Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பேரினவாத சமூகத்திற்கு முஸ்லிம்கள் சவால் விடுவது ஆபத்தானது 

பேரினவாத சமூகத்திற்கு முஸ்லிம்கள் சவால் விடுவது ஆபத்தானது

  • 7

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

இன்று இணையதளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு செய்தி ஒரு முஸ்லிம் பெண் முகம் மூடிய நிலையில் கடைத்தெரு ஒன்றுக்கு சென்ற நிகழ்வை ஒரு பெரும்பான்மை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்தது மட்டுமல்லாமல் அப்பெண்ணை சில வார்த்தைகளால் சீண்டி அதனை இணையத்தளத்தில் பரவ விட்ட சம்பவம்தான். இது உண்மையில் யாரும் வரவேற்கமாட்டார்ரகள்.

எனினும் இந்தப் பெண்ணுக்கு சார்பாக முஸ்லிம்கள் பலர் குறிப்பாக ஹிஜாப் என்று சொல்லக்கூடிய முகத்தை மூடுவதை ஆதரிப்பவர்களும் மற்றும் அதனை எதிர்ப்பவர்களும் கூட பெரும்பான்மை நபரொருவரை அந்தப்பெண் பகிரங்கமாக, தைரியமாக எதிர்த்து பேசியிருக்கிறார் என்பதற்காக அப்பெண்ணை வாழ்த்தி அதனை இணையத்தளங்களில் பதிவிட்டு கொண்டு இருக்கின்றனர். உண்மையில் இங்கு அந்தப் பெண் முகத்தை மூடியது சரியா அல்லது தவறா என்பதை இந்த இடத்தில் ஒரு வாதப்பிரதிவாதமாக எடுத்துக்கொள்வது நோக்கமல்ல அது ஒரு புறம் இருக்கட்டும்.

உண்மையில் முஸ்லிம் சமூகம் இப்படியான நிகழ்வுகளை கைதட்டி ஆரவாரித்து பார்த்தாலும் கூட பேரினவாத சமூகத்திற்குள் மீண்டும் மீண்டும் இது ஒரு பாரிய பிரச்சினை உருவாக்குவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது .

கடந்த காலங்களில் அதாவது உயிர்த்த ஞாயிறு தாக்குவதற்கு முன்னால் ஜிகாதைப் பற்றி ஆதரித்து அதேபோன்று போராட்டங்களைப் பற்றியும் பகிரங்கமாக எழுதிய பலர் இன்று இணையதளங்களில் மறைந்து வாழ்வதும் அல்லது அந்த கோஷங்களை கைவிட்டு விட்டு இருப்பதும் அல்லது அதற்கு ஆதரவாக இருந்த பலர் இன்று சிறைவாசம் அனுபவிக்கும் என்ற நிலையை நாம் பார்க்கிறோம்.

அன்று பகிரங்கமாக ஜிகாத் பற்றிப் பேசிய பலரிடம் இன்று இது சம்பந்தமாக பேசினால் அதை திரும்பி கூட பார்ப்பதில்லை. இதேபோன்று கடந்த காலங்கள் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் கிராமங்கள் தாக்கப்பட்டபோது கூட நம்மில் பலர் மௌனியாகத்தான் இருந்தோம். காரணம் என்னவென்றால் இந்த நாட்டிலே அதனை முன்னின்று எதிர்ப்பதற்கு பலம் முஸ்லிம்களிடம் கிடையாது. ஏனெனில் அல்லாஹ்தான் எமது பலம்.

எதிர்த்து போராடத்தான் வேண்டும் யாருக்கும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்று சவால் விடக்கூடிய அல்லது பேசக்கூடிய பலர் இப்படியான பிரச்சினைகள் வருகின்ற போது முன்னிப்பதுமில்லை, ஆனால் வெறுமனே கதைத்து விட்டு அல்லது எழுதி விட்டு மறைந்து வாழ்கின்றனர் .

இதனால் அப்பாவியான முஸ்லிம்கள்தான் தாக்கப்படுவதை பார்க்கிறோம். எனவே இன்று நாம் இலங்கையில் நடக்கின்ற சில விடயங்களை பகிரங்கமாக எதிர்க்க முடியாத சூழலை நாங்கள் உணர்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இது யாருக்கும் தெரியாத விடயமல்ல அனைத்து முஸ்லிம்களும் அறிந்த விடயம்தான் அதை எதார்த்தமாக புரிந்துதான் இருக்கின்றோம்.

எனவே சவால் விடுகின்ற போது ஏற்படுகின்ற பல விபரீதங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவிக்கிறது. மீண்டும் மீண்டும் பெரும்பான்மை சமூகத்தை முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்புவதற்கு ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது.

எனவே பெரும்பான்மை சமூகத்தில் இவ்வாறான சீண்டல்கள் வருகிறபோது கடந்த காலங்களைப் போன்று அல்லாஹுத்தஆலா பல உதவிகளை முஸ்லிம் சமூகத்திற்கு செய்திருந்தான். இவ்வேளைகளில் அதனை பொறுமையாகவும் சகிப்புத்தன்மையுடனும் நோக்குவதுதான் இன்றைய காலத்தின் தேவையாகும்.

ஏனென்றால் அப்பெண்ணுடன் நடந்த அந்த சம்பவத்தை ஒட்டி பல்வேறுபட்ட விமர்சனங்களும் எதிர்ப்பலைகளும் முஸ்லிம்களுக்கெதிராக மீண்டும் தாக்குதல்களை தொடுக்க வேண்டும் என்ற உணர்வும் பெரும்பான்மை சமூகங்களுக்கு மத்தியில் கருத்து நிலவி வருகிறது. சிலர் அதனை தூண்டி வருகின்றனர் .

குறிப்பாக பேரினவாத சமூகத்தினரை மறைவில் நின்று ஆதரவு தெரிவிப்பவர்கள் அல்லது எதிர்த்து பேசுபவர்கள் யாராவது இவ்வாறு பின் விளைவான பிரச்சினைகள் உருவானால் அதனை அவர்களால் நிறுத்தவும் முடியாது. அதற்கெதிராக குரல் கொடுக்கவும் முடியாது் இன்றைய சூழலில்.

எனவே இந்த நாட்டில் வாழுகின்ற ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரைக்கும் நாங்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களில் அமைதி காக்க வேண்டிய அதே நேரத்தில் பொறுமையுடனும் சகிப்புத்தன்மையுடனும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்

எனவே இன்றைய சூழலில் நாங்கள் சவால் விட்டு பகிரங்கமாகப் பேசி அல்லது எழுதி அதனை இணையதளங்களில் எல்லாம் இப்படி சாடி மீண்டும் மீண்டும் இந்த பிரச்சினைகளை உருவாக்காமல் நல்லதொரு சுமூகமான சூழலை உருவாக்குவதற்கும் முயற்சிக்க வேண்டும்.

இப்படியான செய்திகளை கூட நாங்கள் இணைய தளங்களில் பகிர கூடாது. பேரின சமூகத்தை ஒருபோதும் நாங்கள் சீண்டி அவர்களை உசுப்பேற்றி மேலும் மேலும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போன்ற பிரச்சினைகளை வழர்க்காமல் சுமூகமாக இந்த பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர அதுதான் புத்திசாலித்தனம் என்று நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

சில நேரங்களில் இப்படியான அசௌகரியமான நிலைமைகளை அல்லலது சந்தர்பங்களை நாம் தவிர்த்து வாழ்வதற்கு பழகிக் கொள்வதுதான் இன்றைய இந்த இலங்கை நாட்டை பொறுத்த வரைக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகவும் அமையும்.

றஸ்மி மூஸா சலபி (MA)

இன்று இணையதளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு செய்தி ஒரு முஸ்லிம் பெண் முகம் மூடிய நிலையில் கடைத்தெரு ஒன்றுக்கு சென்ற நிகழ்வை ஒரு பெரும்பான்மை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்தது மட்டுமல்லாமல் அப்பெண்ணை…

இன்று இணையதளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு செய்தி ஒரு முஸ்லிம் பெண் முகம் மூடிய நிலையில் கடைத்தெரு ஒன்றுக்கு சென்ற நிகழ்வை ஒரு பெரும்பான்மை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்தது மட்டுமல்லாமல் அப்பெண்ணை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *