Deprecated: Creation of dynamic property InsertPostAds::$plugin is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 36
போதை தரும் Facebook 

போதை தரும் Facebook

  • 10

Deprecated: Creation of dynamic property InsertPostAds::$settings is deprecated in /home/youthcey/public_html/wp-content/plugins/insert-post-ads/insert-post-ads.php on line 425

நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியரும் “Irresistible: The Rise of Addictive Technology and the Business of Keeping Us Hooked” என்ற புத்தகத்தின் ஆசியருமான அடம் ஆல்டர் பேஸ்புக் போன்ற சமூக வளைத்தளங்களில் எமது பதிவை ஒருவர் லைக் செய்யும் போது எமது மூளைக்கு என்ன நடக்கின்றது என்பதனை பற்றி பின்வருமாறு கூறுகின்றார்.

“நீங்கள் ஒரு போதைப்பொருளை பயன்படுத்தும் போது¸ மதுபானம் அருந்தும் போது, புகைப்பிடிக்கும் போது அல்லது சமூக வளைத்தளத்தில் ஒரு லைக் பெறும் போது¸ இத்தகைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் டோபமைன் எனப்படும் ஹோர்மோன் எமது உடலில் வெளிப்படுகின்றது. இந்த டோபமைன் ஹோர்மோன் எமது சந்தோசத்தோடு தொடர்புடையது.

எனவே பேஸ்புக்கில் உள்ள உமது பதிவிற்கு அல்லது நீங்கள் பகிரும் ஏதோ ஒன்றிற்கு ஒருவர் இடும் லைக் ஆனது ஒரு சிறிதளவு போதைப்பொருளினை எடுத்துக்கொள்வதற்கு ஒப்பானது. மனித மூளையைப் பொறுத்தளவில் இவை இரண்டும் சமாந்தரமான செயற்பாடுகளே. அத்தோடு உங்களுடைய பதிவிற்கு நீங்கள் எத்தனை லைக்குகள் பெறப்போகின்றீர்கள் என்பது உறுதியற்றதொன்று. அத்தகைய ஸ்தீரமற்ற ஒரு தன்மையே எம்மை அதற்கு அடிமையாக்குகின்றது. மாற்றமாக ஒவ்வொருமுறை நீங்கள் பதிவிடும் பதிவிற்கும் நீங்கள் 100 லைக்குகள் பெறுவீர்கள் என்று உங்களுக்கு முன்கூட்டியே தெரிந்தால் உங்களுக்கு பேஸ்புக் மிக விரைவில் அலுப்பூட்டக்கூடியதாக மாறிவிடும்.

சமூக வளைத்தளங்களின் மற்றுமொரு மறை முகம் யாதெனில்¸ இங்கு எல்லோரும் தமது வாழ்வின் சிறப்பான பக்கங்களையே காட்சிப்படுத்த முயற்சிக்கின்றனர். தமது முகத்தினை பதிவேற்றுவதற்கு முன் 100¸000 தடவைகளுக்கு அதிகமாக ஒரே போட்டோக்களை எடுத்து அவற்றில் சிறந்ததையே பதிவேற்றுகின்றனர். அவ்வாறெனில் ஒவ்வொரு முறை நீங்கள் ஒருவரின் பதிவைப் பார்க்கும் போது அவர்களின் வாழ்வின் மிகச் சிறந்த அம்சங்களையே பார்க்கின்றீர்கள். இத்தகைய நிலை உமது பிரச்சினைகள் நிறைந்த வாழ்க்கை மிக மோசமான கட்டத்தில் இருப்பதாக உங்களை நம்பச்செய்துவிடுகின்றது. மற்றவர்களின் வாழ்வின் சிறப்பான தருனங்களை தினம் தினம் அவதானிக்கும் உங்களது வாழ்க்கை கால ஓட்டத்தில் உமக்கு பிடிப்பற்றதாக மாறிவிடுகின்றது.”

தமிழில் : சர்ஜூன் தௌபீக்
மூலம் : www.businessinsider.com


Advertising that works - yX Media Monetize your website traffic with yX Media


நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியரும் “Irresistible: The Rise of Addictive Technology and the Business of Keeping Us Hooked” என்ற புத்தகத்தின் ஆசியருமான அடம் ஆல்டர் பேஸ்புக் போன்ற சமூக வளைத்தளங்களில்…

நியூயார்க் பல்கலைக்கழக பேராசிரியரும் “Irresistible: The Rise of Addictive Technology and the Business of Keeping Us Hooked” என்ற புத்தகத்தின் ஆசியருமான அடம் ஆல்டர் பேஸ்புக் போன்ற சமூக வளைத்தளங்களில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *