Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
போதையின் வினை 

போதையின் வினை

  • 8

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

ஒரு நாள் இரவு 12 மணி இருக்கும். கர்ப்பிணிப் பெண்ணான சஜிதா தன் குழந்தையை வயிற்றில் சுமந்தபடி அந்த ஒளியில்லா வீட்டில் சுவரோடு சாய்ந்து விளக்கை தன் பக்கத்தில் எரிய வைத்துக்கொண்டு தன் கணவனின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள்.

திடீரென்று தூரத்தில் ஒரு மனிதன் போதையில் உளறிக் கொண்டு வருகின்ற சத்தம் இவள் காதில் கேட்டது. அச் சத்தம் கேட்டதும் தன் கணவன் தான் வருகிறான் என்று தெரிந்து கொண்ட அவள், தன் கணவன் போதையில் வந்து சண்டை போடும்போது பெரிய விபரீதங்கள் ஆகி விடும் என்ற பயத்தில் வீட்டில் இருக்கும் கூரிய ஆயுதங்களை அவள் கணவனுக்கு தெரியாத இடங்களில் ஒளித்து வைத்தாள். பின்னர் சில நிமிடங்கள் கழித்து சஜிதா கதவைத் திற என்று கூறிக்கொண்டு தன் காலால் கதவுக்கு உதைத்தான் அவளுடைய கணவன்.

அச் சத்தத்தைக் கேட்டு சஜிதா தயங்கியபடி பயத்தோடு கதவை மெதுவாகத் திறந்ததும், ஏன் இவ்வளவு நேரமாக கதவைத் திறக்கவில்லை என்று கூறியதோடு பளார் என்று ஒரு அறையும் விழுந்தது அவள் கன்னத்தில். இது போல ஒவ்வொரு நாளும் நடப்பதால் அந்த அறையை அவள் பொருட்படுத்திக் கொள்ளாமல் போதையில் வந்த அவளுடைய கணவனை அன்பாக உள்ளே அழைத்து அவனுக்கு உண்பதற்காக உணவை எடுத்து வைத்துவிட்டு தன் கணவனுக்காக தண்ணீர் எடுத்து வர போகும் பொழுது திடீரென்று என்ன சமையல் செய்து இருக்கிறாய் என்று ஒரு கோபமான குரலுடன் டமார் என்று ஒரு சத்தம் கேட்டது.

உடனே திரும்பிப் பார்த்தாள் அவள் அவளது கணவனுக்காக எடுத்துவைத்த உணவுத் தட்டு அவன் உதைத்த உதையில் அங்கும் இங்குமாக சின்னாபின்னமாகி இருந்தது. உடனே ஏன் இப்படி செய்தீர்கள், உங்களுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா? என்று அவள் அவளது கணவனை பார்த்து கேட்க அவளுடைய கணவன் போதை வெறியுடன் கோபமாக அவளுக்கு அடித்த அடி தவறுதலாக கர்ப்பிணி பெண்ணான குழந்தையை சுமந்து இருக்கின்ற அவளது வயிற்றில் விழுந்தது. என் கடவுளே! என்று சத்தமாக கதறிய நிலையில் அவள் கீழே விழுந்தாள். அவள் கதறிய சத்தத்தைக் கேட்ட அயல் வீட்டாலர்கள் பதறி அடித்த நிலையில் ஓடி வந்து பார்க்கும்போது, ஒருபக்கம் ஒரு ஓரத்தில் சஜிதாவின் கணவன் மது அருந்திக்கொண்டு இருக்கும் நிலையிலும், இன்னொரு பக்கம் சஜிதா இரத்தம் கசிய கசிய அதிக வலியுடன் சிறிது சிறிதாக உயிர் போய்க்கொண்டிருக்கும் நிலையில் தன் வயிற்றில் இருக்கும் பிள்ளையை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று முணுமுணுத்தபடி வலியுடன் துடித்துக் கொண்டிருந்தாள்.

அதைப்பார்த்த அயல்வீட்டு சில பெண்மணிகள் அவளுக்கு பிரசவம் செய்து அவளது குழந்தையை காப்பாற்றவும் அவளை காப்பாற்றவும் முயற்சிகளை செய்தார்கள். ஆனாலும் கடைசியாக அவளது குழந்தையை மட்டும் காப்பாற்ற முடிந்ததே தவிர சஜிதாவை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

*****************

பின்னர் பல மணித்தியாலங்கள் கழித்து போதை தெளிந்த நிலையில் சஜிதாவின் கணவன் எழும்பி பார்க்கும் போது அவனுக்கு வலது பக்கத்தில் சஜிதாவின் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட உயிரில்லா உடலும் அவனுக்கு இடது பக்கத்தில் அழுத வண்ணம் ஒரு சிறு பெண் குழந்தை இருப்பதையும் பார்த்த அவன் சற்று நேரம் திகைத்துப் போனான். பின்னர் அவன் செய்த காரியங்களை நினைத்து நினைத்து கண்களில் கண்ணீர் நிறைந்த வண்ணம் அங்குமிங்குமாக அழுது புலம்பிக் கொண்டிருந்தான்.

பின்னர் சற்று நேரம் கழித்து மாலைப்பொழுதில் அவனது மனைவியின் உடல் தகனம் செய்யப்பட்டது. பின்னர் பல மணித்தியாலங்கள் கழித்து அவனது கவலைகளை மறப்பதற்காக வேண்டி மதுவை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து பார்க்கும் பொழுது, அவனது அந்தப் பச்சைக் குழந்தை சத்தமாக அழுது கொண்டிருந்தது. அதைப் பார்த்த அவனுக்கு கண்களில் கண்ணீர் ஆறு போல வழிந்தோடியது. தாங்க முடியாத கவலை கொண்ட அவன் கோபத்தில் அவன் வாங்கி வந்த அந்த மது போத்தலை வெளியே இருந்த ஒரு கல்லில் ஓங்கி அடித்தான். அன்றிலிருந்து அவன் மதுவை விட்டுவிட்டு தன் குழந்தைக்காக வேண்டி திருந்தி வாழ்வதற்கு முடிவு செய்தான்.

****************

சில வருடங்கள் கழிந்தது. அவனது மகளுக்கு வயது 19 ஆகியது. அவன் அவனது மகளோடு அன்பாக மகிழ்ச்சியாக தன் தவறை உணர்ந்து திருந்திய நிலையில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனாலும் தன் மகளுக்கு ஒரு தாயின் வளர்ப்பு, தாயின் பாசம், தாயின் கண்டிப்பு, தாயின் அறிவுரை, கிடைக்கவில்லையே என்ற கவலை அவன் மனதை வதைத்துக் கொண்டே இருந்தது.

சில நாட்கள் கழிந்தது. இவன் ஏதோ ஒரு வேலைக்காக தன் மகளை தனியாக வீட்டிலேயே விட்டுவிட்டு வெளியூர் சென்றிருந்தான். பின்னர் சில நாட்கள் கழித்து தன் வீட்டுக்குத் திரும்பி வந்து வீட்டுக்குள் நுழையும் நேரத்தில் வீட்டின் வெளிப்பக்கத்தில் ஒரு ஆணின் செருப்பு இருப்பதை கவனித்தான். அதைப் பார்த்த அவனுக்கு பல யோசனைகள் அவனது தலையில் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்தன.

பின்னர் எந்தவித சத்தமும் இல்லாமல் கதவை மெதுவாகத் திறந்து பார்த்த அவனுக்கு ஒரு மாபெரும் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அவனது மகளும் ஒரு முகம் தெரியாத ஆணும் கேவலமான ஒரு உறவு முறையில் உல்லாசமாக இருந்ததை கண்ட அவனுக்கு சற்றுநேரம் மதிமயங்கி போனது.

ஒரு தந்தையாக இதைக் கண்டதும் அவனுக்கு கோபம் அதிகரித்ததால் அவனது மகளை அடித்தது மட்டுமல்லாமல், அவளோடு இருந்த அந்த ஆணையும் அடித்து விரட்டினான். பின்னர் பல மணி நேரங்களாக அவனுக்கும் அவனது மகளுக்கும் வாக்குவாதங்கள், சண்டைகள் நடந்து கொண்டே இருந்தது. ஆனால் எந்தவித பலனும் கிடைக்கவில்லை. அதன் பின்னர் இந்தக் கவலைகளை மனதில் சுமந்தபடி சுவரில் சேர்ந்து யோசித்துக்கொண்டிருந்த அவன் அவனை அறியாமலேயே உறக்கம் அடைந்துவிட்டான்.

*********************

பின்னர் அவன் காலைப்பொழுதில் எழும்பி பார்க்கும் போது அவனது பக்கத்தில் ஏதோ ஒன்று எழுதியுள்ள காகிதம் ஒன்றை கண்டான். அதை எடுத்து வாசித்த அவனுக்கு ஒரு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அக் காகிதத்தில் என் தந்தையே என்னை மறந்துவிடு, நான் அவனோடு தான் வாழ போகிறேன், என்னை நீ தேடி அலைய வேண்டாம், இனிமேல் நீ என்னை கூப்பிட்டாலும் நான் வரப் போவதில்லை, இனிமேல் நீ யாரோ நான் யாரோ, தயவு செய்து என்னை தொந்தரவு பண்ணாதே! என்று எழுதி இருந்தது. அதைப் பார்த்த அவனுக்கு அவன் நெஞ்சில் கத்தியால் குத்தியது போல் இருந்தது. அதுமட்டுமல்லாமல் ஊர் மக்கள் அனைவரும் ஒரு பெண் பிள்ளையை வளர்ப்பதற்கு துப்பில்லை, அவன் எல்லாம் ஒரு ஆம்பிளையா, அவனது மனைவியை கொண்டதும் அவன் தானே என்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது அவனுக்கு இன்னும் இன்னும் வலிகள் கவலைகள் நிறைந்ததே தவிர, ஆறுதல் எதுவும் கிடைக்கவில்லை.

இதை யோசித்து யோசித்து கடைசி இது எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம் என் போதைப்பழக்கம் தான் காரணம் என்று நினைத்த அவனுக்கு கடைசியாக தற்கொலையைத் தவிர வேறு எதுவும் தீர்வாக அமைய வில்லை. அதி காலைப் பொழுதில் என் தந்தையே என்று கதறி அழுத சத்தத்தை கேட்டு அயலவர்கள் அவனது வீட்டிற்கு சென்று பார்க்கும் பொழுது அவனது கழுத்தில் ஒரு கயிறு மாட்டிய நிலையில் வீட்டின் நடுவில் உயிரிழந்து தொங்கிக் கொண்டிருந்த அவனின் காலை பிடித்துக்கொண்டு அவனது மகள் அழுது கொண்டு இருந்தாள்.

Fasool Muhammadh Fasroon
Kekirawa, Udanidigama

ஒரு நாள் இரவு 12 மணி இருக்கும். கர்ப்பிணிப் பெண்ணான சஜிதா தன் குழந்தையை வயிற்றில் சுமந்தபடி அந்த ஒளியில்லா வீட்டில் சுவரோடு சாய்ந்து விளக்கை தன் பக்கத்தில் எரிய வைத்துக்கொண்டு தன் கணவனின்…

ஒரு நாள் இரவு 12 மணி இருக்கும். கர்ப்பிணிப் பெண்ணான சஜிதா தன் குழந்தையை வயிற்றில் சுமந்தபடி அந்த ஒளியில்லா வீட்டில் சுவரோடு சாய்ந்து விளக்கை தன் பக்கத்தில் எரிய வைத்துக்கொண்டு தன் கணவனின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *