Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
பொருளாதார மேம்பாட்டுக்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் 

பொருளாதார மேம்பாட்டுக்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம்

  • 5

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

[[{“value”:”

 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு நாடு முகம்கொடுத்தது. அதன் விளைவாக நாடே வங்குரோத்து நிலைக்கு உள்ளானது. அதன் விளைவாக மக்கள் பலவிதமான அசௌகரியங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டனர். அந்த பொருளாதார வீழ்ச்சியின் சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம்கொடுக்க முடியாமல் அன்றைய ஆட்சியாளர்கள் பதவி விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அத்தோடு அப்பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு தலைமை தாங்கவென எவரும் துணிந்து முன்வராத இக்கட்டான சூழ்நிலையும் உருவாகி இருந்தது.

அவ்வாறான நெருக்கடிமிக்க சூழலில்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமையைப் பொறுப்பேற்றார். நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி இப்பதவியை ஏற்ற அவர், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான வேலைத்திட்டங்களைப் பரந்த அடிப்படையில் முன்னெடுத்தார். அவை கட்சி நலன்களுக்கு அப்பால் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்திய திட்டங்களாக மாத்திரமன்றி மக்களுக்கு மேலும் சுமையாக அமையாத, முற்றிலும் நடைமுறைச்சாத்தியமான வேலைத்திட்டங்களாக அமைந்திருந்தன.

அதன் பிரதிபலனாக இப்பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் குறுகிய காலத்தில் பயனளிக்கத் தொடங்கின. அதன் விளைவாக பொருளாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் நாடும் மக்களும் முகம் கொடுத்த நெருக்கடிகளும் அசெளகரியங்களும் கட்டம் கட்டமாக நீங்கலாயின. இவை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் பொருளாதார மீட்சிக்கான வேலைத்திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புக்களையும் ஏற்படுத்தின.

இந்நிலையில் இப்பொருளாதார மேம்பாட்டுத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படலாயின. இதன் பயனாக 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் நாடு பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளானதா? என்று வினவப்படும் அளவுக்கு தற்போது நிலைமை முன்னேற்றம் அடைந்திருக்கிறது. நாட்டில் பெரும்பாலும் இயல்புநிலை ஏற்பட்டிருக்கிறது.

இவ்வாறான சூழலில் இம்மாதம் 15 ஆம் திகதி வொஷிங்டனில் ஆரம்பமான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2024 ஆம் ஆண்டிக்கான வசந்தகால மாநாட்டில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தலைமையிலான குழுவினர் இலங்கை சார்பில் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கெஞ்சி ஒக்கமுரா, இலங்கை – இந்தியாவுக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி சுப்ரமணியம் கிருஷ்ணமூர்த்தி, உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.

நாடு முகம்கொடுத்த பொருளாதார வீழ்ச்சி, அதில் இருந்து மீட்சி பெறுவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள், அவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இச்சமயம் விரிவாகக் கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.

இதேவேளை, இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு முழுமையான ஒத்துழைப்பு நல்குவதாக பரிஸ் கிளப் உள்ளிட்ட கடன் வழங்குனர் குழுவினரும் உறுதி அளித்துள்ளனர். இங்கு இடம்பெற்ற சந்திப்புக்களும் பேச்சுவார்த்தைகளும் இலங்கைக்கு சாதகமாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டும் உள்ளது.

அதேநேரம் இம்மாநாட்டில் பங்குபற்றிய பின்னர் நாடு திரும்பியுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, ‘இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கும் நிதி ஸ்திரப்படுத்தலுக்குமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்துள்ள தீர்மானங்களை சர்வதேசம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் வளர்ச்சிக்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளான நாட்டை மீட்டெடுப்பதை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத்திட்டங்களின் பயனாகவே நாடு தற்போதைய முன்னேற்றகரமான நிலையை அடைந்திருக்கிறது. இல்லாவிடில் இலங்கையும் ஆபிரிக்க கண்டத்தைச் சேர்ந்த சில நாடுகளைப் ​போன்று வன்முறைகள் நிறைந்த நாடாகவே மாறி இருக்கும். அந்த நிலையில் இருந்து நாட்டை பாதுகாத்த பெருமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையே சாரும். அதுவே நாட்டின் மீது உண்மையான பற்றுக் கொண்டவர்களின் கருத்தாகும்.

ஆகவே தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களால் நாட்டில் உண்மையான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதனை சர்வதேசமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. அதனால் நாட்டின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் வளர்ச்சிக்காக அனைரும் ஒத்துழைப்பும் ஆதரவும் நல்க வேண்டும். அதுவே இன்றைய தேவையாகும்.

 

The post பொருளாதார மேம்பாட்டுக்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் appeared first on Thinakaran.

“}]]Read More 

​ 

[[{“value”:”  2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு நாடு முகம்கொடுத்தது. அதன் விளைவாக நாடே வங்குரோத்து நிலைக்கு உள்ளானது. அதன் விளைவாக மக்கள் பலவிதமான அசௌகரியங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டனர். அந்த…

[[{“value”:”  2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு நாடு முகம்கொடுத்தது. அதன் விளைவாக நாடே வங்குரோத்து நிலைக்கு உள்ளானது. அதன் விளைவாக மக்கள் பலவிதமான அசௌகரியங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொண்டனர். அந்த…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *