பெண்மை

  • 13

பெண் என்பவள் ஆணினால்
நிர்வகிக்கப்படக் கூடியவள்
ஆனால் அடிமையல்ல!

அவள் இயற்கையிலேயே
பலவீனமாக படைக்கப்பட்டவள்
ஆனால் கோழையல்ல!

மிகவும் இளகிய
மனதை உடையவள்
ஆனால் இழிவானவள் அல்ல!

அடிக்கடி கண்ணீரால்
கன்னம் நனைப்பவள்
ஆனால் கோமாளியல்ல

அன்பை அடைமழையாக
பொழிபவள்
ஆனால் மேகம் அல்ல!

சிறிய அதிர்வுகளுக்கே
கோபம் கொள்பவள்
ஆனால் எரிமலையல்ல!

அவளது ஒவ்வொரு பக்கங்களும்
குழந்தையாக மகளாக
குமரியாக தோழியாக
சகோதரியாக தாரமாக
தாயாக பாட்டியாக
கவி வரைந்திருக்கும்.

மொத்தத்தில் அவள்
ஒர் அதிசய காவியம்.
மென்மையின் உறைவிடம்.
அன்பின் இலக்கணம்
அழகின் அடைக்கலம்.

அவளே பெண்மை!
அவளுக்கான
அடையாளமே தாய்மை!

Noor Shahidha.
SEUSL.
Badulla.

பெண் என்பவள் ஆணினால் நிர்வகிக்கப்படக் கூடியவள் ஆனால் அடிமையல்ல! அவள் இயற்கையிலேயே பலவீனமாக படைக்கப்பட்டவள் ஆனால் கோழையல்ல! மிகவும் இளகிய மனதை உடையவள் ஆனால் இழிவானவள் அல்ல! அடிக்கடி கண்ணீரால் கன்னம் நனைப்பவள் ஆனால்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *