
இதனை புரிந்தால் சச்சரவுகளும் இல்லை
வேறுபாடுகளை கொண்ட
தனித்துவமானவர்களே
பெண்ணும் ஆணும்

ஆணை பெண்ணும்
பெண்ணை ஆணும்
மதிக்க வேண்டும்
புரிய வேண்டும்

Shifana Zameer
Balangoda
வியூகம் வெளியீட்டு மையம்

பிறப்பு முதல் இறப்பு வரை தியாகத்திற்கு மறுபெயராய் பொறுமையின் உறைவிடமாய் மண்ணில் வாழ்பவள் பெண் பிறப்பு முதல் இறப்பு வரை பொறுப்புக்களின் சுமை தாங்கியாய் உழைப்புக்கு அஞ்சாதவனாய் மண்ணில் வாழ்பவனே ஆண் மகளாய், மாணவியாய்,…

பிறப்பு முதல் இறப்பு வரை தியாகத்திற்கு மறுபெயராய் பொறுமையின் உறைவிடமாய் மண்ணில் வாழ்பவள் பெண் பிறப்பு முதல் இறப்பு வரை பொறுப்புக்களின் சுமை தாங்கியாய் உழைப்புக்கு அஞ்சாதவனாய் மண்ணில் வாழ்பவனே ஆண் மகளாய், மாணவியாய்,…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *